இலங்கையில் பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் ; 17 மாணவர்கள் உட்பட 18 பேர் கைது
மொனராகலை, தனமல்வில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் 17 மாணவர்களும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார். குறித்த மாணவி தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவரொருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த மாணவன் இந்த மாணவியை ஏமாற்றி மற்றுமொரு மாணவனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். […]













