இலங்கை

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த இலங்கையர்கள் விடுதலை!

  • April 11, 2024
  • 0 Comments

மியான்மரில், சைபர் பயங்கரவாத குழுக்களின் பிடியில் சிக்கியிருந்தவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த  8 இலங்கையர்களும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். எதிர்வரும் சில தினங்களில் அவர்கள் இலங்கை வரவுள்ளதாக தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மியன்மாரில் உள்ள தாய்லாந்து நட்புறவுப் பாலம் ஊடாக இன்று காலை மியன்மார் குடிவரவு அதிகாரிகள் குழுவை கையளித்ததாகவும் அவர் கூறினார். அதன்படி தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் குறித்த இலங்கையர்களின் குழு […]

பொழுதுபோக்கு

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த பட அறிவிப்பு…

  • April 11, 2024
  • 0 Comments

பிரதீப் ரங்கநாதன் இப்போது வளர்ந்துவரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். இவர் தற்போது விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார். அடுத்ததாக ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். அதில், அஸ்வத் – பிரதீப் ஆகிய இரண்டு பேரும் தோன்றுகின்றனர். 10 வருடங்களுக்கு முன்பு தாங்கள் எடுத்த குறும்படத்தின் காட்சியை ரீ க்ரியேட் செய்வது போன்று அந்த வீடியோ அமைந்திருக்கிறது. படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படுகிறது. அர்ச்சனா […]

ஐரோப்பா

துருக்கியில் மிகப் பெரிய அளவில் கொகோயின் போதைப் பொருள் கண்டுப்பிடிப்பு!

  • April 11, 2024
  • 0 Comments

துருக்கியில் வரலாற்றில் மூன்றாவது முறையாக மிகப் பெரிய அளவில் கொகோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா இது தொடர்பான தகவல்களை இன்று (11.04) அறிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கண்காணிக்கும் குழுக்கள் ஐரோப்பாவை போதைப்பொருள் நுழைவாயிலாக மாறி வருவதாக எச்சரித்தது. சுமார் 608 கிலோகிராம் (1,340 பவுண்டுகள்) கோகோயின் கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை திரவ வடிவில் பொதி செய்யப்பட்டிருந்தாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் போன்ற துறைமுகங்களில் பாதுகாப்பு கடுமையாக இருப்பதால், தென் […]

இலங்கை

ரஷ்யாவில் இருவர் மீது துப்பாக்கி பிரயோகம்!

  • April 11, 2024
  • 0 Comments

ரஷ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதி செய்ததாக சந்தேகிக்கப்படும் இருவரை ரஷ்ய சிறப்புப் படைகள் கொன்றதாக தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் குழு தெரிவித்துள்ளது. கபார்டினோ-பால்காரியா குடியரசின் தலைநகரான நல்சிக்கின் புறநகர் பகுதியில் சந்தேக நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் திட்டமிட்டதாக நம்பப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை ரஷ்ய படையினர் தெரிவித்துள்ளனர். மார்ச் 22 அன்று மாஸ்கோ கச்சேரி அரங்கில் 145 பேர் கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

திருகோணமலையில் சிறுவன்,சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தந்தை – கைது செய்த பொலிஸார்!

  • April 11, 2024
  • 0 Comments

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தான் பெற்ற இரண்டு பிள்ளைகளை துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் வைத்துள்ள முஹம்மது சனுஷ் (28) என்பவரை கைது செய்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. மனைவி வெளிநாட்டுக்குச் சென்றிருந்த நிலையில் தனது 2 பிள்ளைகளும் தனது கண்காணிப்பில் இருந்ததாகவும் இந்நிலையில் 5 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த நிலையில் தம்பலகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதேவேளை மூன்று வயது […]

பொழுதுபோக்கு

போடுடா வெடிய… GOAT படம் ரிலீஸ் திகதி அறிவிப்பு

  • April 11, 2024
  • 0 Comments

GOAT படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கில் இன்னும் கொஞ்ச வேலைகள் மட்டுமே பாக்கியிருப்பதாக கூறப்படும் சூழலில் படம் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் வரவேற்பையே பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் விஜய். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மைக் மோகன், யோகிபாபு, பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்ட பலர் […]

வட அமெரிக்கா

ஜோதிடம் மீதுள்ள நம்பிக்கையால் கணவன்,2 குழந்தைகளைக் கொன்று விட்டு தற்கொலை செய்த இளம்பெண்!

  • April 11, 2024
  • 0 Comments

ஜோதிட நம்பிக்கையால் கவலையடைந்த இளம்பெண் ஒருவர், தனது கணவனை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு காரில் இருந்து இரண்டு குழந்தைகளைத் தள்ளிக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல் நகரைச் சேர்ந்த இளம்பெண் டேனியல் ஜான்சன்(34). அயோகா என்ற பெயரில் இவர் ஜோதிடம் குறித்து இணையதளங்களில் எழுதி வந்தார். இந்த முழு சூரிய கிரகணம் ஆன்மிகப்போரின் சுருக்கம் என்று தன்னை பின்பற்றுபவர்களிடம் கூறி வந்தார். அத்துடன் இந்த சூரிய […]

இந்தியா

ஆந்திரா- சரியான சாலை வசதி இல்லாததால் மகனின் உடலை 8km சுமந்து சென்ற தந்தை..

  • April 11, 2024
  • 0 Comments

ஆந்திர மாநிலம் ஏ.எஸ்.ஆர். மாவட்டத்தில் சின்ன கொனேலா என்ற மலை கிராமம் உள்ளது. அடிவாரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கோதையா இவருடைய மனைவி சீதா. தம்பதியின் 2-வது மகன் ஈஸ்வர ராவ் (வயது 2½). கோதையா தனது மனைவி குழந்தைகளுடன் விஜயநகரம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவருடைய மகன் ஈஸ்வரராவுக்கு திடீரென உடல் நலக்குறைவு […]

ஆசியா

பாகிஸ்தானில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து : 17 பலி!

  • April 11, 2024
  • 0 Comments

தென்மேற்கு பாகிஸ்தானில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈத் அல்-பித்ர் கொண்டாட்டங்களின் முதல் நாளாகவும், பாகிஸ்தானில் பொது விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை பிற்பகுதியில் பலுசிஸ்தானில் உள்ள ஒரு வழிப்பாட்டு தலத்திற்கு யாத்திரீகர்களை அழைத்துச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்தில் சிக்கியது. பேருந்தானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேருந்தில் மொத்தமாக 60 பேர் பயணித்த […]

இலங்கை

இலங்கை – மொரட்டுவ பகுதியில் ரயிலில் மோதி 09 வயது குழந்தை பலி!

  • April 11, 2024
  • 0 Comments

மொரட்டுவ பகுதியில் ரயிலில் அடிப்பட்டு 09 வயது குழுந்தையொன்று உயிரிழந்துள்ளது. மொரட்டுவை க்ளோவியஸ் மாவத்தையில் வசித்து வந்த ரந்தாரு என அழைக்கப்படும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தை, அளுத் காலி வீதியில் இருந்து தனது துவிச்சக்கரவண்டியில் பயணித்த நிலையில், ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளது. குழந்தையின் பிரேத பரிசோதனை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.