உலகம்

சீன ஜனாதிபதிக்கு உடல்நலக் குறைவு – டெல்லியில் வழங்கப்பட்ட உணவு குறித்து சந்தேகம்

டெல்லியில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இரவு விருந்தில் கலந்துகொள்ளாமல், அவசரமாக சீனாவுக்குத் திரும்பிய சீன ஜனாதிபதி  ஷி ஜின்பிங்கின் உடல்நிலை குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்றில் இருந்து அவர் பொதுவெளியில் காணப்படாததே இந்த சந்தேகங்களுக்கு காரணம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உச்சிமாநாட்டின் காணொளிக் காட்சிகளில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை இடைநிறுத்தி ஷியின் உடல்நிலையை விசாரிப்பது காட்டப்பட்டது.

இருப்பினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அதிகாரிகள் பழுதடைந்த மொழிபெயர்ப்புக் கருவிக்கு மோடி பதிலளித்ததாக தெரிவித்தனர்.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள  உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, 73 வயதான சீனத் தலைவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதாகவும், அவசர சிகிச்சைக்காக அவர் பெய்ஜிங்கிற்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து  இம்மாதம் 24 ஆம் திகதி  டொனால்ட் ட்ரம்புடன் நடத்தவிருந்த சந்திப்பு குறித்தும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதேவேளை டெல்லியில் நடந்த உச்சிமாநாட்டிலிருந்து திரும்பிய தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ ஆலோசனையின் பேரில் அவர் தற்காலிகமாக பொதுப் பணிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு சம்பவங்களைத் தொடர்ந்து  உச்சிமாநாட்டில் வழங்கப்பட்ட உணவுக் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்