வட அமெரிக்கா

அமெரிக்காவுக்கான தமது இலக்குகள் – பரபரப்பு விவாதத்தில் இறுதிக் கருத்துகள்

  • September 11, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும் முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்பும் நேரடி விவாதத்தில் இறுதிக் கருத்துகளை முன்வைத்தனர். ஹாரிஸ், அமெரிக்காவுக்கான தமது இலக்குகளுக்கும் ட்ரம்ப்பின் இலக்குகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முன்பு கூறியது போல் தாம் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவதாகவும் ட்ரம்ப் இறந்த காலத்தில் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார். திருவாட்டி ஹாரிஸ் தாம் கவனம் செலுத்தவிருக்கும் கொள்கைகளைப் பற்றியும் பேசினார். கருக்கலைப்பு உரிமை அவற்றுள் ஒன்றாகும். ஹாரிஸின் கொள்கைளில் […]

பொழுதுபோக்கு

தளபதியின் முதல் கட்சி மாநாடு நடைபெறுமா? விஜய்யை சுற்றி மிகப்பெரிய சதி

  • September 11, 2024
  • 0 Comments

இந்த வருடம் மீடியாக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது விஜய் தான். கட்சி ஆரம்பித்ததில் தொடங்கி மாணவர்களுக்கான பரிசு வழங்குதல், கோட் ரிலீஸ் என அவர் பிஸியாக இருந்தார். இதை அடுத்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது அவருடைய முதல் கட்சி மாநாடை தான். அதன்படி சமீபத்தில் தன்னுடைய கட்சியின் கொடி, பாடல் ஆகியவற்றை விஜய் அறிமுகப்படுத்தினார். அதை தொடர்ந்து முதல் கட்சி மாநாடு விக்ரவாண்டியில் செப்டம்பர் 23 நடைபெறும் என்ற தகவலும் கசிந்தது. அதற்கான அனுமதி, மாநாட்டிற்கான ஏற்பாடு என […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் அமுலாகும் திட்டம் – வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • September 11, 2024
  • 0 Comments

பிரித்தானியா தனது மின்னணு பயண அங்கீகார (ETA) திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, பெரும்பாலான நாடுகளில் இருந்து பயணிகள் அனுமதி பெற வேண்டும் மற்றும் நாட்டிற்குள் நுழைவதற்கு முன் 10 பவுண்ட் கட்டணம் செலுத்த நேரிடும். தற்போது கத்தார், பஹ்ரைன், குவைத், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். எனினும் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மற்ற அனைத்து ஐரோப்பியர் அல்லாத […]

உலகம் செய்தி

உலகின் மிகக் கடினமான programming போட்டியில் தங்கம் வென்ற இந்திய வம்சாவளி இளைஞன்

  • September 11, 2024
  • 0 Comments

உலகிலேயே மிகக் கடினமாகக் கருதப்படும் programming எனப்படும் நிரலாக்கப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அகஸ்தியா கோயெல் தங்கம் வென்றுள்ளார். எகிப்தில் நடந்த அனைத்துலகத் தகவலியல் போட்டியில் மொத்தம் 34 மாணவர்கள் தங்கம் வென்றுள்ளார். அவர்களில் அகஸ்தியாவும் ஒருவர். அகஸ்தியா 600க்கு 438.97 மதிப்பெண்களைப் பெற்று போட்டியில் 4ஆவது இடத்தைப் பிடித்திருந்தார். சீனாவைச் சேர்ந்த காங்யாங் சோ (Kangyang Zhou) முழு மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்ததாக Hindustan Times நாளேடு குறிப்பிட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் […]

ஆசியா

சீனாவின் பல் சிகிச்சையால் பலியான நபர்

  • September 11, 2024
  • 0 Comments

பல் சிகிச்சை காரணமாக நபர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சீனாவின் ஜெஜயாங் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபருக்கு ஒரே நாளில் 23 பற்களை அகற்றி, 12 பற்களை மீண்டும் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் 13 நாட்களின் பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் உயிரிழந்த நபருக்கு ஒரு பல்லினை பொருத்துவதற்கு இலங்கை மதிப்பில் சுமார் 60,920 ரூபாய் வரையில் செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொழுதுபோக்கு

