உலகம் செய்தி

யேமன் கடற்கரையில் எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டது – ஆயுதமேந்திய நபர்கள் தாக்குதல்

  • May 2, 2026
  • 0 Comments

யேமன் நாட்டின் ஷப்வா (Shabwa) மாகாணக் கடற்கரைக்கு அருகில், அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்கள் எம்/டி யுரேகா (MT Eureka) என்ற எண்ணெய் கப்பலைக் கைப்பற்றியுள்ளதாக யேமன் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. தாக்குதலாளர்கள் கப்பலில் ஏறி அதன் கட்டுப்பாட்டைப் பெற்ற பின்னர், அதை ஏடன் வளைகுடா  வழியாக சோமாலியா (Somalia) கடற்பகுதி நோக்கி செலுத்திச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பாக, முக்கல்லா (Mukalla) துறைமுகத்திலிருந்து சுமார் 84 கடல் மைல்கள் தென்மேற்கே, ஒரு “பச்சை நிறப் […]

உலகம் செய்தி

விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது – ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

  • May 2, 2026
  • 0 Comments

போர் பதற்றத்தைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நீக்கப்பட்டதையடுத்து, விமானப் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை முழுமையாக மதிப்பீடு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தொடர்புபட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானப் போக்குவரத்தின் மிக உயர்ந்த பாதுகாப்பு தரத்தை உறுதி செய்வதற்காக, தொடர்ச்சியான நிகழ்நேர […]

உலகம் செய்தி

மாலியில் இராணுவத் தளத் தாக்குதல் – இராணுவ வீரர்கள் மீது விசாரணை தீவிரம்

  • May 2, 2026
  • 0 Comments

மாலி (Mali) நாட்டில் கடந்த வாரம் பல இராணுவத் தளங்கள் மீது ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இராணுவ வீரர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதல்களுக்கு அல்கொய்தா (Al-Qaeda) தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமின் (JNIM) அமைப்பும், பிரிவினைவாதக் குழுக்களும் பொறுப்பேற்றுள்ளன. தலைநகர் பமாகோ (Bamako) அருகிலுள்ள இராணுவ நீதிமன்ற அரசு வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில், பணியில் உள்ள மூன்று இராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற ஒருவர் மற்றும் தாக்குதலில் கொல்லப்பட்ட […]

உலகம் செய்தி

அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு முன் ஹோர்முஸ் திறப்பு – ஈரான் புதிய முன்மொழிவு

  • May 2, 2026
  • 0 Comments

அணுசக்தி பேச்சுவார்த்தைகளை பின்னர் நடத்தி, முதலில் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தைத் திறப்பதற்கான முன்மொழிவை ஈரான் வைத்துள்ளதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்துக்கு பெயர் குறிப்பிடாமல் கருத்து தெரிவித்த அந்த அதிகாரி, அமெரிக்கா ஈரான் மீதான முற்றுகை மற்றும் தடைகளை தளர்த்த வேண்டும் என்பதும், அதே நேரத்தில் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் பின்னர் நடைபெற வேண்டும் என்பதும் இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என அவர் தெரிவித்தார். […]

உலகம்

”தாய்நாட்டை பாதுகாப்போம்” : கியூப மக்கள் முழுக்கம்!

  • May 2, 2026
  • 0 Comments

கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், புதிய தடைகள் “கூட்டுத் தண்டனைக்கு” சமம் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஹவானாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே நேற்று நடைபெற்ற மாபெரும் பேரணியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பேரணியில் தாய்நாட்டை பாதுகாப்போம் என்ற முழக்கங்களும் எதிரொலித்தன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை பதவியிலிருந்து நீக்கிய பின்னர், ஹவானா மீது மேலும் அழுத்தம் கொடுக்கும் நோக்கில், ட்ரம்ப் பொருளாதார தடைகளை அறிவித்தார். […]

உலகம் செய்தி

அடங்க மறுக்கும் இஸ்ரேல்: காசாவில் ஊழித்தாண்டவம்!

  • May 2, 2026
  • 0 Comments

போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது. கடந்த 24 மணிநேரத்துக்குள் இஸ்ரேல் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசாமீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் கடந்த 2025 ஒக்டோபரில் போர்நிறுத்த ஏற்படுத்தப்பட்டது. எனினும், இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது. இஸ்ரேலின் தாக்குதல்களால் இதுவரையில் 72, 600 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான இந்த வன்முறைச் சம்பவங்கள் அப்பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம்

ஈரான் அணுவாயுதத்தை விரைவில் பயன்படுத்தும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான் இஸ்ரேல், மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக விரைவில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். புளோரிடாவில் நடந்த பேரணி ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஈரானை வழிநடத்த யாரும் விரும்பவில்லை என்றும், அமெரிக்க இராணுவம் அதன் தலைமைத்துவத்தின் பல அடுக்குகளை ஒழித்துவிட்டதால் பேச்சுவார்த்தைகள் கடினமாகிவிட்டன என்றும் அவர் கூறினார். அமெரிக்கா ஈரானை விட்டு வெளியேறக்கூடும், ஆனால் ஒரு முழுமையான […]

இலங்கை செய்தி

செம்மணி புதைகுழியில் மேலும் 2 எலும்புக்கூடுகள் அடையாளம்!

  • May 2, 2026
  • 0 Comments

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஆறாம் நாளான இன்று சனிக்கிழமை, மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்று அடையாளம் காணப்பட்ட இரண்டு எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, செம்மணிப் புதைகுழியில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 246 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்டவற்றில் இதுவரை 243 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் மூன்று எலும்புக்கூடுகள் இன்று முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்துக்கிடமான […]

இலங்கை செய்தி

இலங்கையில் பாரியளவான இணையவழி மோசடி- 37 சீனர்கள் கைது

  • May 2, 2026
  • 0 Comments

இணையதளத்தை பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படைப்பிரிவு மற்றும் தலங்கம பொலிஸாரின் ஊழல் ஒழிப்புப் பிரிவு என்பன இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கம, கொஸ்வத்தை பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போது அங்கு 35 கணினிகள், 37 டெப் கணினிகள், 147 கையடக்கத்தொலைபேசிகள், 100 சிம் அட்டைகள் […]

இந்தியா முக்கிய செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் : கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகிக்கும் தி.மு.க!

  • May 2, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் நான்காம் திகத   வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்படுகிறது. முன்னதாக மும்முனைப் போட்டியாக இருந்த தேர்தல் களம் இம்முறை நான்கு முனை போட்டியாக இருந்தது பிரபல நடிகரான ஜோசப் விஜய் இம்முறை முக்கிய போட்டியாளராக பார்க்கப்படுகிறார். விஜயின் அரசியல் பிரவேசம் மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியை சீர்குலைத்துள்ளது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி […]