இலங்கை

செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கும் இனி சாரதி அனுமதிப்பத்திரம்!

  • February 6, 2024
  • 0 Comments

முழு செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2022 ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று அமைச்சரவை தீர்மானத்தின்படி, கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி, அதன் பெறுபேறுகளுக்கு அமைய இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் பேரில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

பொழுதுபோக்கு வட அமெரிக்கா

விருது கோப்பையில் மது அருந்திய பிரபல ராப் இசைக் கலைஞரால் வெடித்த சர்ச்சை

  • February 6, 2024
  • 0 Comments

அமெரிக்க ராப் இசைக் கலைஞரான ஜெய் இசட்டுக்கு இசைத் துறையில் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இம்பாக்ட் விருது வழங்கப்பட்டது. விருதை மகள் புளு ஜவியை மேடையில் அழைத்து சென்று அவர் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் விருதை பெற்ற மகிழ்ச்சியில் ஜெய் இசட் மேடையில் இருந்து கீழே வந்து தனது சக நண்பர்களுடன் விருதை கொண்டாடும் வகையில் தான் பெற்றுக் கொண்ட விருது கோப்பையில் மது ஊற்றி அருந்தினார். இந்நிலையில் அவர் விருது […]

இலங்கை

தங்காலையில் நடுத்தர வயது ஆண் ஒருவர் வெட்டி படுகொலை!

  • February 6, 2024
  • 0 Comments

தங்காலை குடாவெல்ல பகுதியில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

இலங்கை

பொலிஸாரின் யுக்திய நடவடிக்கை : இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது!

  • February 6, 2024
  • 0 Comments

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட நீதி நடவடிக்கையின் மூலம் நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 56,541 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 49,558 சந்தேக நபர்களில் 1,817 சந்தேகநபர்கள் தடுப்பு உத்தரவுகளின் அடிப்படையில் மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் 1,981 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 234 சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதோடு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் […]

ஐரோப்பா

வானவில் நிறத்தில் காதணி அணிந்த பெண்- ரஷ்ய நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

  • February 6, 2024
  • 0 Comments

ரஷ்யாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் அதன் ஆதரவு செயல்பாடுகளுக்கு அந்நாட்டு கோர்ட்டு தடை விதித்துள்ளது. குறிப்பாக, கடந்த நவம்பர் மாதம் உத்தரவில் தன்பாலின ஈர்ப்பு ஆதரவு அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என கோர்ட்டு அறிவித்துள்ளது. தன்பாலின ஈர்ப்பு ஆதரவு அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ரஷ்ய அரசு ஈடுபட்டு வருகிறது . அதேபோல், தன்பாலின ஈர்ப்பை ஆதரிக்கும் வகையிலான வானவில் நிற கொடி, அது தொடர்பான பொருட்கள், புகைப்படங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு […]

பொழுதுபோக்கு

“விஜய்க்கு ஓட்டு போட முடியாது” – அரவிந்த் சாமி கொடுத்த பளிச் செய்தி

  • February 6, 2024
  • 0 Comments

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் விஜய், தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். வருகிற 2026-ம் அண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள விஜய், இனி தான் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால், சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அதிரடியாக அறிவித்து உள்ளார். இந்த நிலையில், நடிகர்களின் அரசியல் பற்றி நடிகர் அரவிந்த் சாமி பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி […]

ஆசியா

சிங்கப்பூரில் வீடுகளுக்காகக் காத்திருக்கும் இளம் குடும்பங்களுக்கு வெளியான தகவல்

  • February 6, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் இளம்பெற்றோர் இடைக்காலக் குடியிருப்புத் திட்டத்தில் வீடுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகும் என கூறப்படுகின்றது. வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இதனை தெரிவித்துள்ளது. தற்போது 2,000ஆக இருக்கும் அந்த வீடுகளின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டுக்குள் 4,000ஆக அதிகரிக்கப்படும். Selective En bloc Redevelopment Scheme (SERS) எனும் ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டத்துக்காகத் தங்ளின் ஹால்ட் (Tanglin Halt) பகுதியில் காலியாக இருக்கும் வீடுகள் PPHS திட்டத்துக்குக் கீழ் கொண்டுவரப்படும். புதிய வீடுகளைக் கட்டிமுடிக்கக் காத்திருக்கும் இளம்தம்பதிகளுக்கு PPHS வீடுகள் […]

செய்தி

ஜப்பானில் அச்சுறுத்தலாக மாறிய பனிப்பொழிவு – விமானங்கள் பறக்க முடியாத நிலை

  • February 6, 2024
  • 0 Comments

ஜப்பான் தலைநகர் டோக்கியோ (Tokyo) உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளமையினால் பல விமானப் பயணங்கள் இரத்துசெய்யப்பட்டுள்ளன. அங்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிவருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் மலைப் பகுதிகளில் இன்னும் அதிகமாகப் பனி கொட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பாதிக்கப்படும் இடங்களில் 24 மணி நேரத்துக்குள் 40 செண்டிமீட்டருக்கும் அதிகமாகப் பனி படரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் டோக்கியோவிலும் அதே நிலைதான். அங்கு 8 செண்டிமீட்டர் அளவுக்குப் பனி பொழியும் என்று […]

செய்தி

இலங்கையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையில் திருத்தம்!

  • February 6, 2024
  • 0 Comments

இலங்கையில் ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை வரம்புகள் திருத்தப்பட்டுள்ளன. விற்பனையாளர்கள் பொருட்களில் அதிக இலாபம் ஈட்டுவதை தடுத்து, நுகர்வோருக்கு சாதகதன்மையை ஏற்படுத்தும் வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், இறக்குமதி உருளைக்கிழங்கு, மைசூர் பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் […]

பொழுதுபோக்கு

‘என் 15 வருட கனவு நிறைவேறியது” நிரோஷா

  • February 6, 2024
  • 0 Comments

ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி சிறப்பு வேடத்திலும், விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை வேடத்திலும் நடித்துள்ள படம் ‛லால் சலாம்’. இவர்களுடன் ஜீவிதா, நிரோஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பெப்ரவரி 9ல் படம் ரிலீஸாகிறது. இந்த படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய நிரோஷா, ‛‛இந்த மேடையில் இங்கு நிற்பதற்கும், ரஜினி உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கும் முதலில் ஐஸ்வர்யாவுக்கு நன்றி சொல்கிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி உடன் நடிக்க வாய்ப்பு […]