இலங்கை செய்தி

ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ரஷ்யா, இலங்கை பேச்சு!

ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேட்கொண்டுள்ள இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா , ரஷ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளரும் ரஷ்ய அரச ஆலோசகருமான   Aleksander Nikolayevich Venediktov வை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

மே 26 முதல் 29 வரை மாஸ்கோவில் நடைபெற்று வரும் முதலாவது சர்வதேச பாதுகாப்பு மாநாடு மற்றும் பாதுகாப்பு விடயங்களுக்கான உயர்மட்ட பிரதிநிதிகளின் வருடாந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள பாதுகாப்பு செயலாளர் அங்கு விஜயம் செய்துள்ள நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் ரஷ்ய ஆயுதப்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மையமாகக் கொண்டு, பரஸ்பர நலன் வாய்ந்த இருதரப்பு முக்கியத்துவம்மிக்க விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

பாதுகாப்பு, பாதுகாப்புத் துறை மற்றும் இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் நீண்டகால பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்தல் குறித்தும் கலந்துரையாடபட்டது.

அத்துடன், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இராணுவ ஒத்துழைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய முயற்சிகள் மூலம் இலங்கை பயனடையும் வாய்ப்புகள் குறித்தும், இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர ஈடுபாட்டை மேம்படுத்துவது குறித்தும் பாதுகாப்பு செயலாளரும் , Venediktov வும் விரிவாக கலந்துரையாடினர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!