இலங்கை

இலங்கையில் பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் ; 17 மாணவர்கள் உட்பட 18 பேர் கைது

மொனராகலை, தனமல்வில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் 17 மாணவர்களும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த மாணவி தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவரொருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த மாணவன் இந்த மாணவியை ஏமாற்றி மற்றுமொரு மாணவனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது, இந்த வீட்டிலிருந்த மாணவர்கள் சிலர் இந்த மாணவிக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்து மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதோடு அதனைக் காணொளிகளாக பதிவு செய்துள்ளனர்.

பின்னர், அந்த மாணவர்கள் காணொளிகளைக் காண்பித்து இந்த மாணவியை அச்சுறுத்தி சுமார் ஒரு வருட காலமாக 7 முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபருக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் தெரியவந்துள்ள நிலையில் பாடசாலையின் பெயருக்கு இழிவு ஏற்படுவதால் அவர்கள் இதனை மறைக்க முயன்றுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தை மறைத்த பாடசாலை அதிபரிடம் வாக்குமூலம் பெற்ற பொலிசார் 17 பாடசாலை மாணவர்களையும் அவர்களுக்கு உதவிய பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் குழந்தைக்கு அச்சத்தை ஏற்படுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குழந்தையின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் ஹம்பாந்தோட்டை பொலிஸ் மற்றும் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவி வைத்திய பரிசோதனைக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்