இலங்கை

இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை – பல பகுதிகளுக்கு உச்சம் கொடுக்கும் சூரியன்

  • April 7, 2025
  • 0 Comments

இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய […]

ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் வீட்டில் இருந்து விமானத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திய நபர்

  • April 7, 2025
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் அதிக சக்திவாய்ந்த டோர்ச் லைட்டை விமானத்தை நோக்கி ஒளிரச் செய்த ஒருவரை மத்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். அடிலெய்டில் வசிக்கும் 58 வயதான இந்த நபர், தனது வீட்டிலிருந்து விமானத்தை நோக்கி டோர்ச் லைட்டை ஒளிரச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. விமானி அவரது முகவரியை பொலிஸாருக்கு தெரிவித்ததை அடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார். விமானத்தில் யாரோ வேண்டுமென்றே பிரகாசமான ஒளியைப் பிரகாசிப்பதாகக் கூறிய விமானி, விமானத்தை ஓட்டுவது கடினமாக உள்ளதென குறிப்பிட்டுள்ளார். அத்தகைய குற்றத்திற்கு 15 […]

ஆசியா செய்தி

சீனாவில் காலுறைகளை நுகர்ந்த நபருக்கு நேர்ந்த கதி – அதிர்ச்சியில் மருத்துவர்கள்

  • April 7, 2025
  • 0 Comments

சீனாவின் சொங்சிங் மாநிலத்தில் காலுறைகளை நுகர்ந்த நபருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அலுவலக ஊழியரான அவர் அண்மையில் ஓயாத இருமல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெறச் சென்றார். அவரின் இருமல் மிக மோசமாக இருந்ததால் இரவில் சரியான தூக்கமின்றிக் கண்கள் சிவந்துள்ளது. பரிசோதனையின்போது அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதை மருத்துவர் உறுதிசெய்தார். அதைப் பற்றி உரையாடியபோது தனக்கு காலுறைகளை நுகரும் பழக்கம் இருப்பதை மருத்துவர் அறிந்தார். மருத்துவர் உடனடியாக குறித்த நபரின் காலுறைகளைச் […]

உலகம்

அமெரிக்காவிற்கு கார்களை அனுப்புவதை நிறுத்திய ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனம்

  • April 7, 2025
  • 0 Comments

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சொகுசு கார் உற்பத்தியாளரான ஜாகுவார் லேண்ட் ரோவர், அதன் வாகனங்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டுத் தயாரிப்பு கார்களுக்கு அதிக வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கான தனது கார்களின் ஏற்றுமதியை நிறுத்தியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவரின் ஆண்டு உற்பத்தியில் கால் பகுதி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடுமையான வரிகளுக்கு நீண்டகால தீர்வுகள் உருவாக்கப்படும் வரை, குறுகிய கால நடவடிக்கையாக ஏற்றுமதியை நிறுத்தி வைப்பதாக நிறுவனம் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

பாராளுமன்ற உறுப்பினர் காலமானார்

  • April 6, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன ஜயவீர இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். மாரடைப்பு காரணமாக மறைந்த இவர் 38 வயதான தல்தூவ பகுதியை சேர்ந்தவராவார் ஆவார்.

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

அதி உச்ச எச்சரிக்கையில் தெஹ்ரான்

  • April 6, 2025
  • 0 Comments

ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி நாட்டின் ஆயுதப் படைகளை ‘உயர் எச்சரிக்கை’ நிலையில் நிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். ஈரானின் பாதுகாப்பு தரப்பின் குரல் தரவல்ல அதிகாரியின் தகவலை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. தெஹ்ரானுடனான அதன் அணுசக்தி திட்டம் குறித்த இராஜதந்திர முயற்சி தோல்வியடைந்தால் ஈரான் மீது யுத்தம் தொடுப்பதாக அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது சாகோஸ் தீவுகளில் பல குண்டுவீச்சு விமானங்களை குவித்துள்ள டிரம்ப் ஏற்கனவே மத்திய கிழக்குக்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களையும் […]

இலங்கை செய்தி

யாழ் பல்கலை சிரேஷ்ட மாணவர்கள் இருவருக்கு விளக்கமறியல்

  • April 6, 2025
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 27ஆம் திகதி பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அம்மாணவனையும் வேறு […]

இலங்கை செய்தி

மகன் தாக்கியதில் தாய் மரணம்!

  • April 6, 2025
  • 0 Comments

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணி நகர் பகுதியில் மகன் தாக்கியதில், யாசகம் பெற்று வாழ்ந்த தாய் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், இன்று ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது. தனது தாயுடன் வாழ்ந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட46 வயதுடைய மகன் தாக்கியதில், யாசகம் பெற்று வாழ்ந்து வந்த 65 வயது மதிக்கத்தக்க தாய் உயிந்துள்ளார். இதையடுத்து குறித்த மகனை சந்தேகத்தில் கைது செய்த வாழைச்சேனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்தியா செய்தி

ஊழியரை நாய் போல் நடக்க செய்த நிறுவனம்? வைரலான வீடியோ

  • April 6, 2025
  • 0 Comments

நாட்டில் 100 சதவீதம் கல்வியறிவு கொண்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றது கேரளா. இந்நிலையில், கேரளாவின் கொச்சி நகரில் கலூர் அருகே உள்ள பெரும்பாவூர் என்ற இடத்தில் அமைந்த தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களை தவறான முறையில் நடத்தியது போன்ற வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில், ஊழியரின் கழுத்தில் கயிறு ஒன்றை கட்டி, நாய் போன்று முழங்காலால் நடக்க செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. நிறுவனத்தின் விற்பனை இலக்குகளை அடையவில்லை என்பதற்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டது […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

அமெரிக்கா குறித்து பிரிட்டன் ஒரு கடினமான முடிவை எடுக்கிறது

  • April 6, 2025
  • 0 Comments

அமெரிக்காவிற்கு ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் வாகனங்களின் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பிரிட்டன் நடவடிக்கை எடுத்துள்ளது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை விதித்ததற்கு பதிலளிக்கும் விதமாகும். புதிய வரிகள் நிறுவனத்தின் செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இத்தாலிய சொகுசு கார் உற்பத்தியாளரான ஃபெராரி, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சில வாகனங்களின் விலையை 10 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.