“நாளை என்பது நிச்சயமில்லை” விபத்தில் சிக்கினார் ராஷ்மிகா மந்தனா

  • September 11, 2024
  • 0 Comments

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் ’நமக்கு நாளை என்பது இருக்குமா என்றே தெரியாது, எனவே நம்மை நாம் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்தை பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா தற்போது பொலிவுட் முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பதும், பொலிவுட்டில் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இந்திய அளவில் அவரது மார்க்கெட் உச்சத்திற்கு சென்று […]

வாழ்வியல்

தினம் 4 நிமிடம் போதும்… தொப்பையை குறைக்கும் பயிற்சி

  • September 11, 2024
  • 0 Comments

உடல் பருமனையும் தொப்பை கொழுப்பையும் குறைப்பது மிகவும் சவாலானது தான். அதற்கு தவறாமல் தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். இருப்பினும், தொப்பையை கரைக்கும் சக்தி வாய்ந்த பயனுள்ள எடை இழப்பு பயிற்சியான பிளாங்க் (Plank) என்னும் உடல் பயிற்சி மூலம், ஒரே மாதத்தில் தொப்பையை மளமள என குறைக்கலாம். இந்த பயிற்சி செய்ய எந்த தனிப்பட்ட சாதனமும் தேவையில்லை. எந்த ஒரு இடத்திலும் இந்த பயிற்சியை செய்ய முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. தொப்பை கொழுப்பை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அனுபவம் தேவையில்லாத நூற்றுக்கணக்கான வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு

  • September 11, 2024
  • 0 Comments

Amazon Australia வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான அனுபவமற்ற வேலைகளுக்கு பணியமர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஒன்லைன் மார்க்கெட்டிங் நிறுவனமான Amazon வாடிக்கையாளர் ஓர்டர்களை பிக்கிங், பேக்கிங் மற்றும் ஷிப்பிங் போன்ற வேலைகள் சேர்க்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை என்பதும், நெகிழ்வான சேவை வாய்ப்புகளை வழங்குவதும் ஒரு சிறப்பம்சமாகும். கருப்பு வெள்ளி உட்பட, வரவிருக்கும் முக்கிய ஷாப்பிங் சீசனுக்கான தயாரிப்புக்காக நாடு முழுவதும் உள்ள நிறுவனத்தின் விநியோக மையங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. சிட்னி, […]

செய்தி

Energy Drinks குடிப்பவர்களுக்கு ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • September 11, 2024
  • 0 Comments

Energy Drinks எனப்படும் பானங்களில் மறைந்திருக்கும் ஆபத்துகள் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். Energy Drinksகளில் caffeine செறிவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு நாளைக்கு ஒரு நபர் குடிக்க வேண்டிய அளவு caffeine இருப்பதால், அதை விட அதிகமாக பயன்படுத்துவது பொருத்தமற்றது என்று வலியுறுத்தப்படுகிறது. ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ உதவி பேராசிரியரான லீனா வென், எவ்வளவு caffeine உட்கொள்வது பொருத்தமானது என்பது குறித்த […]

உலகம் செய்தி

பிரேசிலுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு – நெருக்கடியில் அதிகாரிகள்

  • September 11, 2024
  • 0 Comments

பல்லாயிரக்கணக்கானோர் பிரேசிலுக்கு புலம்பெயரத் தொடங்கியுள்ளனர். வெனிசுலா ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி ஒருபுறம் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், மறுபுறம் அண்டை நாடான பிரேசிலுக்கு புலம்பெயரத் தொடங்கியுள்ளனர். கைது நடவடிக்கைக்கு அஞ்சி அந்நாட்டின் முக்கிய எதிர்கட்சி தலைவரான கொன்சாலஸும் ஸ்பெயினில் தஞ்சமடைந்துள்ளார். இந்த நிலையில் உலக நாடுகள் தங்களை கைவிட்டுவிட்டதாக வெனிசுலா மக்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து கடந்த 3 மாதங்களில் பிரேசிலுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்துவருகிறது. பிரேசிலின் எல்லையோர நகரமான பராகைமாவில் உள்ள ஐ.நா. […]