உலகம்

கார்க் தீவை கைப்பற்றுமா அமெரிக்கா?

  • March 14, 2026
  • 0 Comments

ஈரானிய நிலப்பரப்பில் இருந்து 15 கடல் மைல்கள் (சுமார் 28 கிமீ தொலைவில்) அமைந்துள்ள கார்க் தீவு (Kharg Island), ஈரான் அரசின் மிக முக்கிய பொருளாதார முதுகெலும்பு. ஈரான், அங்கிருந்து 90 சதவீத கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 950 மில்லியன் பீப்பாய்களை ஈரான் ஏற்றுமதி செய்வதாக அல் ஜசீரா தொலைக்காட்சி கூறுகிறது. கார்க் தீவை ஹார்மூஸ் நீரிணையுடன் இணைக்கும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது இதற்காக படையினரையும் கனரக […]

இந்தியா

டெல்லி பறந்தார் விஜய்!

  • March 14, 2026
  • 0 Comments

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று (14) டெல்லி சென்றுள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் கரூரில் பிரசாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் CBI-யினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த வழக்கு தொடர்பாக விஜய் ஏற்கனவே 2 முறை டெல்லியில் உள்ள CBI அலுவலகத்தில் முன்னிலையாகி விளக்கம் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து, நாளை(15) நேரில் முன்னிலையாகுமாறு த.வெ.க. தலைவர் விஜய்க்கு CBI அழைப்பாணை விடுத்திருந்த நிலையில், இன்று அவர் […]

இந்தியா செய்தி

மோதல்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு பாடுபடுகிறது

  • March 14, 2026
  • 0 Comments

உலகளாவிய மோதல்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு பாடுபடுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுவதாகவும் பிரதமர் குற்றம் சுமத்தியுள்ளார். அசாமின் சில்சார் நகரில் நடைபெற்ற அரச நிகழ்வில் 23,550 கோடி ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ‘‘உலகம் முழுவதும் போர்களை எதிர்கொண்டு வரும் நிலையில், நாட்டு […]

உலகம் செய்தி

தீர்க்கமான கட்டத்தை எட்டிவிட்டது போர்: ஈரானின் ஆட்சி மாற்றத்தை வலிறுத்துகிறது இஸ்ரேல்! 

  • March 14, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் தற்போது மிக முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்  Israel Katz தெரிவித்தார். அத்துடன், ஈரானின் எண்ணெய் முனையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அவர் வரவேற்றுள்ளார். ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கண்ணிவெடிகளை அதிகளவில் வைப்பதற்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகின்றது. எனினும், கடல் பகுதியில் வெடிபொருட்களை வைப்பதாக முன்வைக்கப்படும் இத்தகைய குற்றச்சாட்டுகளை ஈரான் தரப்பு க மறுத்துள்ளது. தற்போது ஈரானிய தலைநகர் மற்றும் பிற பகுதிகளில் இஸ்ரேல் […]

உலகம் செய்தி

டுபாயில் உள்ள அபுதாபி துறைமுகப் பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு ஈரான் அவசர எச்சரிக்கை

  • March 14, 2026
  • 0 Comments

டுபாயில் உள்ள அபுதாபி துறைமுகப் பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு ஐக்கிய அரபு அமீரகம் குடியிருப்பாளர்களுக்கு ஈரான் எச்சரித்துள்ளது. டுபாயில் உள்ள ஜெபல் அலி (Jebel Ali) துறைமுகம், அபுதாபியில் உள்ள கலீஃபா (Khalifa) துறைமுகம் மற்றும் புஜைரா (Fujairah) துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் அமெரிக்க படைகள் இருப்பதால், அந்த இடங்கள் இலக்குகளாக மாறலாம் என கூறப்பட்டள்ளது. மேலும் அடுத்த சில மணிநேரங்களில் அந்த […]

