ஐரோப்பா

மிதமிஞ்சிய வெப்பம் : தடை செய்யப்பட்ட நீர்நிலைகளை நாடும் பிரான்ஸ் மக்கள்!

பிரான்ஸில் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக சுமார் 09 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்  நீந்துவதற்கு நீண்டகாலமாக தடைவிதிக்கப்பட்டிருந்த செயிண்ட்-மார்ட்டின் கால்வாய்க்கு மக்கள் கூட்டம் கூட்டமாக திரள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்து சென்று, பாதுகாப்பு விதிகள் குறித்த நினைவூட்டல்களை வழங்கியுள்ளனர்.

இருப்பினும் காவல்துறையினரின் அறிவுறுத்தலையும் புறக்கணித்து அங்கு ஏராளமானோர் நீரில் இறங்கி குளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பா முழுவதும் சக்திவாய்ந்த வெப்ப குவிமாடம் சூழ்ந்துள்ளமையினால்   பல இடங்களில் உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது

குறிப்பாக பிரான்ஸின் யோனில் வெப்பநிலை 34° செல்சியஸும்,  துலூஸில் 32°செல்சியஸும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!