ஐரோப்பா செய்தி

ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் லண்டனில் தீவிரமடையும் கல்வி நெருக்கடி!

  • May 28, 2026
  • 0 Comments

கிழக்கு லண்டனின் Waltham Forest பெருநகரப் பகுதியில் உள்ள பள்ளிகளில் தேசிய கல்விச் சங்கம் (NEU) மேற்கொண்டு வரும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்கள் காரணமாக, பெற்றோர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து இருவேறு கருத்துகள் உருவாகியுள்ளன. கடந்த வாரம் வால்தம்ஸ்டோ நகரில் உள்ள South Grove ஆரம்பப் பள்ளி , ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் மூடப்பட்டது. பள்ளிகளில் மேற்கொள்ளப்படவுள்ள கட்டமைப்பு மறுசீரமைப்பு காரணமாகப் பலருக்கு வேலை இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, சிறப்புத் தேவையுடைய (Special Educational […]

ஐரோப்பா

மிதமிஞ்சிய வெப்பம் : தடை செய்யப்பட்ட நீர்நிலைகளை நாடும் பிரான்ஸ் மக்கள்!

  • May 28, 2026
  • 0 Comments

பிரான்ஸில் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக சுமார் 09 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்  நீந்துவதற்கு நீண்டகாலமாக தடைவிதிக்கப்பட்டிருந்த செயிண்ட்-மார்ட்டின் கால்வாய்க்கு மக்கள் கூட்டம் கூட்டமாக திரள்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்து சென்று, பாதுகாப்பு விதிகள் குறித்த நினைவூட்டல்களை வழங்கியுள்ளனர். இருப்பினும் காவல்துறையினரின் அறிவுறுத்தலையும் புறக்கணித்து அங்கு ஏராளமானோர் நீரில் இறங்கி குளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பா முழுவதும் சக்திவாய்ந்த வெப்ப குவிமாடம் சூழ்ந்துள்ளமையினால்   பல இடங்களில் உச்சபட்ச வெப்பநிலை […]

இலங்கை செய்தி

ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ரஷ்யா, இலங்கை பேச்சு!

  • May 28, 2026
  • 0 Comments

ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேட்கொண்டுள்ள இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா , ரஷ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளரும் ரஷ்ய அரச ஆலோசகருமான   Aleksander Nikolayevich Venediktov வை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். மே 26 முதல் 29 வரை மாஸ்கோவில் நடைபெற்று வரும் முதலாவது சர்வதேச பாதுகாப்பு மாநாடு மற்றும் பாதுகாப்பு விடயங்களுக்கான உயர்மட்ட பிரதிநிதிகளின் வருடாந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள பாதுகாப்பு செயலாளர் அங்கு விஜயம் செய்துள்ள நிலையில் […]

உலகம் செய்தி

முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்குமாறு ஈரான் மீண்டும் வலியுறுத்து!

  • May 28, 2026
  • 0 Comments

அமெரிக்காவால் முடக்கப்பட்ட தமது நாட்டின் சொத்துகள் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளர் Ali Bagheri Kani, மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்தப் பணத்தை மீட்பது ஈரானிய மக்களின் சட்டப்பூர்வ உரிமை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ள நிலையிலேயே, ஈரான் தரப்பில் இருந்து மேற்படி கோரிக்கை எழுந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றமான […]

உலகம் செய்தி

ஈரான் போர் எதிரொலி: உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு நெருக்கடி!

  • May 28, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு நெருக்கடியை தூண்டியுள்ளதாக சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் (IEA) பாத்திஹ் பிரோல் Fatih Birol எச்சரித்துள்ளார். இந்நிலைமையானது நாடுகளைத் தங்களின் முதலீட்டு உத்திகளை மாற்றியமைக்கவும், உள்நாட்டு வளங்களை நோக்கி நகரவும் கட்டாயப்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்த போதிலும், எண்ணெய் துறையிலான முதலீடுகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த உலகளாவிய எரிசக்தி முதலீடு 2026-ஆம் ஆண்டில் 3.4 டிரில்லியன் டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

இலங்கை

சிறை கைதியுடன் தொலைபேசி உரையாடல்!! முஜிபுர் ரஹ்மானிடம் விசாரணை!

  • May 28, 2026
  • 0 Comments

கண்டி – போகம்பரை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள  கைதி ஒருவருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுமார் 53 தடவைகள் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினர் அவரிடம் சுமார் 04 மணிநேரம் வாக்குமூலம் பெற்றதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் பாரதூரமான குற்றங்கள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.  

அரசியல் இலங்கை செய்தி

ஜனநாயக விரோதச் செயல்: அரசுமீது ஜீவன் கடும் காட்டம்!

  • May 28, 2026
  • 0 Comments

மக்களின் நிலைப்பாட்டை அறிவதற்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு , “ மாகாணசபைத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்படாது என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். இது அவரின் தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சரி. ஆனால் அரசாங்கத்தின் முடிவாக இருந்தால் அது ஜனநாயகத்துக்கு முரணான செயலாகும். தேர்தல் தொடர்பில் எவரும் கருத்து கூறலாம். ஆனால் முடிவெடுக்கும் […]

உலகம்

பந்தர் அப்பாஸ் துறைமுகம் மீதான தாக்குதல் எதிரொலி – எண்ணெய் விலை உயர்வு!

  • May 28, 2026
  • 0 Comments

ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. அதன்படி, கச்சா எண்ணெய் விலை மீண்டும் 3 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 3.75 சதவீதம் அதிகரித்து, 97.8 டொலராக அதிகரித்துள்ளது. அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராகி வந்த வேளையில், இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் ஒரு மோதல் சூழல் […]

ஐரோப்பா செய்தி

அமெரிக்காவைச் சார்ந்திருந்த கொள்கையில் திருப்பம்: பிரான்சுடன் கைகோர்க்கும் நோர்வே!

  • May 28, 2026
  • 0 Comments

நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் புதிய பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதன் மூலம் தங்களின் ராணுவ உறவை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளன. அமெரிக்காவின் பாதுகாப்பு ஆதரவை மட்டும் நம்பியிருக்காமல், ஐரோப்பாவின் தன்னாட்சி அதிகாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பிரான்ஸின் அணுசக்தி பாதுகாப்பு வளையத்தில் இணைய நோர்வே சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பிரான்ஸின் அணுஆயுத உத்திகளில் நோர்வே முக்கியப் பங்காற்றும், அதேவேளை அமைதிக்காலத்தில் அந்நாட்டின் நிலப்பரப்பில் அணுஆயுதங்கள் எதுவும் நிலைநிறுத்தப்படாது. ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் சூழலில், போலந்து மற்றும் […]

இலங்கை

நாட்டின் 75 ஆண்டுகால சாபமே ஜே.வி.பிதான் – ராஜித்த சேனாரத்ன கடும் விமர்சனம்!

  • May 28, 2026
  • 0 Comments

மாகாண சபை தேர்தல் முறைமைக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி நாடு முழுவதும் தீவைக்கும் சம்பவங்களில் ஈடுபட்டதே ஜே.வி.பிதான் என முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஆரம்பகால அதிகாரப் பகிர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஜே.வி.பியினர் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார். அத்துடன் விடுதலை புலிகள் அமைப்பு தலதா மாளிகைக்கு முதலாவதாக தாக்குதல் நடத்தவில்லை. ஜே.வி.பி தான் […]