உலகம்

செனகலில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் : வெடித்த போராட்டம்!

  • February 5, 2024
  • 0 Comments

செனகல் அதிபர் மேக்கி சால் தேர்தலை ஒத்திவைக்க முடிவு செய்ததையடுத்து, நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்த பொலிஸார், பின்னர் பலரை கைது செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி கடந்த சனிக்கிழமை (03.02)  தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் பிரதமர் அமினாதா டூரே மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் […]

பொழுதுபோக்கு

சர்ச்சையை ஏற்படுத்தியது விஜய்யின் அறிக்கை… ஸ்பெஷல் க்ளாஸ் எடுத்த பிரபலம்

  • February 5, 2024
  • 0 Comments

கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் விரைவில் அரசியலிலும் அறிமுகமாகவுள்ளார். சினிமாவை போல அரசியலிலும் விஜய் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் விஜய்க்கு பிரபலங்கள் தவிர்த்து பொதுமக்கள், மாணவர்கள், ரசிகர்கள் என பல தரப்பில் இருந்தும் விஜய்க்கு கணிசமான ஆதரவு கிடைத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் நன்றி தெரிவித்து மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் விஜய். அதில், “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்த பெருமதிப்புக்குரிய […]

இலங்கை

இலங்கை : பிக்கு ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மூவர் கைது!

  • February 5, 2024
  • 0 Comments

கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜோதிடத்தில் புகழ் பெற்ற 44 வயது மதிக்கத்தக்க கலபாலுவாவே தம்மரதன என்பவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். காரில் வந்த 4 பேர் தங்களை சிஐடி அதிகாரிகள் என்று கூறி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

பொழுதுபோக்கு

குவைத்தில் லால் சலாம் படத்திற்கு தடை விதிப்பு

  • February 5, 2024
  • 0 Comments

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்த படத்தில் மொய்தீன் பாய் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி அதில் நுழைந்துள்ள மத அரசியலை சுற்றி உருவாகியுள்ள இந்த படத்தில் நிஜ கிரிக்கெட் வீரரான கபில்தேவ் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 9ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. அதே சமயம் இந்த படம் குவைத்தில் […]

இலங்கை

இலங்கை : பெலியத்த துப்பாக்கிச்சூடு! மேலும் ஒரு சந்தேக நபர் கைது!

  • February 5, 2024
  • 0 Comments

பெலியத்தையில் 5 பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் நேற்று (04.02) விசின் ஹபரதுவேயில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கட்டுடம்பே, ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா

டெல்லியில் விமான போக்குவரத்தை முன்னெடுப்பதில் சிக்கல்!

  • February 5, 2024
  • 0 Comments

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (05.02) பல விமானங்கள் தாமதமாகும் என இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட விமானத் தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (04) அந்தப் பகுதியில் கடும் மழை பெய்துள்ளதுடன், பஞ்சாப் மற்றும் மேற்கு ராஜஸ்தானில் பனிமூட்டம் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொழுதுபோக்கு

த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பார்ட்.. 18 வருடத்திற்கு பின் 68 வயது நடிகருடன் ஜோடி.. கோடியில் சம்பளம்

  • February 5, 2024
  • 0 Comments

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பின்னர், படு பிஸியான ஹீரோயினாக மாறி உள்ள நடிகை திரிஷா, தற்போது 68 வயது நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக 18 வருடங்களுக்குப் பின் நடிக்க உள்ள தகவல் உறுதியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஜோடி படத்தில் குணச்சித்திர நடிகையாக முகமாகி, அமீர் இயக்கிய ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக 2002 ஆம் ஆண்டு அவதாரம் எடுத்தவர் திரிஷா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருந்த திரிஷா, பாலையா, சிரஞ்சீவி, ரவி தேஜா, […]

இலங்கை

பாணந்துறை கடற்கரையில் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட 6 பேர் மீட்பு

  • February 5, 2024
  • 0 Comments

பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்ற 6 பேர், அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட போது, ​​பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர். 16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று சிறுவர்களும் மூன்று சிறுமிகளும் இவ்வாறு உயிர் பிழைத்துள்ளனர். நேற்று (04) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அவர்களை காப்பாற்றிய உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள், அவர்களுக்கு முதலுதவி செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர்களே இந்த அனர்த்த்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொழுதுபோக்கு

‘கிராமி’ விருதை தங்கள் வசமாக்கிய இந்தியாவின் சக்தி இசைக்குழு!

  • February 5, 2024
  • 0 Comments

பிரபல இசை விருதுகளில் ஒன்றான ‘கிராமி’ விருது இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘கிராமி’ விருது அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளின் ஒன்றாகும். 1951ம் ஆண்டு முதல் இன்று வரை ஆண்டுதோறும் இந்த விருதுகளை தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் அகாடமி (National Academy of Recording Arts & Sciences) வழங்குகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 66-வது ‘கிராமி’ விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் […]

பொழுதுபோக்கு

விஜயின் இடத்தைப் பிடிக்க முண்டாசு கட்டிய 5 நடிகர்கள்… யார் தெரியுமா?

  • February 5, 2024
  • 0 Comments

விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அது மட்டுமல்லாமல் தான் ஒப்புக்கொண்ட படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு முழுமையாக மக்கள் பணியில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார். இது அவருடைய ரசிகர்கள் முதற்கொண்டு திரை உலகில் பலருக்கும் பேரதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் தற்போது நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க முண்டாசு கட்டிய 5 நடிகர்களை பற்றி செய்திகள் வெளியாகி உள்ளன. சூர்யா: விஜய்யின் ஆரம்ப காலகட்டத்தில் […]