இலங்கை

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

2023 (2024) ஆம் ஆண்டுக்கான சாதாரண தர (சா/த) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஊடாக ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி பிப்ரவரி 15 நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளபப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆப்பிரிக்கா

காங்கோவில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ட்ரக் : 18 பேர் பலி!

  • January 22, 2024
  • 0 Comments

தென்மேற்கு காங்கோவில் அதிவேகமாக ஓட்டிச் சென்ற டிரக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர். காங்கோ மத்திய மாவட்டத்தில் உள்ள கசங்குலு பிரதேசத்தில் உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையில் சரக்குகள் நிரப்பப்பட்டு பல பயணிகளை ஏற்றிச் சென்ற டிரக் பள்ளத்தாக்கில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் கசங்குலு பொது மருத்துவமனையின் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிதமிஞ்சிய […]

ஆசியா

பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மறுக்கப்படும் வரை இஸ்ரேலுக்கு பாதுகாப்பு இல்லை : ஜோர்டான் எச்சரிக்கை

நெதன்யாகு இரு நாடுகளின் தீர்வு நிலைப்பாட்டை மாற்றாவிட்டால் மத்திய கிழக்கை ‘மேலும் போருக்கு’ தள்ளுவார் என்று ஜோர்டானின் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளது “இந்தப் போர் இஸ்ரேலுக்குப் பாதுகாப்பைத் தராது, இந்தப் போர் அமைதியைக் கொண்டுவராது. பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மறுக்கப்படும் வரை இஸ்ரேலுக்கு பாதுகாப்பு இருக்க முடியாது” என்று அவர் மேலும் கூறியுள்ளார். இந்த அவலத்தில் இருந்து மீள ஒரே வழி இரு நாடுகளின் தீர்வுதான் என்று முழு உலகமும் கூறுகிறது. முன்னோக்கி செல்லும் ஒரே பாதை இரு […]

இலங்கை

வெள்ளவத்தையில் நடுவீதியில் தாக்கப்படும் இளைஞர் : சமூகவலைத்தளங்களில் வைரலாகும் காணொலி!

  • January 22, 2024
  • 0 Comments

வெள்ளவத்தை பிரதேசத்தில் பொலிஸார் என கூறி இளைஞர் ஒருவரை சிலர் தாக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த இளைஞன் வீதிக்கு அருகில் நிற்பதும், குறித்த இடத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் அவரை தாக்குவதும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

பொழுதுபோக்கு

“ஷகீலா தினமும் குடித்துவிட்டு வந்து, என்னை….” ஷீத்தல் அதிர்ச்சி

  • January 22, 2024
  • 0 Comments

நடிகை ஷகிலா மலையாள படங்கள் மற்றும் தமிழ் சினிமாவில் பாப்புலர் ஆனவர். மேலும் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சின்னத்திரையிலும் பாப்புலராக இருக்கிறார். அது மட்டுமின்றி அவர் நடத்தி வரும் youtube சேனலில் பல பிரபலங்களிடம் எடுக்கும் பேட்டியில் தைரியமாக கேள்விகள் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஷகிலாவில் வளர்ப்பு மகள் ஷீத்தல் அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்றதாகவும், சமாதானம் பேச சென்ற வழக்கறிஞர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் போலீசில் […]

ஐரோப்பா

சர்வதேச சட்டத்தை மீறி ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கிய வடகொரியா?

சர்வதேச சட்டத்தை மீறி ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கியதாக வடகொரியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது . இங்கிலாந்து உளவுத்துறை அந்த குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் புகைப்படங்களை ஐ.நா நிபுணர்களுக்கு அனுப்பியதாக ஆண்ட்ரூ ரோத் தெரிவித்துள்ளார். மேலும், வடகொரியா நடத்திவரும் அணு ஆயுத சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கு எதிராக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில் ரஷியாவுடனான நல்லுறவை வடகொரியா பலப்படுத்தி வருகிறது. அமெரிக்காவை எதிா்கொள்ளும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இரத்து!

  • January 22, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் ஈஷா புயல் காரணமாக  பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் இருந்ததாகவும் இன்று (22.01)  நூற்றுக்கணக்கான ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய குளிர்கால புயல்கள் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் கடுமையான மழை மற்றும் மணிக்கு 100 மைல் (160 கிலோமீட்டர்) வேகத்தில் காற்று வீசுவதற்கும் வலிவகுத்துள்ளது. ஒரே இரவில் அதன் உச்சத்தை எட்டிய ஈஷா புயல் பல்வேறு முன்னறிவிப்பு எச்சரிக்கைகளை கொண்டுள்ளது. இதன்படி இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள பிரிஸ்லீ வூட் ரேடார் நிலையத்தில் மணிக்கு […]

இலங்கை

இலங்கை : உயர்தரத்தை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி வாய்ப்பு!

  • January 22, 2024
  • 0 Comments

உயர்தரத்தை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பாடசாலையிலேயே தொழிற்கல்வி வழங்கப்படும் என கல்வி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி அறிவு கொண்ட தொழில்சார் கல்வி குறித்த நடைமுறை பயிற்சி மற்றும் கோட்பாட்டு ஒத்திகையுடன் கூடிய நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. உயர்தரக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களை தொழிற்கல்விக்கு வழிநடத்தும் நோக்கில் இந்தத் தொழிற்பயிற்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 299 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் […]

பொழுதுபோக்கு

தளபதி விஜய் வாங்கிய புதிய சொகுசு கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

  • January 22, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Greatest Of All Time எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட் செலவில் இப்படம் உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் இறுதி வரை நடைபெறும் என்பது போல் சொல்லப்படுகிறது. விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி Greatest Of All Time படத்தை வெளியிட்ட படக்குழு […]

ஆசியா

தைவான் வான் பரப்பில் பறந்த சீனாவின் பலூன்கள் : உளவு பலூன்களா?

  • January 22, 2024
  • 0 Comments

சீனாவின் 06 பலூன்கள் தங்கள் வான்பரப்பில் இன்று (22.01) பறந்ததாக தைவான் தெரிவித்துள்ளது. அத்துடன் சீன போர் விமானங்கள், கடற்படைக் கப்பல்களும் இனங்காணப்பட்டதாக தெரிவித்துள்ளது. பொதுவாக கிழக்கே பசிபிக் பகுதியில் இவ்வகையான பலூன்கள் இனங்காணப்படுவதாகவும், தற்போது இது அதிகரித்துள்ளதாகவும் தைவான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தைவானைச் சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் சீன மக்கள் விடுதலைப் படையின் செயல்பாடுகளின் பட்டியலில் பலூன் காட்சிகளை பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டது. பலூன்கள் வெளிப்படையான இராணுவ செயல்பாட்டைக் கொண்டிருக்கின்றனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை, […]

error: Content is protected !!