செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – டிரம்பை விட முன்னிலையில் இருக்கும் கமலா ஹாரிஸ்

  • September 2, 2024
  • 0 Comments

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்பை விட ஒரு சதவீதம் முன்னிலையில் இருப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. வால் ஸ்ட்ரீட் சஞ்சிகை நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கமலா ஹாரிஸ் 48 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளார், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 47 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளார். இருப்பினும், இந்த சதவீதம் ஏறத்தாழ 2.5 ஆகவோ அல்லது குறையவோ முடியும் என்று பத்திரிகை சுட்டிக்காட்டுகிறது. டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் […]

வாழ்வியல்

கைவிரலில் சொடக்கு எடுப்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • September 2, 2024
  • 0 Comments

நம்மில் சிலர் சலிப்பாக இருந்தாலோ அல்லது டென்ஷனாக இருந்தாலோ புத்துணர்ச்சிக்காக சொடக்கு எடுக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருப்போம்.. இப்படி சொடக்கு எடுப்பதால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்றும் சொடக்கு எடுக்கும்போது ஏற்படும் சத்தம் எங்கிருந்து வருகிறது என சந்தேகம் நமக்கு இருக்கும். நாம் சுலபமாக மடக்க கூடிய மூட்டுகள் என்றால் அது கை விரல்கள் தான். கை மட்டும் அல்லாமல் நம்மில் பலரும் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் நெட்டை எடுக்கும் பழக்கம் இருக்கும். குறிப்பாக இந்த […]

இலங்கை

இலங்கை இளைஞர்களுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் – ஜனாதிபதி வாக்குறுதி

  • September 2, 2024
  • 0 Comments

இலங்கையில் அடுத்த வருடம் இளைஞர்களுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுயதொழில் பெறுவதற்காக 50 பேருக்கு நிதி நிவாரணங்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சம்மாந்துறை பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்னோக்கி நகர்த்தும் வேலைத் திட்டத்தை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவால் சிக்கல்?

  • September 2, 2024
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மேற்கொண்ட தீர்மானத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் இந்த முடிவில் எந்த சிக்கலும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. வவுனியாவில் நேற்று கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு, சஜித் பிரேமதாசவை ஆதரிக்கவும், பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள அரியநேத்திரனை போட்டியிலிருந்து விலகுமாறு கோரவும் தீர்மானித்தது. இந்தத் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு அறிவித்தார். அதேநேரம், […]

ஆசியா

தாய்லந்தில் பறவை கழிவால் உடைந்து விழுந்த கூரை – நால்வர் காயம்

  • September 2, 2024
  • 0 Comments

தாய்லந்தின் Yasothon வட்டாரத்தில் இருக்கும் Kham Khuean Kaeo எனும் மாவட்டத்தில் திடீரென்று கூரை ஒன்று உடைந்து விழுந்துள்ளது. ஒரு மண்டபத்தில் முக்கிய கண்காட்சி நிகழ்ச்சியின் போது மாணவர்கள், ஆசிரியர்கள், மாவட்ட அதிகாரிகள் பலர் கூடியிருந்தனர். மண்டபம் முழுதும் தூசியாலும் கூரையின் சிதைவுகளாலும் நிரம்பியது. நால்வர் காயமுற்றதாக தெரியவந்துள்ளது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கூரை உடைந்தற்கான காரணம் கூரையின் மீது பறவைகள் சில வெகு காலமாகத் தங்கியிருந்ததாகவும் அவை அங்கு தான் மலம் கழிப்பதாகவும் அது சுத்தம் […]

விளையாட்டு

டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் பிராவோ

  • September 2, 2024
  • 0 Comments

தற்போது நடைபெற்று வரும் கரிபியன் ப்ரீமியர் லீக் தொடருடன் 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார். 40 வயதிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்திவரும் நிலையில், தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்த டுவைன் பிராவோ அதிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டு பிரிமியர் லீக் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுள் ப்ளே ஸ்டோரில் புதிய வசதி அறிமுகம்

  • September 2, 2024
  • 0 Comments

கூகுள் ப்ளே ஸ்டோரின் புதிய அப்டேட் ஒரே நேரத்தில் பல ஆப்களை அப்டேட் செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படும் கூகுள் ப்ளே ஸ்டோரில் பயனர்கள் தங்களுக்கு தேவையான ஆப்களை டவுன்லோடு செய்யலாம். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கூகுள் ப்ளே ஸ்டோர் ஒரே நேரத்தில் 2 ஆப்களை டவுன்லோடு செய்யும் வகையில் வசதி அறிமுகம் செய்தது. இப்போது கூகுள் ப்ளே ஸ்டோரின் புதிய அப்டேட் ஒரே நேரத்தில் பல ஆப்களை அப்டேட் செய்யும் […]

ஆசியா செய்தி

ஸ்பிராட்லி தீவுகள் மீது உரிமை கோரல் – நடுக்கடலில் மோதிக்கொண்ட சீனா, பிலிப்பைன்ஸ்

  • September 2, 2024
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படைக்கு சொந்தமான படகு தங்கள் படகு மீது வந்து மோதியதாக சீனா கடலோர காவல்படை வீடியோ வெளியிட்டுள்ளது. தென் சீன கடலில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய ஸ்பிராட்லி தீவுகள் பகுதியில், படகு மீது வந்து மோதியதாக தெரிவித்துள்ளது. அதே சமயம், சீன படகு தான் தங்கள் படகு மீது வந்து மோதியதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது. இயற்கை வளங்களுக்கு பெயர் பெற்ற ஸ்பிராட்லி தீவுகளை சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தைவான் ஆகிய 4 நாடுகளும் உரிமை கோரிவருகின்றன. […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் 10 மாதங்களின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • September 2, 2024
  • 0 Comments

பிரான்ஸில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 10 மாதங்களாக தொடர் அதிகரிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இம்மாதம் ஓகஸ்ட்டில் எண்ணிக்கை சிறிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சென்ற மாதம் பிரான்சில் 78,509 கைகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதம் அந்த எண்ணிக்கை 78,397 ஆக குறைவடைந்துள்ளது. பிரான்ஸில் கடந்த பத்து மாதங்களாக கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் சென்றிருந்த நிலையில், இந்த மாதம் இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருந்தது. பிரான்சில் 62,021 கைதிகளுக்கான இடங்கள் மாத்திரமே உள்ள நிலையில், […]

ஆசியா செய்தி

ஜப்பானில் தனிமையில் வாடும் முதியோர்களின் பரிதாப நிலை

  • September 2, 2024
  • 0 Comments

ஜப்பானில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுமார் 37,000ற்கும் அதிகமான முதியோர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் இந்த விடயத்தை தெரிவிக்கின்றன. குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முதியோர்களே அதிகளவில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் 4,000 பேர் இறந்து ஒரு மாதத்தின் பின்னரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அத்துடன் ஜப்பானில் தனிமையில் வாழும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.