இலங்கை செய்தி

வரிசையை மீறினால் எரிபொருள் வழங்க வேண்டாம் என உத்தரவு

  • March 16, 2026
  • 0 Comments

எரிபொருள் பெறுவதற்காக வரிசையை மீறி வருபவர் எவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். சில சாரதிகள் வரிசையை மீறி எரிபொருள் பெற முயற்சிக்கும் போது அமைதியற்ற சூழல் ஏற்படும் என்றும் தெரிவித்தார். எனவே, வரிசைக்கு புறம்பாக வருபவர்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும், […]

உலகம் செய்தி

அண்டை நாடுகள் போர் குறித்த நிலைப்பாட்டை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் – ஈரான் உத்தரவு

  • March 16, 2026
  • 0 Comments

அண்டை நாடுகள் போர் குறித்த தங்களின் நிலைப்பாட்டை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என ஈரான் (Iran) கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) அரக்சி மேலும் கூறியதாவது, சில அண்டை நாடுகள், அமெரிக்க படைகள் ஈரானில் தாக்குதல்கள் நடத்த அனுமதிப்பதைப்போலவே, அந்த தாக்குதல்களை ஊக்குவிக்கின்றன. ஆகவே அண்டை நாடுகள் போர் குறித்த தங்களின் நிலைப்பாட்டை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்” என்றார். […]

உலகம் செய்தி

இஸ்ரேலில் ஈரானிய ஏவுகணை தாக்குதல் – பல நகரங்கல் சேதம்

  • March 16, 2026
  • 0 Comments

  இஸ்ரேலின் மத்தியப் பகுதியை குறிவைத்து மற்றொரு ஈரானிய ஏவுகணை (Iranian missile) தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் அஷ்கெலோன் (Ashkelon) நகரத்தை மையமாகக் கொண்டு, ஜெருசலேமின் (Jerusalem) மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளையும் பாதித்துள்ளது. இதில் பெட் ஷெமேஷ் (Beit Shemesh) நகரமும் பாதிக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த நகரத்திற்கு அருகே பல விமானத் தளங்கள் மற்றும் முக்கிய மூலோபாயச் சொத்துகள் உள்ளன. மேலும், ரிஷோன் லெசியோன் (Rishon LeZion) மற்றும் பரந்த டெல் அவிவ் […]

இலங்கை செய்தி

அரசாங்க நிகழ்வுகள் இடைநிறுத்தம்: ‘புதன்’ விடுமுறை எதற்காக?

  • March 16, 2026
  • 0 Comments

“ வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கினால் சனி, ஞாயிறு என மூன்று நாட்களுக்கு அரசாங்க நிர்வாகம் முடங்கக்கூடும். எனவேதான், உரிய மதிப்பீட்டின் பிரகாரம் புதன்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.” அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போது போதே அதிகாரிகளால் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை அரசாங்கத்தால் நடத்தப்படும் நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாட்டில் எரிபொருள் கையிருப்பு இருந்தாலும், எதிர்கால சூழ்நிலையைக் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய மேலதிக செய்தி……. மத்திய கிழக்கு […]

செய்தி தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தொடர் பாலியல் வன்கொடுமைகள் – திமுகவை கண்டித்து அதிமுக போராட்டம்

  • March 16, 2026
  • 0 Comments

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்ட முறைகேடுகள் மற்றும் போதைப்பொருட்கள் புழக்கம் போன்றவற்றை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட அதிமுக தீர்மானித்துள்ளது. இதன்படி, வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் நாளை போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். “2021 ஆம் ஆண்டு, முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டினுடைய முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், திமுகவினுடைய ஆட்சியில் தமிழ் நாடு கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது எனவும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர்ச்சூழல்: இலங்கையில் விசேட அரச விடுமுறை பிரகடனம்!

  • March 16, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் எதிர்காலத்தில் இலங்கையில் எரிபொருள் விநியோகத்துக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பிலும், அந்த சவாலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பிலும் இன்று (16) விசேட கூட்டமொன்று நடைபெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர், அமைச்சர்கள் , அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச திணைக்களங்களின் பிரதானிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது அத்தியாவசிய சேவைகள் […]

உலகம் செய்தி

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல் – விமான சேவைகள் பாதிப்பு

  • March 16, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய எண்ணெய் சேமிப்பு மையமாக உள்ள ஃபுஜைரா (Fujairah) துறைமுகமும், டுபாய் (Dubai) சர்வதேச விமான நிலையமும் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்துக்குப் பின்னர் விமான நிலையத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டதால், இன்றைய தினம் சில விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதேவேளை வளைகுடா பிராந்தியத்தின் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு வசதிகளில் ஒன்றாக கருதப்படும் ஃபுஜைரா துறைமுகத்தின் தொழில்துறை பகுதிக்கும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அங்கும் […]

இலங்கை

திருகோணமலை உப்பாறு: சட்டவிரோத மதுபான ஆலை முற்றுகை – இருவர் கைது!

  • March 16, 2026
  • 0 Comments

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆறு கடலில் பாயும் உப்பாறுக்கு அருகிலுள்ள சம்பூர் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றினை பொலிஸார் (16)) சுற்றி வளைத்துள்ளனர். சுற்றி வளைப்பின் போது இரண்டு சந்தேக நபர்களையும் ஒரு தொகை சட்டவிரோத மதுபானங்களையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏற்கனவே பல குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூதூர் நீதவான் […]

இலங்கை செய்தி

322 சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள் உருவாக்கம் வேலைத்திட்டம் ஆரம்பம்!

  • March 16, 2026
  • 0 Comments

“சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள்” வேலைத்திட்டம் இன்று (16) களுத்துறை மாவட்டத்தின் சிவ்தெவிகம கிராமத்தை மையமாகக் கொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, ஒழுக்கமான மற்றும் நேர்மையான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த அணுகுமுறையுடன் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் Sunil Handunnethi. தலைமையில் இன்று மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் […]