உலகம்

விசா கட்டுப்பாடுகளை தளர்த்தும் அமெரிக்கா

  • November 19, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் உலகக்கோப்பை கால்பந்து தொடரைக் காண வரும் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்காக, விசா வழங்கும் நடைமுறைகளை ட்ரம்ப் நிர்வாகம் தளர்த்தியுள்ளது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுவாக அமெரிக்க விசா நேர்காணலுக்காக வெளிநாட்டினர் பல மாதங்கள் காத்திருக்க நேரிடும். இந்தநிலையில், கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட்களை வைத்திருப்பவர்கள் 2 மாதங்களுக்குள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) தெரிவித்துள்ளார். மேலும் உலகக்கோப்பை கால்பந்து தொடரைக் […]

உலகம் கருத்து & பகுப்பாய்வு

அண்டார்டிக்காவில் ஏற்படும் பேராபத்து – முழு உலகமும் நீரில் மூழ்கும் அபாயம்

  • November 19, 2025
  • 0 Comments

அண்டார்டிக்காவில் அடுத்த 10 ஆண்டுகளில் பாரிய பனித் தகடுகள் திடீரென்று உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான புதிய தகவல்களின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நேச்சர் ஆய்விதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக அண்டார்டிக் பனி மற்றும் கடல் உயிரினங்களின் வாழ்விடங்களில் மிக விரைவான மாற்றங்கள் ஏற்படும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி மேற்கு அண்டார்டிக் பனித் தகடு ஆபத்தான கட்டத்தில் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் முழுமையான பனித் தகடு சரிந்தால், உலகெங்கிலும் […]

உலகம்

தாய்லாந்தில் போதைப்பொருள் வலைப்பின்னலைக் கண்டுபிடித்த காவல்துறை – சிக்கிய ரஷ்ய பிரஜை

  • November 19, 2025
  • 0 Comments

தாய்லாந்தில் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் விற்பனை செய்யும் வலையமைப்பு ஒன்றை அந்நாட்டு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த குற்றசாட்டின் அடிப்படையில் ரஷ்ய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புக்கெட்டில் (Phuket) இணையம் மூலம் போதைப்பொருள் விநியோகம் செய்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் புக்கெட்டிலுள்ள மின்கம்பங்களில் போதைப்பொருளை வாங்குவதற்கான QR குறியீட்டை ஒட்டி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் THAIHUB.TOP என்ற இணையதளத்தை நாடியது. அதில் போதைப்பொருள் தொடர்பான […]

உலகம்

அமெசன் நிறுவனரின் புதிய முயற்சி – கொதித்தெழுந்த எலான் மஸ்க்

  • November 19, 2025
  • 0 Comments

புதிய செயற்கை நுண்ணறிவு முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ள அமெசன் நிறுவனர் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். அமெசன் நிறுவனரை, டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் நிறைவேற்று அதிகாரியான எலன் மஸ்க் (Elon Musk) Copy Cat என்று விமர்சித்துள்ளார். அமெசன் நிறுவனர் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) புராஜெக்ட் புரோமிதியஸ் (Project Prometheus) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் பங்குதாரராக இணைந்துள்ளார். விஞ்ஞானியான விக் பஜாஜ் (Vik Bajaj) உடன் இணைந்து […]

இலங்கை செய்தி

இலங்கையில் ஆண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்து – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • November 19, 2025
  • 0 Comments

இலங்கையில் ஆண்கள் மத்தியில் உயிர்மாய்ப்பு விகிதங்கள் உலக சராசரியை விட மிக அதிகமாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. ஆண்களின் மத்தியில் அதிகரித்துள்ள மனச்சோர்வு மற்றும் பதற்றம் ஆகியவையே இதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்கள் உயிர்மாய்ப்பு விகிதம், ஒரு இலட்சம் ஆண்களுக்கு 27 பேராக கணக்கிடப்பட்டுள்ளது. பெண்கள் உயிர்மாய்ப்பு விகிதம் ஒரு இலட்சம் பெண்களுக்கு 5 பேராக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விகிதமானது வயதிற்கு ஏற்ப அதிகரிக்கிறது. குறிப்பாக 55 […]

