இலங்கை

நாடு திரும்பிய வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

  • September 2, 2024
  • 0 Comments

இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய வர்த்தகரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் துபாயிலிருந்து நேற்று அதிகாலை 02.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான 20 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய […]

இலங்கை செய்தி

காப்பாற்றுமாறு நாமல் அழுதாரா? அமைச்சர் வெளியிட்ட தகவல்

  • September 1, 2024
  • 0 Comments

கடந்த போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அழுது கொண்டே தொலைபேசியில் அழைத்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி தெரிவித்துள்ளார். அலரி மாளிகை போராளிகளால் முற்றுகையிடப்பட்ட போது நாமல் ராஜபக்ஷ தம்மை அழைத்துக் காப்பாற்றுமாறு கூறியதாகவும் அதேவேளை இராணுவத் தளபதியையும் அழைத்ததாகவும் அமைச்சர் கூறினார். நாமல் ராஜபக்ஷ அன்று இருந்த நிலைமையை மறந்து இன்று தம்பட்டம் அடித்துக்கொண்டு ஜனாதிபதி பதவியை கோருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சுற்றி மக்கள் திரண்டுள்ளதாகவும் அவர் […]

செய்தி விளையாட்டு

33 ஆண்டுகளுக்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் இலங்கை தோல்வி

  • September 1, 2024
  • 0 Comments

இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 190  ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பெற்ற ஓட்ட எண்ணிக்கை 427 ஆகும். ஜோ ரூட் 143 ஓட்டங்களையும், குட் அட்கின்சன் 118 ஓட்டங்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 05 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பின்னர் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் […]

இலங்கை செய்தி

இலங்கையில் ஹேர் ஸ்டைலிங் செய்த பெண் வைத்தியசாலையில் அனுமதி

  • September 1, 2024
  • 0 Comments

விருந்தொன்றில் கலந்து கொள்வதற்காக தலைமுடியை சீர்செய்வதற்காக சென்ற பெண்ணொருவர் தலையில் இருந்த பொருட்களால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தனது முடிகள் அனைத்தும் உதிர்ந்துள்ள சம்பவம் மினுவாங்கொடை பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. தலைமுடி உதிர்வு காரணமாக குறித்த பெண் கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மினுவாங்கொடை பொரகொட வத்த பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய திருமணமான பெண்ணே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார். மினுவாங்கொடை பகுதியில் உள்ள அழகு நிலையமொன்றுக்கு விருந்து ஒன்றில் கலந்து கொள்வதற்காக […]

இலங்கை செய்தி

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளிடம் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் விடுத்துள்ள கோாிக்கை

  • September 1, 2024
  • 0 Comments

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது என இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது, தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம், தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. இதன்போது […]

இலங்கை செய்தி

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே புதிய விமான சேவை ஆரம்பம்!

  • September 1, 2024
  • 0 Comments

சென்னைக்கும் யாழ். பலாலிக்குமிடையேயான இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை இன்று முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் தினந்தோறும் சென்னையிலிருந்து யாழ். பலாலிக்கு விமான சேவை நடத்தப்படவுள்ளதாக இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது யாழ். பலாலிக்கு தினசரி விமான சேவையை இந்தியாவின் அலையன்ஸ் ஏயார் விமானம் (Alliance Air) நடத்துகிறது. இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் […]

இலங்கை செய்தி

சர்வதேச விசாரணைக்கு அலி சப்ரி தயாரா? ரெலோ சவால்

  • September 1, 2024
  • 0 Comments

வாய்க்கணக்கும் மற்றவர் கணக்கை குப்பை என்பதும் முடிவல்ல. உண்மையை கண்டறிய ஒரே வழி சர்வதேச விசாரணையே. காணாமல் ஆக்க பட்டோர் எத்தனை பேர் என்ற வாய்க் கணக்குகளை சொல்வதை விடுத்து சர்வதேச விசாரணை நடத்துவதன் மூலமாகவே சரியான கணக்கினை அறிந்து கொள்ள முடியும். அப்பொழுதுதான் யார் பொய் சொல்லுகிறார்கள் யார் உண்மை சொல்லுகிறார்கள் என்பது வெளிவரும். அதை அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். அதை விடுத்து காலத்துக்கு காலம் வெளிவிவகார அமைச்சர்களாக வருபவர்கள் தங்கள் மனக்கணக்குகளின் படி […]

இலங்கை செய்தி

எனக்கு எதுவும் தெரியாது – மாவைசேனாதிராஜா

  • September 1, 2024
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்று அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றபோது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கவும், தமிழ் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பா.அரியநேத்திரனை போட்டியில் இருந்து விலகுமாறு கோரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் […]

இலங்கை செய்தி

கட்டுநாயக்க அதிவேக வீதி சிலாபம் வரை நீட்டிக்கப்படும் – ரணில் விக்ரமசிங்க

  • September 1, 2024
  • 0 Comments

கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை சிலாபம் வரை நீடிப்பதாக சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். “கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை சிலாபம் நோக்கி நீடிக்கவுள்ளோம். அதற்கேற்ப சிலாபம் நகரம் அபிவிருத்தி செய்யப்படும். சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடி துறைகளில் கவனம் செலுத்துவோம்” என சிலாபத்தில் இடம்பெற்ற பேரணியில் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆசியா செய்தி

தாய்லாந்து சுரங்கப்பாதையில் சிக்கிய 3 வெளிநாட்டு தொழிலாளர்கள் சடலமாக மீட்பு

  • September 1, 2024
  • 0 Comments

விரிவான மீட்பு முயற்சிகள் இருந்தபோதிலும், ஐந்து நாட்களுக்கும் மேலாக இடிந்து விழுந்த ரயில் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த மூன்று வெளிநாட்டு தொழிலாளர்கள் இறந்ததை தாய்லாந்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இரண்டு சீன பிரஜைகள் மற்றும் ஒரு மியான்மர் குடிமகன் அடங்கிய பாதிக்கப்பட்டவர்கள், ஆரம்பத்தில் வியாழக்கிழமை வரை உயிர் பிழைத்ததாக நம்பப்பட்டது. இருப்பினும்,பின்னர் மூன்று பேரும் இறந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர். மூன்று உடல்களும் சுரங்கப்பாதை சரிந்த இடத்திலிருந்து 25 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலியானவர்கள் சீன திட்ட மேற்பார்வையாளர் […]