ஆசியா

தைவானை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சியில் சீனா : online இல் பரப்படும் கருத்துக்கள்!

  • January 4, 2025
  • 0 Comments

சுயராஜ்ய தீவின் ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவுடனான நெருக்கமான உறவுகளின் மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளை சீனா இரட்டிப்பாக்கி வருவதாக தாய்வானின் அரசாங்கம் கூறுகிறது. குறிப்பாக ஆன்லைனில் தவறான தகவல்களை பரப்புவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Facebook மற்றும் X ஆகியவை தவறான தகவல்களுக்கான முக்கிய வழித்தடங்களாக இருப்பதாகவும், டிக்டொக் பாரிய அளவு செல்வாக்கு செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூடியூப்பில் தனது பிரச்சாரத்தை விநியோகிக்க சீனா “சத்தியமற்ற கணக்குகளை” உருவாக்கியது, போலி வீடியோக்களை உருவாக்க AI போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாகவும் […]

பொழுதுபோக்கு

தனது முதலிரவு குறித்து பகிரங்கமாக கூறிய ரன்வீர்….

  • January 4, 2025
  • 0 Comments

ராம் லீலா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் சமூக ஆதரவை பெற்றவர் ரன்வீர் கபூர். இதைத் தாண்டி நமக்கு பரீட்சையமாக தெரிய வேண்டுமென்றால் தீபிகா படுகோனே கணவர் என்று கூட சொல்லலாம். இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது துவா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் ரன்வீர் கபூர் சமீபத்தில் கரன் ஜோஹரின் பேட்டி ஒன்றில் கலந்து இருக்கிறார். அப்போது பிங்கோ என்ற […]

ஆசியா

மியன்மாரில் 6000இற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

  • January 4, 2025
  • 0 Comments

மியான்மரின் இராணுவ அரசாங்கம் 6,000 க்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் பெற்ற 77 ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் இந்த விடுதலை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மியான்மரில் இருந்து 5,864 கைதிகள் மற்றும் நாடு கடத்தப்படும் 180 வெளிநாட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ராணுவ அரசாங்கத்தின் தலைவரான மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் பொது மன்னிப்பு வழங்கியதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.  

இலங்கை

இலங்கையில் ரேபிஸ் நோயினால் 20 பேர் பலி : வெறிநாய் கடியால் பாதிக்கப்படுவோரும் அதிகரிப்பு!

  • January 4, 2025
  • 0 Comments

இலங்கையில் நாய் கடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த (2024) ஆண்டில் மாத்திரம் ஏறக்குறைய 02 இலட்சம் பேர் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் ரேபிஸ் நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார கால்நடை சேவையின் வைத்திய அதிகாரி டொக்டர் யேஷான் குருகே தெரிவித்துள்ளார். அதில் 11 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பாம்பு கடித்ததில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள […]

வட அமெரிக்கா

இஸ்ரேலுக்கு 8 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா திட்டம் ; அமெரிக்க அதிகாரி தகவல்

  • January 4, 2025
  • 0 Comments

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், முன்மொழியப்பட்டுள்ள இஸ்ரேலுக்கான $8 பில்லியன் பெறுமானமுள்ள ஆயுத விற்பனை குறித்து காங்கிரசிடம் தகவல் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட காஸா போரில், தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு அதன் ஆதரவைத் தொடர்ந்து காட்டிவருகிறது அமெரிக்கா.அந்தத் திட்டத்திற்குப் பிரதிநிதிகள் சபையிடமிருந்தும் செனட் குழுக்களிடமிருந்தும் ஒப்புதல் பெறப்படவேண்டும். திட்டத்தின்கீழ், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், குண்டுகள் உள்ளிட்டவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கருத்துகள் கேட்டபோது அமெரிக்க வெளியுறவு […]

விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வா? ரோகித் சர்மா வெளியிட்ட அறிவிப்பு

  • January 4, 2025
  • 0 Comments

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் பும்ரா தலைமையில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அடுத்த 3 போட்டிகளில் 2 தோல்விகளைச் சந்தித்த இந்திய அணி கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது. அத்துடன் 2025ஆம் ஆண்டு உலக டெஸ்ட் […]

இலங்கை செய்தி

இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை

  • January 4, 2025
  • 0 Comments

ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாயாகவும், 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாயாகவும் உள்ளது. மேலும், 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகும் காணப்படுகின்றது. இந்த விலைகள் இதே முறையில் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்க வரலாற்றில் முதல் முறை – பதவியேற்க முன்னர் டிரம்பிற்கு தண்டனை

  • January 4, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் ஜனாதிபதி பொறுப்பேற்கவிருக்கும் டொனல்ட் டிரம்ப்புக்கு நியூயோர்க் நீதிமன்றம் இம்மாதம் 10ஆம் திகதி தண்டனை விதிக்கவிருக்கிறது. எனினும் அவருக்குச் சிறைத்தண்டனை விதிப்பதற்கு வாய்ப்பில்லை என்று நீதிபதி கூறியிருக்கிறார். 78 வயதான டிரம்ப் பதவியேற்பதற்கு 10 நாள் முன்பாக அவருக்குத் தண்டனை விதிக்கப்படும் என்ற செய்தி வந்திருக்கிறது. டிரம்ப் நேரடியாகவோ, காணொளி மூலமாகவோ நீதிமன்றத்தில் தோன்றலாம் என்று நீதிபதி கூறியிருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததில்லை. நடப்பு ஜனாதிபதி அல்லது முன்னாள் ஜனாதிபதி குற்றவியல் குற்றச்சாட்டைச் […]

பொழுதுபோக்கு

இந்தியன் 2வால் கேம் சேஞ்சருக்கு வந்த சிக்கல்… பொங்கலுக்கு ரிலீஸாகுமா?

  • January 4, 2025
  • 0 Comments

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தில் ராம் சரண் நாயகனாகவும், பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜனவரி 10ந் தேதி பொங்கல் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கேம் சேஞ்சர் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில், அப்படத்தின் ரிலீசுக்கு தமிழ்நாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக […]

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மீண்டும் மாற்றம்

  • January 4, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இன்றைய தினம் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.96 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.51 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையும் இன்றைய தினம் 3.354 அமெரிக்க டொலராக அதிகரிப்பை […]