இலங்கை செய்தி

03-05 வயது சிறுவர்களுக்கு நிகழ்நிலை வகுப்புகளுக்கு தடை

  • March 14, 2026
  • 0 Comments

03 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு நிகழ்நிலை ஊடாக கல்வி கற்பிப்பது கல்வி உளவியல் கோட்பாடுகள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முறைகளுக்கு முரணானது என பெண் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது முன்பள்ளி மற்றும் ஆரம்பப் பிரிவு மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் நிகழ்நிலை கருத்தரங்குகள் மற்றும் வகுப்புகள் தொடர்பாக பல சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி உளவியல் ரீதியான கருத்துக்களின்படி, 3 முதல் 5 வயது வரையிலான […]

இலங்கை செய்தி

வாள்வெட்டுத் தாக்குதலில் குடும்பஸ்தர் பலி!

  • March 14, 2026
  • 0 Comments

கம்பஹா, கட்டான – மஹா ஹூணுபிட்டிய பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில், வாளால் வெட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் மஹா ஹூணுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், அது மோதலாக மாறியுள்ளது. இதன்போது சந்தேகநபரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் […]

இலங்கை செய்தி

சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜப்பான குழு இலங்கை வருகை!

  • March 14, 2026
  • 0 Comments

இலங்கையின் முன்னணி சுற்றுலா நிறுவனமான Connaissance De Ceylan இன் ஒருங்கிணைப்பின் கீழ் சுற்றுலத்துறையை மேம்படுத்துவதற்காக இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள 11 பேர் கொண்ட ஜப்பான் தூதுக்குழு, இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்தது. இலங்கை மக்களின் வரலாறு, புத்த மதத்தின் வருகை மற்றும் வளர்ச்சி, பாரம்பரிய கலாசாரம், ஆயுர்வேதம், சம்பிரதாயபூர்வ பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், பொருளாதாரப் பயிர்கள் போன்றவற்றை ஆராய்ந்து, அது தொடர்பில் புரிந்து கொள்வதே இந்தக் தூதுக்குழுவின் நோக்கமாகும். அதன் […]

ஐரோப்பா செய்தி

வளைகுடா மோதல் – அதிக வரி செலவுகளைத் தவிர்க்க வேறு நாடுகளில் தங்கியுள்ள பிரித்தானிய செல்வந்தர்கள்

  • March 14, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக தங்கள் நாட்டில் அதிக வரி செலவுகளைத் தவிர்க்க பிரித்தானிய செல்வந்தர்கள் அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீர போன்ற நாடுகளில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வரி மற்றும் சுங்கக் கோரிக்கைகளை எதிர்கொள்வதால், அவர்கள் பிரித்தானியாவுக்கு திரும்பாமல் காத்திருப்பதாக The guardian செய்தி வெளியிட்டுள்ளது. சிலர் “விதிவிலக்கான சூழ்நிலைகள்” விதியின் கீழ் 60 மேலதிக நாட்கள் வழங்கப்படுமா என்பது குறித்து பிரித்தானியாவின் வரி மற்றும் சுங்கத்துறையிடம் வழிகாட்டுதலைக் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐந்து […]

ஐரோப்பா செய்தி

ஈரான் மீதான போர் – உலகளாவிய உணவு விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரிக்கை

  • March 14, 2026
  • 0 Comments

ஈரான் மீதான போர் நீடித்தால், உலகளாவிய உணவு விநியோகம் கடுமையாக பாதிக்கப்படலாம், என நோர்வேயின் யாரா இன்டர்நேஷனல் (Yara International) தலைவர் ஸ்வீன் டோர் ஹோல்செதர் (Svein Tore Holsether) எச்சரித்துள்ளார். நோர்வேயின் யாரா இன்டர்நேஷனல் நிறுவனம் விவசாயத்திற்கு தேவையான உர உற்பத்தி மற்றும் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனத்துக்கு நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா மற்றும் தென் அமெரிக்காவிலும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிலையில் உலகின் ஏழ்மையான சில நாடுகளில் உணவு விலைகள் அதிகரிக்கும் […]