ஆஸ்திரேலியா

சிட்னியிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவினை திறக்க முயன்றவரால் பரபரப்பு

  • April 7, 2025
  • 0 Comments

சிட்னிக்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவினை ஜோர்தானிய பிரஜையொருவர் திறக்கமுயன்றதால் விமானத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை சிட்னியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை ஜோர்தானிய பிரஜையொருவர் திறக்க முயன்றார்,ஏனைய பயணிகள் அவரை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்தினர். விமானம் தரையிறங்கியதும் விமான பணியாளர்கள் பொலிஸாரின் உதவியை நாடினர். ஜோர்தானை சேர்ந்த 45 வயதுடைய நபர் விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியமை,விமான பணியாளரை தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கின்றார். எயர்ஏசியா விமானத்தின் பின்பக்கத்தில் உள்ள அவசரசூழ்நிலையில் வெளியேறுவதற்கான […]

உலகம்

வட கொரியாவில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் சர்வதேச மராத்தான் ஓட்டப்பந்தயம்

  • April 7, 2025
  • 0 Comments

வட கொரியாவில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் சர்வதேச மராத்தான் ஓட்டப்பந்தயம் இடம்பெறவுள்ளது. பியோங்யாங் என்று அழைக்கப்படும் இந்த சர்வதேச மாரத்தானில் 200 வெளிநாட்டு ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றனர். 31வது பியோங்யாங் சர்வதேச மாரத்தான் போட்டி பியோங்யாங்கில் உள்ள கிம் இல் சுங் மைதானத்தில் நடைபெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் போட்டி கடைசியாக 2019 இல் நடைபெற்றது. அந்த ஆண்டு, 950 வெளிநாட்டினர் பங்கேற்றனர். தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச விளையாட்டு நிகழ்வாக […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய நாமல் ராஜபக்‌ஷ

  • April 7, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டார். தனது பாட்டி டெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தொடர்ந்து நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாவது என்பது தற்போது ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

கொரோனாவுக்கு பிறகு மோசமான சரிவை சந்தித்த அமெரிக்க பங்குச் சந்தை

  • April 7, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் அறிவித்துள்ள வரிகளைத் தொடர்ந்து அமெரிக்கப் பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு கொவிட் பரவலின்போது ஏற்பட்ட கடும் சரிவுக்குப் பிறகு கடந்த வாரம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் மோசமான சரிவு ஏற்பட்டது. அந்நிலை தொடரும் என்று அஞ்சப்படுகிறது. டிசம்பர் மாதம் ஆக உச்சத்தைத் தொட்ட Dow Jones குறியீடு இப்போது அதிலிருந்து 10 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துவிட்டது. அதேபோல் டிசம்பரில் உச்சம் தொட்ட Nasdaq குறியீடு அதிலிருந்து […]

வாழ்வியல்

பெண்கள் தங்கள் உடலில் இந்த 5 அறிகுறிகளை கண்டால் அவதானம்

  • April 7, 2025
  • 0 Comments

பெண்கள் பெரும்பாலும் தங்களின் அன்றாடப் பொறுப்புகள், வீட்டு வேலைகள், குடும்பம் மற்றும் பல்வேறு கடமைகளில் மூழ்கியிருப்பார்கள். இதனால் பலரும் தங்களது உடல்நலத்தில் கவனம் செலுத்துவதில்லை. மேலும் இன்றைய காலத்தில் பல இளம் பெண்கள் பிசிஓஎஸ் மற்றும் பிசிஓடி போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இவற்றை முன்கூட்டியே கண்டறிதல் மிக முக்கியமானது. துரதிர்ஷ்டவசமாக, வாழ்க்கையின் ஓட்டத்தில் பல பெண்கள் தங்கள் நல்வாழ்வை விட மற்ற அனைத்திற்கும் முன்னுரிமை அளிக்கிறார்கள். உடலில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவற்றை கண்டும் காணாதுமாய் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவுக்கு பல நாடுகள் பணம் செலுத்த வேண்டியிருக்கும் – எச்சரிக்கும் டிரம்ப்

  • April 7, 2025
  • 0 Comments

விதிக்கப்பட்டுள்ள கடுமையான வரிகளை நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் தனது நாட்டிற்கு பெரும் தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார். உலகெங்கிலும் உள்ள நிதிச் சந்தைகள் அடுத்த வாரம் வீழ்ச்சியடையும் என்று அவர் கூறினார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த கடுமையான கட்டணக் கொள்கை குறித்து விவாதிக்க 50க்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது வெள்ளை மாளிகையைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அர்த்தமற்றதென கூறும் ஈரான்

  • April 7, 2025
  • 0 Comments

மத்தியஸ்தர்கள் தயவின்றி ஈரானுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவுடனான நேரடி பேச்சுவார்த்தை அர்த்தமற்றது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். ஈரான் அரசு அணு ஆயுயுதங்களை தயாரிக்க முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டும் டிரம்ப், அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வராவிட்டால் குண்டு வீசப்போவதாக முன்னர் மிரட்டல் விடுத்திருந்தார். போருக்குத் தயாராக உள்ளதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது,

இலங்கை

இலங்கையில் தாயை அடித்துக் கொலை செய்த மகன்

  • April 7, 2025
  • 0 Comments

வாழச்சேனை பொலிஸ் பிரிவின் நவலடி பகுதியில் மகன் தனது தாயை துடைப்பத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தக் குற்றம் நேற்று (06) காலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தாய்க்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து மகன் இந்தக் கொலையைச் செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 72 வயது என்று தெரிவிக்கப்பட்டது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 42 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை மருத்துவமனை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பம் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய தகவல்

  • April 7, 2025
  • 0 Comments

AI என்ற ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்சில் Google Gemini, ChatGPT, Deepseek V3 ஆகியவற்றுக்கான சில முக்கிய அப்டேட்களை பாக்கலாம். Google Gemini. AI தொழில்நுட்பத்தில் ரீசனிங் மூலம் சிறந்த பதில்களை வழங்குவதற்கான ரேசில் லேட்டாகத்தான் இணைந்தது கூகுள் ஜெமினி. அதை லேட்டஸ்ட்டாக மாற்ற வேண்டும் என்பதற்காக Google Gemini 2 பாய்ன்ட் O Flash thinking-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் பயனர் கேட்கும் கேள்விகளுக்கு யோசித்து, தரவுப் பட்டியல்களோடு Insight-களை தருமாம். அதுமட்டுமின்றி 15 லட்சம் வார்த்தைகளைக் கூட […]

விளையாட்டு

ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

  • April 7, 2025
  • 0 Comments

கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது வயது அதிகரித்து வருவதால், இந்த சீசனுக்குப் பிறகு எம்எஸ் தோனி ஓய்வு பெறுவாரா? என்று கேள்வி தொடர்ந்து எழுகிறது. இதனிடையே, நேற்றைய தினம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக எம்.எஸ். தோனியின் பெற்றோர் சென்னை வந்தடைந்ததால், இது தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று ஒவ்வொரு ரசிகரும் அஞ்சத் தொடங்கினர். இது நடக்கவில்லை என்றாலும், தோனி இது […]