இலங்கை

(New update)கண்டி – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு : ஒருவர் பலி!

  • November 22, 2025
  • 0 Comments

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் அமைந்திருந்த சில வர்த்தக நிலையங்கள்மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். மண்சரிவில் சிக்கியவர்களில் மூவர் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் மேலும் ஐவர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. கடும் மழை காரணமாக மண்சரிவு இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கண்டி – கொழும்பு பிரதான வீதி மாவனல்லை பகுதியில் மூடப்பட்டுள்ளது. மாற்று வீதியை பயன்படுத்துமாறு […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு – பலர் புதையுண்டிருக்கலாம் என அச்சம்

  • November 22, 2025
  • 0 Comments

கண்டி – கொழும்பு வீதியில் கண்டி, பஹால கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. கடும் மழை காரணமாக மண்சரிவு இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்றின்மீது மண்மேடு விழுந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. ஒரு வழி போக்குவரத்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வியாபார நிலையத்தில் இருந்த சிலர் மண்மேட்டில் சிக்குண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மீட்பு பணி தற்போது இடம்பெற்றுவருகின்றது. வியாபார நிலையத்தில் எத்தனை […]

உலகம்

நைஜீரியாவில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • November 22, 2025
  • 0 Comments

நைஜீரியாவில் ஆயுத தாரிகளால் ஏறக்குறைய 215 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அக்வாராவில் உள்ள செயிண்ட் மேரி பள்ளியில் இருந்து நேற்று குறித்த பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டிருந்தனர். நேற்றைய தினம் 52 மாணவர்கள் கடத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சரியான எண்ணிக்கை மதிப்பிடப்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் 215 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் கடத்தப்பட்டதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. “காவல்துறை தந்திரோபாயப் பிரிவுகள், இராணுவக் குழுக்கள் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, […]

அரசியல் இலங்கை

தற்போதைய நிலையி்ல் நாமலே எதிர்க்கட்சி தலைவர் – மனோ கணேசன்

  • November 22, 2025
  • 0 Comments

“எதிர்கட்சி தலைவரான சஜித், இப்படி ஒரு கூட்டத்தை, வெளியே கூட்டி காட்டும் வரை, நாட்டிலே நாமல் எதிர்க்கட்சி தலைவர்” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். நுகேகொடையில் நேற்று நடைபெற்ற கூட்டம் தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மனோவின் முகநூல் பதிவு வருமாறு, ” நிகழ்வு ஆரம்பிக்க, முன்-பிடித்த, பின்–பிடித்த, படங்களை, போட்டு, ஊடக(ர்) நிறுவனங்களின் விருப்பபடி, கூட்டம் பற்றி, செய்திகள் போடலாம். […]

அரசியல் ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள் தென்னாபிரிக்காவில் சந்திப்பு!

  • November 22, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பிரதமர்களுக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவில் நடைபெறும் ஜி – 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸி ஆகியோர் அந்நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்தே இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் பற்றி கலந்துரையாப்பட்டது. இந்தோ – பசுபிக் பாதுகாப்பு உட்பட மேலும் பல விடயங்கள் சம்பந்தமாகவும் பேசப்பட்டுள்ளன. “ ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ{டன் மிகச் […]

ஐரோப்பா செய்தி

லண்டன் யூஸ்டனில் (London Euston) இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் இரத்து!

  • November 22, 2025
  • 0 Comments

லண்டன் யூஸ்டனில் (London Euston) இருந்து  வடக்கு நோக்கிச் செல்லும் அனைத்து ரயில்களும் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவந்தி வெஸ்ட் கோஸ்ட் பாதையில் (Avanti West Coast route)  உள்ள சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மென்செஸ்டர் (Manchester), லிவர்பூல் (Liverpool), ஸ்காட்லாந்து (Scotland) மற்றும் வடக்கு வேல்ஸுக்குச் (north Wales)  செல்லும் மற்றும் திரும்பி வரும் ரயில் பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களில் தங்கள் சொந்த […]

அரசியல் இலங்கை

என்பிபி அரசு மஹிந்தவிடம் மன்னிப்பு கோர வேண்டும்!

  • November 22, 2025
  • 0 Comments

ராஜபக்சக்களுக்கு எதிரான முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் மெதமுலன சென்று மஹிந்த ராஜபக்சவிடம் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தினார். நுகேகொடை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில் உள்ளது. ராஜபக்சக்களின் மகன்மார் வளர்க்கும் நாய்க்கு தங்க சங்கிலி போடப்பட்டுள்ளது என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இவற்றை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் மெதமுலனயில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் […]

அரசியல் இலங்கை

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் இலங்கை பாதுகாப்பு செயலர்! 

  • November 22, 2025
  • 0 Comments

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும், இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டக் கூட்டத்தின் ஒரு பகுதியாக மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு தரப்பு அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இந்தச் சந்திப்பின் போது, இரு தரப்பினரும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட்டனர் என்று […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் 28 அம்ச கோரிக்கை – உக்ரைனுக்கு உள்ள சவால்!

  • November 22, 2025
  • 0 Comments

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்துள்ள திட்டம் உக்ரைனுக்கு பல சவால்களை கொண்டுவந்துள்ளது. இந்த விடயத்தில் அமெரிக்காவை பகைத்துக்கொள்ளாமல் உக்ரைன் காய் நகர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா முன்வைத்துள்ள 28 அம்ச கோரிக்கைகள் உக்ரைனின் தலையீடு இன்றி  சுயாதீனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மிகப் பெரிய நிலப்பரப்புகளை ரஷ்யாவின் வசம் விட்டுக்கொடுப்பதும் அடங்குகின்றது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) பல முறை நிராகரித்த திட்டங்கள் இந்த 28 அம்ச கோரிக்கைகளில […]

ஐரோப்பா

“ஒரு கைதியின் நாட்குறிப்பு” – நூல் வெளியீட்டிற்கு தயாராகும் பிரான்சின் முன்னாள் அதிபர்!

  • November 22, 2025
  • 0 Comments

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி (Nicolas Sarkozy) தான் சிறையில் அனுபவித்த துன்பங்கள், அல்லது சிறையில் இருந்த நாட்களை விளக்கும் வகையில் புத்தகம் ஒன்றை எழுதவுள்ளார். குறித்த புத்தகத்திற்கு “ஒரு கைதியின் நாட்குறிப்பு” என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைவாசம் அனுபவித்த பின் விடுதலையான அவர், சத்தம், துரதிர்ஷ்டவசமாக, நிலையானது” என்றும் “சிறையில் மனிதனின் உள் வாழ்க்கை வலுவடைகிறது” என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை […]