யாழில் பிறந்தநாளன்று இராணுவ வாகனம் மோதி உயிரிழந்த யுவதி
பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இன்று உயிரிழந்துள்ளார். வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார். புத்துர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியை கடப்பதற்காக குறித்த யுவதி வீதியோரம் நின்றுள்ளார். இதன்போது, யுவதி நின்ற கரைக்கு மறுகரையாக- எதிர்திசையில் புத்தூர் சந்தியிலிருந்து இராணுவ உயரதிகாரிகள் பயணித்த வான் வேகமாக வந்தது. வீதியின் இடது கரையில் சென்ற இந்த வாகனம் வீதியின் வலதுகரையில் […]