உலகம் செய்தி

விமான நிலையம் ஒன்றில் இந்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி

  • November 19, 2025
  • 0 Comments

இந்திய பெண் ஒருவரை விமானத்தில் ஏற்ற தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் மறுத்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கடுமையாகக் காயமடைந்திருந்த பெண், இந்தியா செல்ல முயன்றுள்ளார். எனினும் மோசமான உடல்நிலையுடன் அவர் பயணம் மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 11ஆம் திகதி நடந்துள்ள நிலையில், தற்போது ஊடகங்கள் வாயிலாக வெளியாகி உள்ளது. குறித்த இந்திய பெண்ணுக்குக் கை முறிந்து, கழுத்து எலும்பு விலகி, நுரையீரல் வீக்கமடைந்திருந்தது. அவரது உடல்நிலை […]

உலகம் செய்தி

லெபனானில் பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் – 11 பேர் மரணம்

  • November 18, 2025
  • 0 Comments

தெற்கு லெபனானில்(Lebanon) உள்ள பாலஸ்தீன(Palestinian) அகதிகள் முகாமில் இஸ்ரேலிய விமானப்படை நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடலோர நகரமான சிடோனின்(Sidon) புறநகரில் உள்ள ஐன் எல்-ஹில்வே(Ein el-Hilweh) அகதிகள் முகாமில் உள்ள ஒரு மசூதியின் வாகன நிறுத்துமிடத்தில் ட்ரோன் ஒரு காரைத் தாக்கியதாக அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஹமாஸின் பயிற்சி மையத்தை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

உலகம் செய்தி

துருக்கிக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

  • November 18, 2025
  • 0 Comments

உக்ரைனில்(Ukraine) போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவுடனான(Russia) பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க துருக்கி(Turkey) செல்ல திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க தயாராகி வருகிறோம் என்றும் போரை விரைவில் முடிவிற்கு கொண்டுவர உறுதியாக உள்ளோம் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். ஜூலை மாதம் இஸ்தான்புல்லில்(Istanbul) சந்தித்ததிலிருந்து கிய்வ்(Kyiv) மற்றும் மாஸ்கோ(Moscow) இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. இதற்கு முன்னதாக உக்ரைனும் ரஷ்யாவும் இஸ்தான்புல்லில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன, […]

உலகம் செய்தி

அயர்லாந்து நிதியமைச்சர் பதவி விலகல்

  • November 18, 2025
  • 0 Comments

உலக வங்கியின்(World Bank) மூத்த பொறுப்பை ஏற்பதற்காக, அயர்லாந்து(Ireland) நிதியமைச்சர் மற்றும் யூரோகுழுமத்(Eurogroup) தலைவர் பதவியை பாஸ்கல் டோனோஹோ(Paschal Donohoe) ராஜினாமா செய்துள்ளார். ஐரிஷ் அரசியலில் இருந்து டோனோஹோ வெளியேறியதால், கூட்டணி அரசாங்கம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில், பாஸ்கல் டோனோஹே நவம்பர் 24ம் திகதி நிர்வாக இயக்குநராகவும்(Managing Director) தலைமை அறிவு அதிகாரியாகவும்(Chief Knowledge Officer) பதவியேற்பார் என்று உலக வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அரசாங்கங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடனான உலக வங்கியின் […]

இந்தியா செய்தி

மகனை இஸ்லாமிய அரசில் சேர வற்புறுத்திய தாய் மற்றும் மாற்றாந்தந்தை மீது வழக்கு பதிவு

  • November 18, 2025
  • 0 Comments

திருவனந்தபுரத்தைச்(Thiruvananthapuram) சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனை அவனது தாய் மற்றும் மாற்றாந்தந்தை இஸ்லாமிய அரசில்(ISIS) சேர வற்புறுத்திய குற்றச்சாட்டில் அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் அல்லது UAPAன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் குடும்பத்தினர் வற்புறுத்தியதை அதிகாரிகளுக்குத் தெரிவித்ததை அடுத்து, வெஞ்சாரமூடு(Venjaramoodu) காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்தனம்திட்டாவைச்(Pathanamthitta) சேர்ந்த பெண் இஸ்லாத்திற்கு மாறி வெம்பாயத்தைச்(Vempayam) சேர்ந்த ஒருவரை மறுமணம் செய்து கொண்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த […]