ஈரான் போர் எதிரொலி: உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு நெருக்கடி!
ஈரான்மீதான போர் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு நெருக்கடியை தூண்டியுள்ளதாக சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் (IEA) பாத்திஹ் பிரோல் Fatih Birol எச்சரித்துள்ளார்.
இந்நிலைமையானது நாடுகளைத் தங்களின் முதலீட்டு உத்திகளை மாற்றியமைக்கவும், உள்நாட்டு வளங்களை நோக்கி நகரவும் கட்டாயப்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்த போதிலும், எண்ணெய் துறையிலான முதலீடுகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒட்டுமொத்த உலகளாவிய எரிசக்தி முதலீடு 2026-ஆம் ஆண்டில் 3.4 டிரில்லியன் டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய மாற்றங்கள் 1970-களின் எண்ணெய் துறையில் ஏற்படுத்திய தாக்கத்தை போன்ற ஒரு பெரிய மாற்றத்தை உலக சந்தையில் ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.




