இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை
இந்தோனேஷியாவில் உள்ள மவுண்ட் லெவோடோபி லக்கி-லாகி (Mount Lewotobi Laki-Laki) எரிமலை இன்று (15) வெடித்துள்ளது. எரிமலை வெடித்ததில் அதிலிருந்து சாம்பல் வானுயர 10 கி.மீ உயரத்துக்குத் தூக்கி வீசப்பட்டது. இந்நிலையில், அதிகாரிகள் ஆக உயரிய நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளனர். லெவோடோபி லாக்கி லாக்கி எரிமலை கிழக்கு நூசா தெங்காரா (Nusa Tenggara) மாநிலத்தில் உள்ளது. இந்தோனேஷிய நேரப்படி அது அதிகாலை 1.35 மணிக்கு வெடித்ததாக அதிகாரிகள் கூறினர். வெடிப்பு கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்களுக்கு நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. […]













