இலங்கை

இலங்கை : கம்பஹாவில் துப்பாக்கிச்சூடு!

  • April 8, 2024
  • 0 Comments

கம்பஹா கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று (திங்கட்கிழமை) மாலை இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசியா

காஸாவிற்கு 10 மில்லியன் லிட்டர் எரிபொருளை அனுப்பும் ஈராக்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக காசா பகுதிக்கு 10 மில்லியன் லிட்டர் எரிபொருளை அனுப்ப ஈராக் ஒப்புக்கொண்டதாக பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி தெரிவித்தார். காஸாவிலிருந்து காயமடைந்த பாலஸ்தீனியர்களைப் பெற்றுக் கொள்ளவும், அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவும் ஈராக் ஒப்புக்கொண்டது என, பிரதமர் ஒரு அறிக்கையில் மேலும் கூறினார். எரிபொருள் பற்றாக்குறையால் மருத்துவமனைகள், தண்ணீர் அமைப்புகள், பேக்கரிகள் மற்றும் நிவாரணப் பணிகள் முடங்கியுள்ளன.

இந்தியா

இந்தியாவில் 120 அடி தேர் சரிந்து விழுந்தது விபத்து!

  • April 8, 2024
  • 0 Comments

பெங்களூரு ஆனைக்கல் அருகே புகழ் பெற்ற மதுராம்மா கோயிலின் 120 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேரானது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஆலயத்தில் நடைபெற்று வரும் திருவிழாவினைக் காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று 120 அடி உயரம் கொண்ட தேரை பொதுமக்கள் நகர் பகுதிகளில் இழுத்துச் சென்றுள்ள நிலையில் தேர் எதிர்பாராத விதமாக சரிந்து விபத்துக்குள்ளானது. இதன்போது தேர் […]

இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நெருக்கடி: புதிய நியமனம் தொடர்பில் மைத்திரி தரப்பு கடும் கண்டனம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவர் ஒருவரை நியமிப்பதற்காக இன்று நடைபெற்ற அரசியல் கூட்டம் சட்டவிரோதமானது என அக்கட்சியின் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பங்குபற்றுதலுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டார். […]

இலங்கை

இலங்கை : மலையகத்தில் 120 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

  • April 8, 2024
  • 0 Comments

நல்லதண்ணியா கோவிலில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட சிறுவர்கள் உட்பட தோட்டத் தொழிலாளர்கள் உணவு விஷமாகியமையால் 120 பேர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவிலின் தஞ்சை ஒன்றில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட மக்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கமடைந்து மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 25 பேர் பிரதேச வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்கள் சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறியதாகவும் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொது சுகாதார பரிசோதகர்கள் உணவு மாதிரிகளை […]

ஆசியா

லெபனான் – இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் பதற்றம்: ஹெஸ்பொல்லாவின் களத் தளபதி இஸ்ரேல் தாக்குதலில் பலி

திங்கட்கிழமை அதிகாலை தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல் நடத்தியதில் ஹெஸ்பொல்லாஹ் என்ற பெரும் ஆயுதம் ஏந்திய லெபனான் குழுவின் களத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டார். காசா போருக்கு இணையாக லெபனானின் தெற்கு எல்லையில் ஹெஸ்பொல்லாவும் இஸ்ரேலிய இராணுவமும் துப்பாக்கிச் சூடுகளை நடத்திவருகின்றன. இது ஒரு பரந்த பிராந்திய மோதலுக்கான அச்சத்தை அதிகரிக்கிறது. திங்கட்கிழமை அதிகாலை, இஸ்ரேலிய போர் விமானங்கள் அல்-சுல்தானியா கிராமத்தைத் தாக்கி, ஹெஸ்பொல்லாவின் உயரடுக்கு ரட்வான் பிரிவுகளில் ஒரு களத் தளபதியையும் மற்ற இரண்டு பேரையும் […]

ஆசியா

ஜப்பானில் இன்று ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவான நிலநடுக்கம்

  • April 8, 2024
  • 0 Comments

ஜப்பான் நாட்டின் மியசாகி மாகாணத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்சீன கடலில் ஒசுமி தீபகற்பத்தில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 10.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மியசாகி மாகாணத்தின் ஒருசில பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்தியா

பள்ளி மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள்.. தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!

  • April 8, 2024
  • 0 Comments

உடுப்பியில் பள்ளி மாணவிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், உடுப்பியில் உள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவிகள், குழந்தைகள் நலத்துறையிடம் தங்களது தலைமை ஆசிரியர் ராஜேந்திர ஆச்சார் என்பவர் குறித்து புகார் செய்தனர். தங்களை உடல் ரீதியாக பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து குழந்தைகள் நலத்துறை நடத்திய விசாரணையில் மாணவிகளின் புகார் உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர் மீது கார்கலா […]

இலங்கை

இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை

  • April 8, 2024
  • 0 Comments

ஹொரண, மொரகஹாஹேன, மாலோஸ் சந்தியில் நேற்று (07) இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் இன்று (08) அதிகாலை பாதுக்க – அங்கமுவ பிரதேசத்தில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டு கொல்லப்பட்ட நபர் 33 வயதுடையவர் எனவும், இலங்கை விமானப்படையின் இரத்மலானை முகாமில் கடமையாற்றும் கோப்ரல் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் கார் பாதுக்கை நோக்கி சென்றதை பொலிஸார் கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு

பணய கைதிகளை விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது – பிரதமர் நெதன்யாகு

  • April 8, 2024
  • 0 Comments

காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், […]