விளையாட்டு

அமெரிக்காவில் நடக்கும் போட்டிகளை மெக்சிக்கோவுக்கு மாற்றுமாறு ஈரான் கோரிக்கை

  • March 17, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் நடைபெறும் உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் ஈரான் அணி பங்கேற்கும் போட்டிகளை மெக்சிக்கோவுக்கு Mexico மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் FIFA ஈரான் பேச்சு நடத்திவருகின்றது. உலகக்கிண்ண தொடரில் ஈரான் அணி தனது லீக் ஆட்டங்களை லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாட்டில் நகரங்களில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தற்போதைய பதற்றமான போர்ச் சூழலால், ஈரான் வீரர்கள் அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க அந்நாட்டின் விளையாட்டுதுறை அமைச்சு திட்டமிட்டுள்ளது. ஈரானிய கால்பந்து கூட்டமைப்பின் […]

பொழுதுபோக்கு

விருதுடன் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே!

  • March 17, 2026
  • 0 Comments

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே (Srushti Dange) கையில் விருதுடன் நிற்கும் படத்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தனக்கு தனியார் நிறுவனம் ஒன்று விருதளித்து கௌரவப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் ஒரு துறையில் சிறந்து விளங்குதோடு, மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் செயல்படுவதை பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலும், “இத்தகைய ஓர் உன்னதமான மற்றும் ஊக்கமளிக்கும் விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதை பெரும் நற்பேறாக கருதுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இது […]

இலங்கை செய்தி

பல்கலைக்கழகங்களில் இணையவழியில் விரிவுரை: பின்னணி என்ன?

  • March 17, 2026
  • 0 Comments

பல்கலைக்கழக விரிவுரைகளை மெய்நிகர் (ஒன்லைன்) முறையில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடியால் ஏற்படும் போக்குவரத்துச் சிரமங்களைக் குறைக்கவும், கல்வி நடவடிக்கைகள் தடையின்றித் தொடர்வதை உறுதிப்படுத்தவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், பல்கலைக்கழக கல்விசார் பணியாளர்கள் தற்போது சாத்தியமான இடங்களில் புதன்கிழமைகளில் ‘வீட்டிலிருந்தே பணிபுரிதல்’ முறையைப் பின்பற்றி வருகின்றனர். அதேவேளை, அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் முழுமையாக இணையவழியில் முன்னெடுப்பது தற்போதைக்குச் சாத்தியமில்லை […]

இலங்கை செய்தி

‘மின்சாரம் விநியோகத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை’

  • March 17, 2026
  • 0 Comments

மின்சாரம் விநியோகத்தில் இதுவரை எந்தப் பிரச்சினைகளும் கண்டறியப்படவில்லை என்று எரிசக்தி எரிசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் Arkham Ilyas தெரிவித்துள்ளார். நாடு வறட்சியை எதிர்கொள்ளவிருப்பதாகவும், இது நீர்மின் உற்பத்தித் திறனைக் குறைக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணநாயக்க எச்சரித்திருந்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட எரிசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், “ எரிசக்தி ஆதாரங்களைத் திறமையாக விநியோகிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்பார்க்கப்படும் மழைப் பற்றாக்குறை அல்லது நிலக்கரி ஏற்றுமதியில் தாமதம் […]

ஆஸ்திரேலியா செய்தி

அவசரகால எரிபொருள் கையிருப்பை விடுவித்தது ஆஸ்திரேலியா!

  • March 17, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க அந்நாட்டு அரசு தனது இருப்பு வைப்புத் தொகையிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை சந்தையில் வெளியிடத் தொடங்கியுள்ளது. ஈரானில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் உலகளவில் விலை உயர்ந்துள்ள நிலையில், தட்டுப்பாட்டைக் குறைக்க சுமார் 762 மில்லியன் லிட்டர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைச் சேமித்து வருவதால், பல இடங்களில் இருப்பு தீர்ந்து போகும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அளவு […]

அரசியல் இலங்கை செய்தி

நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு ஐ.தே.க. வலியுறுத்து!

  • March 17, 2026
  • 0 Comments

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் இயலுமை தமக்கு இல்லையென அரசு கருதினால், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலுக்கு செல்வதே சிறந்த தேர்வு என்று ஐக்கிய தேசியக் கட்சி UNP தெரிவித்துள்ளது. காலியிலுள்ள ஐ.தே.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன Vajira Abeywardena மேற்கண்டவாறு கூறியுள்ளார். “ நாடொன்றுக்கு வெளிநாட்டு கொள்கையென்பது மிக முக்கியமாகும். நாட்டின் கொள்கையை சர்வதேசத்துக்கு வெளிவிவகாரக் கொள்கையே எடுத்துரைக்கும். எனவே, சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் அதில் மாற்றம் […]

உலகம்

ஆப்கானிஸ்தான் வைத்தியசாலைமீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 400 பேர் பலி

  • March 17, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தான், காபூலில் உள்ள வைத்தியசாலைமீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் சுமார் 250 பேர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவே (16) இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா தெரிவித்துள்ளார். எனினும், மக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் தாங்கள் தாக்குதல் மேற்கொள்ளவில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் வைத்தியசாலை போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் […]

உலகம் செய்தி

அமெரிக்காவுக்கு இராஜதந்திர தூது: ஈரான் மறுப்பு!

  • March 17, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் தமது நாடு எவ்வித இராஜதந்திர பேச்சுகளையும் தற்போது முன்னெடுக்கவில்லை என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi தெரிவித்தார். அமெரிக்கத் தூதுவர்  Steve Witkoff மூலம் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என வெளிவந்த தகவல்களை அவர் அடியோடு நிராகரித்துள்ளார். இத்தகைய தகவல்கள் வெறும் வதந்திகள் என்றும், எண்ணெய் வர்த்தகர்களையும் பொதுமக்களையும் திசை திருப்பும் நோக்கில் பரப்பட்டுவருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். y Steve Witkoff உடனான தனது கடைசி உரையாடல் அமெரிக்காவின் […]

இலங்கை செய்தி

யாழில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே இருவர் பலி

  • March 16, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் அண்ணன் மற்றும் தங்கை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியை அண்மித்த பகுதியில் இன்று மாலை (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த   24 வயதான நபர் மற்றும் அவரது   19 வயதான சகோதரியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே […]

இலங்கை செய்தி

கொழும்புக்கும் டுபாய்க்கும் இடையிலான பல விமானங்கள் இன்று முதல் இரத்து

  • March 16, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கொழும்புக்கும் டுபாய்க்கும் இடையிலான பல விமானங்களை 16 ஆம் திகதி திங்கட் கிழமை முதல் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ரத்து செய்துள்ளது. இதன்படி ,கொழும்பு-டுபாய் வழித்தடத்தில் இயங்கும் UL231 மற்றும் UL232 விமானங்கள் மற்றும் திரும்பும் பிரிவு மார்ச் 2026 திங்கள் (16), செவ்வாய் (17), புதன் (18), சனி (21) மற்றும் செவ்வாய் (24) ஆகிய நாட்களில் இயக்கப்படாது என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. புதுப்பிப்புகளுக்காக பயணிகள் தங்கள் விமானங்களின் […]