செய்தி மத்திய கிழக்கு

போர் நிறுத்த யோசனைக்கு இணக்கம் வெளியிட்ட இஸ்ரேல்

  • August 20, 2024
  • 0 Comments

போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட பிரேரணையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஆண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார். இந்த வாரத்தில் ஹமாஸுடன் இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் உடன் அமெரிக்க இராஜாங்க செயலாளர் நேற்று கலந்துரையாடியுள்ளார். பணயக்கைதிகளை விடுவிப்பதும் போர் நிறுத்தமும் காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

பொழுதுபோக்கு

நாகார்ஜுனாவிடம் கண் கலங்கிய சமந்தா… ஓபனாக பேசிய பத்திரிகையாளர்

  • August 20, 2024
  • 0 Comments

நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சமந்தா தன்னுடைய கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்து அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்த அவர் குட்டி பிரேக் எடுத்தார்.சூழல் இப்படி இருக்க நாக சைதன்யா நடிகை சோபிதாவை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். சமந்தாவின் கரியர் கிராஃப் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் கோவிட் நோயின் நீண்டகால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு

  • August 20, 2024
  • 0 Comments

கோவிட் நோயின் நீண்டகால நிலை காரணமாக ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் 10 பில்லியன் டொலர்களை இழந்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு மருத்துவ இதழால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் மட்டும், நாள்பட்ட கோவிட் நோயாளிகளால் பொருளாதாரத்திற்கு சுமார் 10 மில்லியன் வேலை நேரம் இழந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மெல்போர்ன் பல்கலைக்கழகம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட 3 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு இந்த ஆய்வுக்காக ஒன்றிணைந்துள்ளது. கோவிட் நோயின் நீண்டகால […]

செய்தி வாழ்வியல்

தினமும் தலைக்கு குளித்தால் தலைமுடி வளருமா?

  • August 20, 2024
  • 0 Comments

வெயிலோ, மழையோ, குளிரோ நீங்கள் தினசரி தலைக்கு குளிக்கும் பழக்கம் உள்ளவரா? அல்லது எவ்வளவு வெயில் அடித்தாலும், வியர்த்து ஒழுகினாலும் 3, 4 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் தலைமுடியை கழுவுவீர்களா? வழக்கமாக நீங்கள் எவ்வளவு நாளைக்கு ஒருமுறை தலைக்கு குளிக்க வேண்டும்? அதிலும் வியர்த்து ஒழுகும் வெப்பமான மாதங்களில்… உங்கள் தலைமுடியை எவ்வளவு அடிக்கடி சுத்தம் செய்வது, என்பது குறித்து நிபுணரிடம் நாங்கள் ஆலோசனை கேட்டோம். நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் […]

இலங்கை

இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

  • August 20, 2024
  • 0 Comments

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களையும் அடுத்த 3 மாதங்களுக்குள் இரத்துச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் இதனை தீர்மானித்துள்ளது. பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தையும் இரத்துச் செய்வதன் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அச்சிட முடியாமல் குவிந்து கிடக்கும் 3 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணி அடுத்த சில மாதங்களுக்குள் […]

உலகம் செய்தி

வடகொரியாவுக்கு அமெரிக்காவுடன் இணைந்து பதிலடி கொடுக்க தயாராகும் தென்கொரியா

  • August 20, 2024
  • 0 Comments

அமெரிக்க மற்றும் தென்கொரியப் படைகள் இணைந்து, 10 நாள் கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன. வடகொரியாவின் அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் சைபர் தாக்குதல் மிரட்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ம் திகதி வரை நடைபெற உள்ள கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம் முன், ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நிலையில், போர் ஒத்திகை போன்ற இந்த கூட்டுப் பயிற்சியை நிறுத்த வேண்டும் என்று […]

இந்தியா

இந்தியாவில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கம்

  • August 20, 2024
  • 0 Comments

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் இன்று காலை இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ரிக்டர் அளவுகோலில் 4.9 மற்றும் 4.8 என்ற அளவில் இரண்டு வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலைமையை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் விமானம் – புல்லில் சிக்கிய சக்கரம்

  • August 20, 2024
  • 0 Comments

டோக்கியோவிலிருந்து ஸூரிக் சென்றுகொண்டிருந்த சுவிஸ் ஏர்லைன்ஸின் Boeing 777 விமானம் கஸக்ஸ்தானில் அவசரமாகத் தரையிறங்கியது. சனிக்கிழமை விமானத்தில் மருத்துவ ஆலோசனை தேவைப்படும் சம்பவம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியபோது அதன் மூக்குப்பகுதியில் இருக்கும் சக்கரம் புல்லில் சிக்கிக் கொண்டுள்ளது. அதனால் அதை ஓடுபாதையில் இழுத்துச் செல்ல நேரிட்டது. விமானம் சேதத்துக்காகச் சோதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் பயணம் சென்றுகொண்டிருந்த 319 பயணிகளுக்குக் காயம் ஏற்படவில்லை.

விளையாட்டு

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

  • August 20, 2024
  • 0 Comments

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளைய தினம் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸாக் கிராலி அணியில் இடம்பெறவில்லை. வேகப் பந்துவீச்சாளர் மேத்யூ பாட்ஸ் நீண்ட இடைவெளிக்குப் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

WhatsApp அறிமுகம் செய்யும் புதிய வசதி

  • August 20, 2024
  • 0 Comments

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக பயனர் பாதுகாப்பை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்பேம் பிளாக்கர் என்ற வசதியை சோதனை செய்து வருகிறது. இதன் மூலம் தெரியாத நம்பர், அக்கவுண்ட்களில் இருந்து வரும் மெசேஜ், கால்களை தானாகவே ப்ளாக் செய்யப்படுகிறது. இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது. எப்படி எனெபிள் […]

error: Content is protected !!