இறக்குமதி செய்யப்படும் அனைத்து எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25% வரி; ட்ரம்ப் அதிரடி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகக் கொள்கையில் மற்றொரு திடீர் திருப்பமாக, அமெரிக்காவுக்கு எஃகு, அலுமினிய இறக்குமதிகள் அனைத்துக்கும் புதிதாக 25 சதவீத வரிவிதிப்பை அறிவிக்கப் போவதாக ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) தெரிவித்துள்ளார். உலோக இறக்குமதிகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்படும் தீர்வைக்கு மேலாக இப்புதிய வரிவிதிப்பு இடம்பெறும். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், உலோகங்களுக்குப் புதிய வரிவிதிப்பை திங்கட்கிழமை (பிப்ரவரி 10) அறிவிக்கவுள்ளதாகக் கூறினார். அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு மற்ற நாடுகளின் வரிவிதிப்புக்குப் பதிலடியாக அமெரிக்காவும் […]












