ட்ரம்பின் வரிகளால் ஏற்படக்கூடிய குழப்பத்திலிருந்து பிரிட்டிஷ் வர்த்தகங்களைப் பாதுகாக்க பிரதமர் ஸ்டார்மர் உறுதி
பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் புதிய வரிகளால் ஏற்படக்கூடிய குழப்பத்திலிருந்து பிரிட்டிஷ் வர்த்தகங்களைப் பாதுகாக்க தொழிற்துறை சார்ந்த கொள்கைகளைப் பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார். புதிய வரிகளைத் தவிர்க்க அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியான உடன்பாட்டைச் செய்துகொள்ள தொடர்ந்து முயற்சி செய்யப்போவதாக ஸ்டார்மர் குறிப்பிட்டார்.இருப்பினும், அரசாங்கம் தலையிட்டு வர்த்தகங்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற யோசனையை அவர் முன்வைத்தார். அரசாங்கம் தலையிட்டு நேரடியாகச் சந்தையை உருவாக்குவது பலர் விரும்பாத ஒன்றாக இருந்தாலும் மிகவும் விரைவாக மாறிவரும் உலகில் பழைய […]













