சமூக வலைத்தளத்தில் சாதனை படைத்த விராட் கோலி

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
உலகக்கோப்பையை வென்ற புகைப்படத்தை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த புகைப்படம் 21.07 மில்லியன் லைக்குகளை கடந்து ஆசியாவிலேயே அதிக லைக் வாங்கிய புகைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
ஆசியாவில் அதிக லைக்குகள் வாங்கிய இன்ஸ்டாகிராம் பதிவு என்ற BTS உறுப்பினர் V-ன் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
V பதிவிட்டிருந்த தனது செல்லப்பிராணியின் புகைப்படங்கள் 21.01 மில்லியன் லைக்குகள் பெற்றிருந்த நிலையில், விராட் கோலி பதிவிட்ட டி20 உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்ட புகைப்படங்கள் 21.07 மில்லியன் லைக்குகள் பெற்றுள்ளது.
(Visited 31 times, 1 visits today)