பாகிஸ்தானில் 8 நீதிபதிகளுக்கு எதிராக ரசாயனம் தடவிய கொலை மிரட்டல் கடிதங்கள்!
பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஐகோர்ட்டில் 8 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் அச்சுறுத்தல் கடிதங்கள் வந்துள்ளன. ரெஷாம் என்ற பெண் பெயரில் அந்த கடிதங்கள் வந்துள்ளன. இதில், தலைமை நீதிபதி ஆமிர் பரூக் உள்பட ஒவ்வொரு நீதிபதியையும் குறிப்பிட்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. கடிதத்தின் வெளியே, வெள்ளை நிறத்தில் ரசாயன பொடி தடவப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக, அந்த கடிதங்களை திறக்க வேண்டாம் என்று நீதிபதிகளின் பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் […]













