ஆசியா

பாகிஸ்தானில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து : 17 பலி!

தென்மேற்கு பாகிஸ்தானில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈத் அல்-பித்ர் கொண்டாட்டங்களின் முதல் நாளாகவும், பாகிஸ்தானில் பொது விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை பிற்பகுதியில் பலுசிஸ்தானில் உள்ள ஒரு வழிப்பாட்டு தலத்திற்கு யாத்திரீகர்களை அழைத்துச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்தில் சிக்கியது.

பேருந்தானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேருந்தில் மொத்தமாக 60 பேர் பயணித்த நிலையில், அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த  15 பேர் அண்டை மாநிலமான சிந்து மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்