உலகம் செய்தி

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல் – விமான சேவைகள் பாதிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய எண்ணெய் சேமிப்பு மையமாக உள்ள ஃபுஜைரா (Fujairah) துறைமுகமும், டுபாய் (Dubai) சர்வதேச விமான நிலையமும் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்துக்குப் பின்னர் விமான நிலையத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டதால், இன்றைய தினம் சில விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இதேவேளை வளைகுடா பிராந்தியத்தின் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு வசதிகளில் ஒன்றாக கருதப்படும் ஃபுஜைரா துறைமுகத்தின் தொழில்துறை பகுதிக்கும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அங்கும் தீ விபத்து ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், Abu Dhabi நகரத்தின் புறநகரில் காரொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பாலஸ்தீனியர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி