ஆசியா

30 போர் விமானங்களை அனுப்பிய சீனா : தைவான் எல்லைப்பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்!

  • January 27, 2024
  • 0 Comments

தைவானை நோக்கி சீனா 30க்கும் மேற்பட்ட போர் விமானங்களையும் கடற்படைக் கப்பல்களையும் அனுப்பியதாக தீவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாய்லாந்து தலைநகரில் மூத்த அமெரிக்க மற்றும் சீன பிரதிநிதிகள் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீன மக்கள் விடுதலை இராணுவம் SU-30 போர் விமானங்கள் உட்பட 33 விமானங்களையும், ஆறு கடற்படைக் கப்பல்களையும் தைவானைச் சுற்றி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது. […]

பொழுதுபோக்கு

“ரஜினிகாந்த் சங்கி” ஆவேசப்பட்ட மகள்

  • January 27, 2024
  • 0 Comments

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தில் ரஜினியும் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார் என்பதால் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினியும் விழாவில் கலந்துகொண்டிருக்கிறார். மேடையில் ஐஸ்வர்யா ரஜினி பேசும்போது ஆவேசமாக பேசி இருக்கிறார். “அப்பாவை சங்கி என சொல்லும்போது கோவம் வரும். இப்போ சொல்கிறேன், ரஜினிகாந்த் சங்கி கிடையாது.” சங்கியா இருந்தா வர லால் சலாம் […]

தமிழ்நாடு

தேனி கொண்டு செல்லப்பட்ட பாடகி பவதாரிணியின் உடல்!

  • January 27, 2024
  • 0 Comments

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி ஜனவரி 25-ஆம் திகதி இலங்கையில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், கல்லீரல் புற்றுநோய் காரணமாக காலமான பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. […]

இலங்கை

இலங்கையில் கோர விபத்து – மூன்று பேர் பரிதாபமாக பலி

  • January 27, 2024
  • 0 Comments

நாரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த நபர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியொன்று பாரவூர்வுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்த நிலையில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் பாரவூர்தி சாரதி கைது […]

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்ணிடம் பெருந்தொகை தங்கம்

  • January 27, 2024
  • 0 Comments

தங்க நகைகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுடன் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார். மருதானை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். குறித்த பெண் வணிக நோக்கத்திற்காக தொடர்ந்தும் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றமை விசாரணைகளில் […]

விளையாட்டு

IPL 2024 திகதிகளை இறுதி செய்த BCCI

  • January 27, 2024
  • 0 Comments

ஐபிஎல் 2024 தேதிகள் கிரிக்கெட் 2024 திகதி மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 26-ம் திகதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் இறுதி செய்யப்பட்ட பின்னர் இது தொடர்பான இறுதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல்கள் இருந்தாலும் ஐபிஎல் போட்டிகள் முழுதும் இந்தியாவிலேயே நடைபெறும் என்றுதான் தெரிகிறது. இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பிசிசிஐ நிர்வாகி கூறியதாக வெளியான செய்தியில், “நாங்கள் ஐபிஎல் அட்டவணை பற்றி விவாதித்தோம். பொதுத் […]

வாழ்வியல்

மனக்குழப்பம் பதற்றம் அதிகம் இருக்கிறதா? உங்களுக்கான பதிவு

  • January 27, 2024
  • 0 Comments

உடலில் செல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் விட்டமின் பி12, மூளையின் செயல்பாட்டிற்கு மிக அத்தியாவசிய சத்தாகும். வைட்டமின் பி12 குறைந்தால், மூளை பலவீனமடைவதோடு, எலும்புகளும் பலவீனமடையும். மேலும், இந்த ஊட்டசத்து குறைபாட்டினால், மனச்சோர்வு மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு பங்களிக்கும். மூளை தொடர்பான ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் வைட்டமின் பி12 முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்து, செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற நரம்பியக்கடத்திகளின் உற்பத்திக்கு முக்கியமானது. இது மனநிலை, உணர்ச்சிகள் மற்றும் ஒட்டுமொத்த மன […]

வட அமெரிக்கா

கனடாவில் பனிப்பொழிவு – வனப்பகுதிகளில் தஞ்சம் அடையும் பட்டாம்பூச்சிகள்

  • January 27, 2024
  • 0 Comments

லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் இடம் பெயர்ந்து மெக்சிகோ வனப்பகுதிகளில் தஞ்சம் அடைந்தன. குளிர் காலத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் நிலவும் பனிப்பொழிவில் இருந்து தற்காத்துக்கொள்ள, இவ்வாறு லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் இடம் பெயர்ந்துள்ளது. அவ்வாறு தஞ்சமடையும் பட்டாம்பூச்சிகளுக்கு உரிய சூழல் அமையும் வகையில் மெக்சிகோவில் சரணாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கால நிலை மாற்றத்தால், பட்டாம்பூச்சிகளை அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசியா

இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் அரசியல் சர்ச்சை

  • January 27, 2024
  • 0 Comments

இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது. இந்திய உளவுத்துறையை குறிவைத்து பாகிஸ்தானின் சமீபத்திய குற்றச்சாட்டு இதற்குக் காரணமாகும். பாகிஸ்தான் மண்ணில் இந்திய ஏஜெண்டுகளால் இரண்டு குடிமக்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. முன்னதாக, கனடா மற்றும் அமெரிக்காவும் இந்தியா மீது இதே போன்ற இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. ஏனென்றால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் இந்தியாவால் கொல்லப்பட்டனர். எனினும், பாகிஸ்தானின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த அறிக்கைகளின் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய சிறைச்சாலையில் நிரம்பி வழியும் கைதிகள்

  • January 27, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலிய கைதிகளின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. புள்ளியியல் பணியகத்தின் சமீபத்திய அறிக்கைகளின்படி, ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 12 மாத காலப்பகுதியில் கைதிகளின் எண்ணிக்கை 41929 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, மக்கள் தொகையில் 100,000 பேருக்கு 201 முதல் 202 கைதிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே பெண் கைதிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, ரிமாண்ட் செய்யப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளது, அதாவது இந்த எண்ணிக்கை 15937 ஆக […]