இலங்கை

இலங்கையில் திடீரென அதிகரித்த தங்கவிலை!

  • March 30, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்தைப் பதிவு செய்து வருகிறது. இலங்கையில்  3,000 ரூபாயால் தங்கவிலை அதிகரித்துள்ளது. அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி தமிழ்நாடு

பிரச்சாரத்தை முடக்க சதி திட்டம் தீட்டப்படுவதாக விஜய் ஆதங்கம்

  • March 30, 2026
  • 0 Comments

தனக்கு அனுமதி மறுத்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக திறந்தவெளி வாகன பிரச்சாரத்திற்கு அனுமதியளித்திருப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயலாகும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கண்டனம் வெளியிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார். பிரச்சாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும் பொலிஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதல் இல்லையென்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார் இதனால் தனது பிரச்சார வாகனம் ஓரிடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு செல்ல இயலாத பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்படுகிறதா என்ற […]

இலங்கை செய்தி

இலங்கையில் மின்சாரக் கட்டணமும் அதிகரிப்பு!

  • March 30, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மேற்படி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இந்த தகவலை வெளியிட்டனர். இதற்கமைய மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரிவுகளுக்கும் 13.56 சதவீத மின் கட்டண உயர்வு கோரப்பட்டிருந்தது. எனினும், பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கம், ஏற்றுமதி வணிகம் உடப்ட […]

இந்தியா தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின், விஜய் வேட்பு மனு தாக்கல்!

  • March 30, 2026
  • 0 Comments

தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தீவிர பரப்புரை முன்னெடுக்கப்பட்டுவருவதால் அரசியல் களம் அனல் கக்குகின்றது. பிரதான கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் இன்று (30) ஆரம்பமாகியுள்ளது. இதற்கமைய கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் M.K. Stalin வேட்புமனுத் தாக்கல் செய்தனர். கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். பெரம்பூர் தொகுதியில் தவெக TVK தலைவர் விஜய்யும் Vijay இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்தத் தொகுதியில் […]

இலங்கை செய்தி

“மொட்டு கட்சி நிறுத்தும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி”

  • March 30, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி நிறுத்தும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி தலைமையகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “எதிரணிக்குரிய பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தம்மால் முடிந்தளவு நிறைவேற்றிவருகின்றது. இலங்கையில் இந்த ஆட்சியின்கீழ் ஜனநாயக உரிமைகள் இல்லாதொழிக்கப்பட்டுவருகின்றன. அடக்குமுறை கையாளப்படுகின்றது. இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும். […]

பொழுதுபோக்கு

TN 2026 தங்க நட்சத்திரம் படத்தின் வெளியீட்டு திகதி

  • March 30, 2026
  • 0 Comments

தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘TN 2026 தங்க நட்சத்திரம்’ என்ற திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தில் நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கத்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உலகம் செய்தி

“கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றினாலும் ஆபத்து நீங்காது”

  • March 30, 2026
  • 0 Comments

கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆசியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இந்நிலையில் ஈரானின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றும் நோக்கில் டொனால்ட் டிரம்ப் விடுத்த அறிக்கை பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை (Kharg Island) ஆக்கிரமிக்க அமெரிக்கா திட்டமிடக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். வெனிசுலாவில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையைப் போல இது எளிதானதாக இருக்காது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த தீவை அமெரிக்கா கைப்பற்றினாலும், ஹோர்முஸ் நீரிணை […]

இலங்கை செய்தி

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பம்!

  • March 30, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு – குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ளதாகக் கருதப்படும் மனிதப் புதைகுழியின் முதற்கட்ட அகழ்வுப் பணிகள், களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரி. பிரதீபன் முன்னிலையில் இன்று (30) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன. கடந்த 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு, கல்முனை ஊடாகக் காத்தான்குடிக்கு வாகனங்களில் பயணித்துக்கொண்டிருந்த முஸ்லிம் மக்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடம் பகுதியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டவர்கள் அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான […]

உலகம் செய்தி

ஈரான் போரில் அமெரிக்காவின் இறுதி இலக்கு என்ன?

  • March 30, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போரில் அமெரிக்காவின் இறுதி இலக்குகள் எவை என்பது தொடர்பில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி Anthony Albanese விளக்கம் கோரியுள்ளார். ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதிலும் அதன் ராணுவ வலிமையைக் குறைப்பதிலும் வெற்றி கிட்டியுள்ளதால் போர் முடிவுக்கு வரவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உலகப் பொருளாதார நலன் கருதி பதற்றத்தைத் தணிக்க விரும்புவதால், அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்புகின்றோம் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, ஈரானின் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் […]

error: Content is protected !!