இலங்கை செய்தி

இலங்கை வந்துள்ள பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா

  • July 8, 2024
  • 0 Comments

பிரபல இந்திய நடிகர் விஜய் தேவரகொண்டா இலங்கை வந்துள்ளார். இந்தியாவின் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் விஜய் தேவரகொண்டா இலங்கை வந்துள்ளார். தற்போது விஜய் தனது 12வது படத்தில் நடித்து வரும் இப்படத்திற்கு ‘VD12’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி விஜய் படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ளார். இலங்கையில் இயற்கை எழில் சூழ்ந்துள்ள பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெர்சி’ படத்தை இயக்கிய கௌதம் தினூரி இந்தப் படத்தை இயக்குகிறார்.

இலங்கை செய்தி

நாளை பாடசாலைகளை நடத்துவது குறித்து சிறப்பு அறிவிப்பு

  • July 8, 2024
  • 0 Comments

நாளை (09) பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அறிவிப்பு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாளை அனைத்து அரசு பாடசாலைகளும் வழக்கம் போல் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 200க்கும் மேற்பட்ட அரச சேவை தொழிற்சங்கங்கள் இன்றும் (8ம் திகதி) நாளையும் (09ம் திகதி) சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை சுகயீன விடுமுறையை அறிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் […]

விளையாட்டு

சமூக வலைத்தளத்தில் சாதனை படைத்த விராட் கோலி

  • July 8, 2024
  • 0 Comments

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. உலகக்கோப்பையை வென்ற புகைப்படத்தை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் 21.07 மில்லியன் லைக்குகளை கடந்து ஆசியாவிலேயே அதிக லைக் வாங்கிய புகைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. ஆசியாவில் அதிக லைக்குகள் வாங்கிய இன்ஸ்டாகிராம் பதிவு என்ற BTS உறுப்பினர் V-ன் சாதனையை விராட் கோலி முறியடித்தார். […]

இலங்கை செய்தி

அதுருகிரியில் துப்பாக்கிச் சூடு – தப்பியோடிய வேன் மீட்பு

  • July 8, 2024
  • 0 Comments

அத்துருகிரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய வேன் ஒன்று புலத்சிங்கள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (08) மாலை 6.15 மணியளவில் 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் புலத்சிங்கல, அயகம, டெல்மெல்ல பிரதேசத்தில் வெறிச்சோடிய காணி ஒன்றில் வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அயகமவில் இருந்து புலத்சிங்கள நோக்கி வேன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வேனில் முன் மற்றும் பின் இலக்கத் தகடுகள் இல்லை எனவும், வருமான அனுமதிப் […]

ஐரோப்பா

மோடியின் ரஷ்ய வருகை: மேற்கு நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட தகவல்

ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் மோடியின் வருகை மேற்கு நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் ரஷிய பயணத்தை மேற்கு நாடுகள் உன்னிப்பாகவும், பொறாமையுடனும் கவனித்து வருவதாக, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

இலங்கை

இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள ஆப்பிரிக்க சர்வல் பூனை!

  • July 8, 2024
  • 0 Comments

ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து Aeroflot விமானம் SU-288 மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) விமான சரக்கு முனையத்திற்கு ஆப்பிரிக்க சர்வல் பூனை ஒன்று கொண்டுவரப்பட்டதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உரிய அனுமதியின்றி இந்தப் பூனையை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த காட்டுப் பூனை இனம் CITES (காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிந்துவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் பற்றிய மாநாடு) மூலம் பாதுகாக்கப்பட்ட […]

பொழுதுபோக்கு

GOAT படத்திற்கு போட்ட காசை ப்ரீ சேலில் எடுக்கும் AGS – மொத்தம் எவ்வளவு தெரியுமா?

  • July 8, 2024
  • 0 Comments

GOAT படம் விஜய் இதுவரைக்கும் தேர்ந்தெடுக்காத சயின்ஸ் பிக்சன் கதை என்பது எல்லோருக்கும் தெரியும். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு விஜய் சினேகாவுடன் கெமிஸ்ட்ரி ஏற்படுத்தி இருப்பது படத்தின் பெரிய பாசிட்டிவாக இப்போது அமைந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என பழைய ஹீரோக்கள் எல்லோரையும் ஒன்று கூட்டி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து விட்டார்கள். இதனாலேயே GOAT படத்தின் பிசினஸ் எகிறி விட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள வர்ஷனின் GOAT […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

கரடிகளுடனும், ஓநாய்களுடனும் வாழும் உலகின் தனிமைப்படுத்தப்பட்ட நபர்!

  • July 8, 2024
  • 0 Comments

உலகின் தனிமையான மனிதர் என்று அழைக்கப்படும் ஒருவர் கரடிகளுடனும், ஓநாய்களுடனும் சைபீரிய மழைக்காடுகளில் இரண்டு தசாப்தங்களாக வாழ்ந்து வருகிறார். சைபீரியாவின் யாகுட்ஸ்கில் பனி மூடிய மரங்களுக்கு மத்தியில் வசிக்கும் சாமுயிலின் இடத்தை அடைய ஒருநாளைக்கு 05 மணிநேரம் பயணம் செய்ய வேண்டும். 67 வயதான அவர் தனது செல்ல நாய்களுடன் ஒரு மரத்தாலான குடிசைக்குள் வாழ்ந்து வருகிறார். அவர் தனது அன்றாட நடைப்பயணங்களில் எடுக்கும் பொருட்களின் உதவியுடன் தனது வீட்டைக் கட்டினார், அவரது ஜன்னல்கள் வெறும் செலோபேன் […]

இலங்கை

இலங்கை: மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

  • July 8, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (08) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். குறித்த கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொதுமக்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர். எவ்வாறாயினும், சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு […]

ஆசியா

பாகிஸ்தானில் பங்குச் சந்தை கட்டடத்தில் தீ விபத்து ; நிறுத்தி வைக்கப்பட்ட வர்த்தகம்

  • July 8, 2024
  • 0 Comments

பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வர்த்தகம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. கராச்சியில அமைந்துள்ள பாகிஸ்தான் பங்குச்சந்தை கட்டத்த்தின் நான்காவது மாடியில் திங்கள் கிழமை முற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது. பங்கு சந்தை கட்டடத்தில் இருந்த அனைவரையும் மீட்புப் படையினர் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் வர்த்தகம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. முதலில் பாகிஸ்தான் பங்கு சந்தை கட்டட்த்தின் […]