உலகம் செய்தி

புதிய உச்ச தலைவருக்கு நடந்தது என்ன? ஈரான் விளக்கம்!

  • March 15, 2026
  • 0 Comments

ஈரானின் புதிய உச்ச தலைவர் Mojtaba Khamenei நலமுடன் இருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி Abbas Araghchi தெரிவித்தார். ஈரானின் புதிய உச்ச தலைவர் தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளார் என அமெரிக்கா மற்றும் இஸரேல் என்பன அறிவித்துள்ள நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை, சர்வதேச எரிசக்தி போக்குவரத்திற்கு முக்கிய வழியான ஹார்முஸ் நீரிணை, ஈரானின் எதிரி நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் திறந்தே இருக்கும் எனவும் கூறினார். […]

இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!

  • March 15, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார். எந்த முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவது என்பது குறித்து எதிர்வரும் ஜுன் மாதத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறினார். மாகாணசபைத் தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இவ்வாரம் கூடவுள்ளது. மேற்படி குழுவின் தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார இலக்குகளை நோக்கி செல்லும் போது அநாவசியமான […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய ஈரான் வீராங்கனைகள் தாயகம் திரும்ப திட்டம்!

  • March 15, 2026
  • 0 Comments

ஈரான் நாட்டு பெண்கள் கால்பந்து அணியைச் சேர்ந்த மேலும் மூன்று வீராங்கனைகள், ஆஸ்திரேலியாவில் கோரியிருந்த அரசியல் புகலிட விண்ணப்பங்களை ரத்து செய்துவிட்டு தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளனர். அரசியல் புகலிடம் வழங்கப்பட்ட நிலையில் ஒரு வீராங்கனை தமது முடிவை மாற்றி இருந்த நிலையிலேயே தற்போது மேலும் மூவர் ஈரான் திரும்ப திட்டமிட்டுள்ளனர். இவர்களின் முடிவை ஈரான் அரசாங்கம் வரவேற்றுள்ளது. வீராங்கனைகளின் தேசியப்பற்று மற்றும் தேசபக்திக்கு கிடைத்த வெற்றியெனவும் கூறியுள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பலை அனுப்புகிறதா ஜப்பான்?

  • March 15, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த கோரிக்கை குறித்து ஜப்பான் அரசு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஜப்பானியப் பிரதமர் சனாயே தகாயிச்சி Sanae Takaichi அமெரிக்காவிற்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, இந்த விவகாரம் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்காப்புப் படைகளை அனுப்புவது ஜப்பானுக்குப் பெரிய சவால்களை ஏற்படுத்தும் என்பதால், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு நிலைமையை உன்னிப்பாகக் கவனிக்க அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. ஜப்பானின் வெளியுறவு […]

இலங்கை

போர் பதற்றம் : மீண்டும் QR முறைமை!

  • March 15, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் நாட்டில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு QR Code முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த இலங்கை வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இன்று (15) காலை 6.00 மணி முதல் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது. வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறவில்லை எனில்,   https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தினூடாக தமக்குரிய QR குறியீட்டைப் பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம் என அந்த […]

ஐரோப்பா செய்தி

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு – அமெரிக்காவுடன் கப்பல்கள் அனுப்ப பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு ட்ரம்ப் அழைப்பு

  • March 14, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க அமெரிக்காவுடன் இணைந்து கடற்படைக் கப்பல்களை அனுப்புமாறு பிரித்தானியா மற்றும் பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரான் அந்த பாதையை மூட முயற்சித்தாலும், ஹார்முஸ் நீரிணையை விரைவில் திறந்த, பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான கடற்பாதையாக மாற்றுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பின் தகவல்படி, போர் தொடங்கியதிலிருந்து வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் 16 கப்பல்கள் […]

உலகம் செய்தி

ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலில் உயிரிழப்பு பதிவாகவில்லை

  • March 14, 2026
  • 0 Comments

  அண்மைய ஈரானிய தாக்குதல்களின் இஸ்ரேலில் உயிரிழப்பு பதிவாகவில்லை என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (Israel Defense Forces) தெரிவித்துள்ளன. புதிய தாக்குதல்கள் கண்டறியப்பட்டதால் முன்னதாக மக்கள் பாதுகாப்பு தஞ்சங்களில் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. தற்போது தாக்குதல்கள் முடிந்ததால் மக்கள் தஞ்சங்களில் இருந்து வெளியேறலாம் என்று இராணுவம் அறிவித்துள்ளது. மத்திய இஸ்ரேலில் சில இடங்களில் தேடல் மற்றும் மீட்புப் படைகள் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆரம்ப அறிக்கைகளின்படி உயிரிழப்புகள் அல்லது சிக்கியவர்கள் எவரும் இல்லை என்று தீயணைப்பு மற்றும் […]

அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக கையெழுத்து வேட்டை! கூட்டு எதிரணி புது வியூகம்!!

  • March 14, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே Suresh Saleh கைது செய்யப்பட்டதற்கு கூட்டு எதிரணி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மக்கள் மனுவில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை மஹரகமவில் இன்று ஆரம்பமானது. மஹரகம நகரசபையின் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் இதற்குரிய ஏற்பாட்டை செய்திருந்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எதிரணி அரசியல் பிரமுகர்கள் மற்றும் தேரர்கள் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். சுரேஷ் சாலே கைது […]

உலகம் செய்தி

அமெரிக்க விமானங்கள் அழிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை – ட்ரம்ப்

  • March 14, 2026
  • 0 Comments

சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தில் ஐந்து அமெரிக்க டேங்கர் விமானங்கள் பெருமளவு சேதமடைந்ததாக வெளியான தகவல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார். ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் விமானங்கள் சேதமடைந்ததாக பல ஊடக தளங்கள் ஒரே இரவில் செய்தி வெளியிட்டன, ஆனால் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் தளத்தின் ஒரு பதிவில், சில நாட்களுக்கு முன்பு தளம் தாக்கப்பட்டாலும், விமானங்கள் “தாக்கப்படவில்லை அல்லது அழிக்கப்படவில்லை” என்று கூறுகிறார். ஐந்தில் நான்கு விமானங்களுக்கு எந்த சேதமும் இல்லை […]

இலங்கை செய்தி

அமைச்சர் விஜித மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் இடையே கலந்துரையாடல்

  • March 14, 2026
  • 0 Comments

பிராந்திய முன்னேற்றங்கள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க ஈரானிய வெளியுறவு அமைச்சர் செயித் அப்பாஸ் அரக்ச்சி (Seyed Abbas Araghchi ) வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்துடன் நேற்று மாலை தொலைபேசியில் உரையாடினார். இந்த அழைப்பின் போது, ​​அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக நடத்திய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சமீபத்திய நிலைமை குறித்து அரக்ச்சி இலங்கை அமைச்சருக்கு விளக்கினார். மார்ச் 4 இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து ஈரானிய போர்க்கப்பலான டெனாவின் குழுவினருக்கு உதவுவதில் […]