வட அமெரிக்கா

அமெரிக்காவின் முன்னணி நிறுவனத்தின் திடீர் தீர்மானம் – அதிர்ச்சியில் 18,000 ஊழியர்கள்

  • August 2, 2024
  • 0 Comments

இன்டெல் 15% சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை அதாவது சுமார் 18,000 ஊழியர்களை பணிநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்கவின் சிப் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான‘இன்டெல்’ தற்போது சாம்சங், டிஎஸ்எம்சி, எஸ்கே ஹைனிக்ஸ் போன்ற பல சிப்கள் தயாரிக்கும் தற்போது வந்தாலும், இன்டெல் சிப்க்கான தனித்துவம் என்பது இன்று வரை இருந்து வருகிறது. ஆனால், ஏஐ சிப்களுக்கான சந்தையில் இன்டெல்லின் பின்தங்கி இருப்பதால் இந்த ஆண்டில் இதுவரை அதன் பங்குகள் 40% சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்துள்ளது. இந்த பெரும் சரிவை […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் பரவும் நோய் தொற்று – முதலாவது மரணம் பதிவாகியது

  • August 2, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியா – மெல்போர்ன் முழுவதும் பரவி வரும் Legionnaires’ நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மெல்போர்ன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். 90 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் விக்டோரியா மாநில சுகாதார அதிகாரிகள் மெல்போர்னின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் Legionnaires நோய் பரவி வருவதாக தெரிவித்துள்ளனர். விக்டோரியாவின் தலைமை சுகாதார அதிகாரி கிளாரி லூக்கர் கூறுகையில், கடந்த செவ்வாய்கிழமை அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுவரை, மாநிலத்தில் 60 உறுதிப்படுத்தப்பட்ட Legionnaires நோய் பதிவாகியுள்ளது, […]

இலங்கை செய்தி

இலங்கை பயணத்தை திடீரென இரத்து செய்த மோடி!

  • August 2, 2024
  • 0 Comments

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் இது தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் புதுடில்லியில் உள்ள தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நேற்றையதினம் இலங்கைக் கடற்படையினரின் படகு மோதியதால் இந்திய மீனவர் படகொன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் பலியான சம்பவம் பதிவாகியிருந்தது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் இந்திய வெளியுறவு […]

உலகம் செய்தி

துருக்கி உளவுத்துறை முயற்சி – 26 சிறை கைதிகள் பரிமாற்றம்

  • August 2, 2024
  • 0 Comments

துருக்கி நாட்டு உளவுத்துறை மேற்கொண்ட முயற்சியால், 26 சிறை கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உட்பட 7 நாடுகளுக்கு இடையே 26 சிறை கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றது. ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க பத்திரிகையாளர் இவான் கெர்ஷ்கோவிச், முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் பால் வீலன் உள்பட 3 பேர் அமெரிக்கா திரும்பினர். அதேபோல் வெவ்வேறு நாட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்யர்கள் 10 பேரும், ஜெர்மனி நாட்டவர் 13 பேரும், துருக்கிக்கு அழைத்து வரப்பட்டு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதவும் கூகுள் மேம்ஸ்!

  • August 2, 2024
  • 0 Comments

நாம் பயணம் மேற்கொள்ளும் போது, வழித்தடம் பற்றிய தகவல்களை அறிய, அருகில் இருக்கும் கடைகள் அல்லது சாலையில் செல்லும் நபர்களிடம், எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்போம். ஆனால் அந்தக் காலம் எல்லாம் போய்விட்டது. கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். கூகுள் மேப்ஸ் உதவியுடன் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். அவ்வப்போது கூகுள் தவறான வழி காட்டுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், கூகுள் மேப்ஸ் (Google Maps), பொதுவாக சிறந்து வழிகாட்டியாகவே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில், […]

விளையாட்டு

இலங்கை – இந்திய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று!

  • August 2, 2024
  • 0 Comments

இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஏலவே சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இருபதுக்கு 20 தொடரில் இலங்கையை 3-0 என வீழ்த்தியது. தற்போது ரோஹித் ஷர்மா மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்குத் தலைவராகத் திரும்பியுள்ளார். சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுகிறார். விராட் கோஹி, […]

இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – மூடிய அறையில் மீண்டும் சந்தித்த ரணில் – மஹிந்த

  • August 2, 2024
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு – விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று இரவு 7 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு மூடிய அறைச் சந்திப்பாக அமைந்திருந்தாக கூறப்படுகிறது. சுமார் 1 மணி நேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனி செல்ல காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • August 2, 2024
  • 0 Comments

ஜெர்மனி பாரிய வரிக் குறைப்பை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதிக வெளிநாட்டு தகுதி வாய்ந்த நிபுணர்களை நாட்டிற்கு ஈர்க்கும் முயற்சியில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “வளர்ச்சி முன்முயற்சி” என்று அழைக்கப்படுவதன் ஒரு பகுதியாக, ஜேர்மன் அரசாங்கம் புதிதாக வந்துள்ள வெளிநாட்டுத் தகுதி வாய்ந்த தொழிலாளர்களுக்கு நாட்டில் முதல் மூன்று வருட வேலைவாய்ப்பிற்கான வரியிலிருந்து ஓரளவு விலக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் பற்றாக்குறையை ஜெர்மனி கையாள்வதால் வரி நிவாரணம் மிகவும் தேவைப்படுகிறது. […]

ஆசியா

சிங்கப்பூரில் 20 வயதுடைய யுவதியின் அதிர்ச்சி செயல் – 5 கார்கள் திருட்டு

  • August 2, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் 4 பேருடன் இணைந்து 20 வயதுடைய யுவதி ஒருவர் 5 கார்களைத் திருடியுள்ளார். குறித்த யுவதிகக்கு 18 மாதங்கள் நன்னடத்தை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் நூர் அமிரா முகமது பௌசிக்கு என்ற குறித்த பெண்ணுக்கு 18 வயதாகும். நன்னடத்தை உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அமிரா இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். 60 மணி நேரத்திற்கு அவர் சமூகச் சேவை செய்ய வேண்டும். 2022ஆம் ஆண்டு […]

இலங்கை செய்தி

இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 6 பேர் அதிரடியாக கைது

  • August 2, 2024
  • 0 Comments

குடிவரவு நிபந்தனைகளை மீறி செல்லுபடியான வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 06 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பயாகல பிரதேசத்தில் வைத்து குறித்த 06 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சீனர்கள் எனவும் அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20, 22, 24, 27, 39 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் சந்தேகநபர்களில் 48 வயதுடைய பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.