இலங்கை செய்தி

வவுனியா மாநரசபையில் நிர்வாக் சீர்கேடு: ஆளுநர் பிறப்பித்துள்ள உத்தரவு!

  • April 28, 2026
  • 0 Comments

வவுனியா மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில், ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். மக்களின் வரிப்பணத்தை முறையற்ற வகையில் கையாள்வதைத் தடுக்கும் நோக்கில், சர்ச்சைக்குரிய வேலைத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்துமாறும், சட்டவிரோத வரி அறவீடுகளைக் கைவிடுமாறும் ஆளுநர் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாக உள்ளூராட்சி ஆணையாளரால் வவுனியா மாநகர சபை ஆணையாளருக்குக் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா […]

இலங்கை செய்தி

யாழில் தீக்கிரையானது “தபோவனம்”: நூல்களும் எரிந்து நாசம்!

  • April 28, 2026
  • 0 Comments

யாழ். அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் “தபோவனம்” சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. விசமிகளால் அல்லது மின் ஒழுக்கால் எரியுண்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த “தபோவனத்தின்” பிரதான மண்டபம் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் பல பெறுமதி மிக்க நூல்களும் தளபாடங்களும் எரிந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வைத்தியர் தயா சோமசுந்தரத்தால் பிரதேச சிறுவர்களின் நலன் கருதி குறித்த நிறுவனம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் முன்பள்ளி சிறுவர்கள் முதல் தரம் 11 வரையான 90 க்கும் அதிகமான மாணவர்கள் கற்றல் விளையாட்டு […]

செய்தி

பதவியிலிருந்து விலக ஷம்மி சில்வா தீர்மானம்

  • April 28, 2026
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இன்று (28) பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவராகப் பணியாற்றி வரும் ஷம்மி சில்வா, பொறுப்புவாய்ந்த தரப்பினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கவே இந்தப் பதவியை விட்டு விலகவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ஷம்மி சில்வா தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகம் குறித்து கிரிக்கெட் இரசிகர்கள் […]

செய்தி

பிராந்திய மோதல்கள் அனைத்தும் பேச்சுவார்த்தையால் தீர்க்கப்பட வேண்டும் – கட்டார் வலியுறுத்தல்

  • April 28, 2026
  • 0 Comments

பிராந்தியத்தில் உருவாகும் எந்தவொரு மோதலும் பேச்சுவார்த்தையில் தீர்க்கப்பட வேண்டும் என்று கட்டார் (Qatar) வலியுறுத்தியுள்ளது. கட்டாரின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், தற்போதைய பிரச்சினை மத்தியஸ்தருடன் தொடர்புடையதல்ல என்றும், பாகிஸ்தான் (Pakistan) தனது மத்தியஸ்தப் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளுடனும் கட்டார் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். மத்தியஸ்தராக செயல்படும் பாகிஸ்தானின் முயற்சிக்கு முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். […]

செய்தி

போரால் ஜெட் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் – ஸ்வீடன் எச்சரிக்கை

  • April 28, 2026
  • 0 Comments

போர்நிலை காரணமாக ஜெட் எரிபொருள் (Jet Fuel) பற்றாக்குறை உருவாகக்கூடும் என ஸ்வீடன் (Sweden) அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்வீடனின் எரிசக்தி அமைச்சர் எப்பா புஷ் (Ebba Busch) இதனைத் தெரிவித்துள்ளார். மிக மோசமான சூழ்நிலை ஏற்பட்டால், ஸ்வீடனில் விமான எரிபொருளுக்குப் பங்கீட்டு முறை அமுல்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், எதிர்கால சந்தை நிலைமையைப் பொறுத்தே தீர்மானம் மேற்கொள்ள முடியும் என எரிசக்தி முகமையின் பொது இயக்குநர் கரோலின் அசெரப் (Caroline Asserup) தெரிவித்துள்ளார்.

செய்தி

தமிழகத்தில் தாக்கப்பட்ட இலங்கை மீனவர் – வன்மையாக கண்டித்த நாமல்

  • April 28, 2026
  • 0 Comments

தமிழகத்தில் இலங்கை மீனவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டமையை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வன்மையாகக் கண்டித்துள்ளார். இந்த சம்பவம் மிகவும் கவலையளிப்பதாகவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். உள்ளூர் காவல்துறையினர் முன்னிலையில் , தமிழக மீனவர்களால் அந்த மீனவர் தாக்கப்பட்டதாகக் கூறிய நாமல், அவரது உடனடிப் பாதுகாப்பை உறுதிசெய்து, அவரை விரைவாகத் தாயகம் திரும்புவதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார். […]

செய்தி

ஈரானுடன் இணைந்து சதி செய்ததாக குற்றச்சாட்டு- பஹ்ரைனில் ஐவருக்கு ஆயுள் தண்டனை

  • April 28, 2026
  • 0 Comments

ஈரானுடன் (Iran) இணைந்து பயங்கரவாத மற்றும் விரோதச் செயல்களில் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஐவருக்கு பஹ்ரைன் (Bahrain) நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பஹ்ரைனின் அரசு வழக்கறிஞர் வெளியிட்ட தகவலின்படி, இரண்டு ஆப்கானிஸ்தான் (Afghanistan) நாட்டினரும், மூன்று பஹ்ரைன் குடிமக்களும் இந்த தண்டனை பெற்றுள்ளனர். தேசிய பாதுகாப்பை பாதிக்கும் வகையில், பஹ்ரைன் இராச்சியத்திற்கு எதிரான வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு கொள்வது மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், பஹ்ரைனுக்கு எதிரான ஈரானின் […]

செய்தி

திருச்செந்தூரைத் தொடர்ந்து சீரடி செல்லும் விஜய்..

  • April 28, 2026
  • 0 Comments

தவெக தலைவர் விஜய் இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். இதன்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 23 ஆம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. முதன்முறையாக இந்த தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியது தவெக. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு நகங்களில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். […]

உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் 9 வயது சிறுவன் பலி: காசாவில் தொடரும் சோகம்!

  • April 28, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 வயது சிறுவர் ஒருவர் பலியாகியுள்ளார். தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியிலேயே இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்தன. மேலும், வடக்கு காசாவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கித் தாக்குதலில் பெண் ஒருவர் படு காயமடைந்துள்ளார். காசாவில் போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது. போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 818 வரையான […]

இலங்கை செய்தி

ஊடகர் சிவராமின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

  • April 28, 2026
  • 0 Comments

கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் 21வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (28) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபியில் மட்டக்களப்பு ஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவை இணைந்து இந்த நினைவஞ்சலியினை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் படுகொலை செய்யப்பட்ட […]

error: Content is protected !!