கிழக்கு ஆசிய சைபர் குற்றவாளிகளின் மோசடிக்கு இலக்காகும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
கிழக்கு ஆசியாவில் இயங்கும் சைபர் குற்ற மையங்கள், இலங்கை உட்பட பல நாடுகளின் குடிமக்களை மோசடியாக வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐடி துறையில் வேலை வழங்குவதாகக் கூறி, சுமார் 50,000 பேர் இதற்காக இலக்காக்கப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்கள் மூலம் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் பரப்பப்படுவதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை குறைந்தது ஐந்து சைபர் குற்ற மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த சில […]













