ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் : முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை!

  • January 22, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடுமையான வெப்பமண்டல சூறாவளி ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சூறாவளியானது வரும் புதன்கிழமை அதன் கரையை கடக்கக்கூடும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிர்ரிலி புயல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், ஒரு மாதத்திற்கு முன்பு இதே பகுதியை தாக்கியதை விட அதிக அழிவை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். கனமழை மற்றும் மணிக்கு 220 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கை – தெஹியோவிட்ட பகுதியில் நபர் ஒருவர் படுகொலை!

  • January 22, 2024
  • 0 Comments

தெஹியோவிட்ட, திகல பிரதேசத்தில் ஒருவர் கோடரி மற்றும் கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இக்கொலை நேற்று (21.01) மாலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் திகல தெஹியோவிட்ட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர். இறந்தவர் குடித்துவிட்டு வந்து தனது சகோதரியுடன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். பின்னர், அவரது கணவர் வந்து கோடாரி மற்றும் கல்லால் இந்த நபரை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 43 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தெஹியோவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு […]

பொழுதுபோக்கு

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா குறித்து பிரபலங்கள் என்ன சொல்லுறாங்க தெரியுமா?

  • January 22, 2024
  • 0 Comments

ராமர் கோயில் திறப்பு விழாவில் தமிழ், தெழுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதை அவர்கள் வெளியிடும் தகவல்களின் மூலம் அறிந்துகொள்ளலாம். தெலுங்கு திரையுலகிலிருந்து சிரஞ்சீவி, ராம் சரண், பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர். தமிழிலிருந்து ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்டோரும் ஹிந்தியிலிருந்து அமிதாப் பச்சன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருக்கின்றனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமருக்கென்று கோயில் கட்டப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் இந்தக் கோயில் […]

இலங்கை

உஸ்வத்த பிரதேசத்தில் பாதாள உலக குழுவுடன் தொடர்பு பேணிவந்த இராணுவ அதிகாரி கைது

  • January 22, 2024
  • 0 Comments

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு கொண்டு கடமையாற்றிய இராணுவ அதிகாரி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கஹதுடுவ, உஸ்வத்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் 21ஆம் திகதி பலப்பிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் மற்றும் கடந்த 18ஆம் திகதி பலபிட்டிய பிரதேசத்தில் மனித கொலை செய்ய திட்டமிட்டமை தொடர்பில் சந்தேகநபர் தேடப்பட்டு வந்தவர் […]

உலகம்

அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு!

  • January 22, 2024
  • 0 Comments

அமெரிக்காவை பாதித்த பனிப்புயல் தொடர்பான விபத்துகளில் கடந்த வாரத்தில் 90 பேர் உயிரிழந்துள்ளனர். டென்னசி மற்றும் ஓரிகான் மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, மிசிசிப்பி, வாஷிங்டன், கென்டக்கி, நியூயார்க் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இறப்புகள் பதிவாகியுள்ளன. கடுமையான பனிப்பொழிவு காரணமாக, நாடு முழுவதும் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, மேலும் கடுமையான குளிரால் ஆயிரக்கணக்கான மக்கள் அவதிப்படுகின்றனர். தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர்ந்த காற்று இந்த வாரமும் […]

பொழுதுபோக்கு

அயோத்தி குடமுழுக்கு விழா: முதல் ஆளாக வந்த நடிகர் ரஜினிகாந்த்!

  • January 22, 2024
  • 0 Comments

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவைக் காண முதல் ஆளாக நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் கடந்த 11 நாட்களாக விரதம் இருந்து வருகிறார். பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழிக்கும் அவர் உணவாக பழங்களை மட்டுமே எடுத்து கொண்டதோடு, இளநீர் பருகினார். மேலும் மரக்கட்டிலில் போர்வை விரித்து தூங்கினார். நாடு முழுவதும் உள்ள ராமாயணம் தொடர்புடைய இடங்களுக்குச் […]

ஆசியா

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்த 47 பேர்- மீட்புப்பணிகள் தீவிரம்!

  • January 22, 2024
  • 0 Comments

சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷூய்குன் கிராமம் உள்ளது . இந்த கிராமத்தில் இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 10க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த 47 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். கடந்த சில நாட்களாக இந்த […]

இலங்கை

இலங்கையில் சுகாதாரத்துறையில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டம்!

  • January 22, 2024
  • 0 Comments

சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அதன்படி, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “செயற்கை நுண்ணறிவு இப்போது நிஜமாகிவிட்டது. அதை புறக்கணிக்க முடியாது. மேலும், செயற்கை நுண்ணறிவால் சுகாதாரத் துறைக்கும் மருத்துவக் கல்விக்கும் பல நன்மைகள் உள்ளன. இது புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல.  மருத்துவத்தின் தரத்தை […]

பொழுதுபோக்கு

அயோத்தி ராமருக்கு கோடியில் நன்கொடை வழங்கிய ஹனுமான்

  • January 22, 2024
  • 0 Comments

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான படம் ‘ஹனு-மான்’. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் […]

இந்தியா

இந்திய எல்லைக்குள் நுழைந்த 277 மியான்மர் வீரர்களை திருப்பி அனுப்ப இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கை

  • January 22, 2024
  • 0 Comments

மிசோரம் மாநிலத்துக்குள் நுழைந்த மியான்மர் ராணுவ வீரர்கள் 277 பேர் தங்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு மாநிலமான மிசோரம் அண்டை நாடான மியான்மருடன் 510 கி.மீ. தொலைவு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில், இந்திய எல்லையோர ராணுவ முகாம்களில் கிளர்ச்சி படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். அந்த தாக்குதலில் இருந்து தப்புவதற்காக, மியான்மர் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைகின்றனர். இவ்வாறு […]

error: Content is protected !!