இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 6 பேர் அதிரடியாக கைது

குடிவரவு நிபந்தனைகளை மீறி செல்லுபடியான வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 06 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயாகல பிரதேசத்தில் வைத்து குறித்த 06 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சீனர்கள் எனவும் அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20, 22, 24, 27, 39 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகநபர்களில் 48 வயதுடைய பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
(Visited 18 times, 1 visits today)