ஐரோப்பிய ஒன்றியம் மீதான 50% வரி விதிப்பு ஜூலை 9 வரை நிறுத்திவைப்பு: அதிபர் டிரம்ப்
ஐரோப்பிய ஒன்றியம் மீதான 50% வரி விதிப்பை ஜூலை 9ஆம் திகதிவரை தான் நிறுத்திவைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை (மே 25) தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டாக்டர் வோன் டெர் லெயனுடன் தான் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலுக்குப் பின் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னதாக, மே 23ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியத்துடன் தான் மேற்கொண்டுவரும் பேச்சுவார்த்தையால் எந்தப் பயனும் விளைவதாகத் தெரியவில்லை என்று தெரிவித்த டிரம்ப், ஒன்றியத்துக்கு எதிரான கடுமையான […]













