ஆசியா

மியன்மாரில் தீவிரமடைந்துள்ள உள்நாட்டு போர் – முக்கிய நகரை கைப்பற்றிய ஆயுதக்குழு

  • January 7, 2024
  • 0 Comments

மியான்மாரில் அரசு படைகளுக்கு எதிராக களமிறங்கியுள்ள பழங்குடியின ஆயுதக் குழு, வடகிழக்கே சீனாவுடனான எல்லையில் உள்ள முக்கிய நகரை கைப்பற்றி உள்ளது. மியான்மரில், ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசை கவிழ்த்து, 2021ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, ராணுவ ஆட்சிக்கு எதிராக, நாட்டிலுள்ள பழங்குடியின குழுக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மூன்று முக்கிய அமைப்புகள் அடங்கிய இந்த ஆயுதம் ஏந்திய குழு, ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருகிறது. பல முக்கிய நகரங்களை […]

இந்தியா

தனது இறுதி இலக்கை அடைந்த ஆதித்தியா விண்கலம்!

  • January 7, 2024
  • 0 Comments

இந்தியாவின் ஆதித்தியா எல்-01 விண்கலம், அதன் இறுதி இலக்கை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது குறித்த விண்கலமானது சூரியனை தொடர்ந்து அவதானிக்கும் இடத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விண்கலம் கடந்த செப்டம்பர் மாம் 2ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. அன்றில் இருந்து  நான்கு மாதங்கள் சூரியனை நோக்கி பயணித்து வருகிறது. சந்திரனின் தென் துருவத்தை  ஆராய்வதற்காக சந்திராயன் விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய சில நாட்களுக்கு பிறகு, மற்றுமொரு சாதனையாக இந்த ஆதித்தியா விண்கலத்தை விண்ணில் செலுத்தியிருந்தது. இது தொடர்பில் […]

இலங்கை

மட்டக்களப்பில் அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் தீவிர சோதனை

  • January 7, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள மைலம்பாவெளியில் வாகனங்களை நிறுத்தி போதை பொருள் கடத்தல் காரர்களை தேடி பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (06) பிற்பகல் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர் இதன்போது 2186 தடை செய்யப்பட்ட சிகரட்டுக்களை கடத்திச் சென்ற 7 பேரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் போதை பொருள் கடத்தல்காரர்களை தேடி வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கையின் பிரகாரம் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெமில் […]

இலங்கை

பொங்கல் விழாவை முன்னிட்டு கிண்ணியாவில் படகோட்ட போட்டி!

  • January 7, 2024
  • 0 Comments

கிழக்கு ஆளுநரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வில் மற்றுமொரு அம்சமாக கிண்ணியாவில் 55 படகுகளுடன் 110 போட்டியாளர்கள் பங்கேற்ற படகோட்ட போட்டி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அததியாக இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் வெங்கடேஸ்வரன் பங்கேற்றதுடன்,படகோட்ட போட்டியை ஆளுநர் செந்தில் தொண்டமான்,டாக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் பச்சை கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தனர். இப்ப போட்டியை பார்ப்பதற்கான ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாயர்கள் திரண்டு இருந்தனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு முதல் […]

இலங்கை

இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கையால் நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • January 7, 2024
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீதி நடவடிக்கை காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். பொலிஸாரின் நடவடிக்கைகளினால் தற்போது போதைப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர்  திரான் அலஸ் குறிப்பிடுகின்றார். கடத்தல்காரர்களால் 2000 ரூபாய்க்கு விற்கப்படும் போதைப்பொருள் பாக்கெட் தற்போது 8 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது என்றார். நீதி நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதனால் பொலிஸ் நிலையங்களுக்கு பல தகவல்கள் கிடைக்கப்பெறுவதாகவும், ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளையும் இந்த நடவடிக்கைக்காக தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாகவும் […]

பொழுதுபோக்கு

‘அவளா நீ..” பிக்பாஸ் அர்ச்சனா யார் தெரியுமா? செய்யாறு பாலு சொன்ன சீக்ரெட்

  • January 7, 2024
  • 0 Comments

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைய உள்ளது. பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்ளவதில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளன. இதில் விஜே அர்ச்சனாவிற்கு ரசிகர்களின் ஆதரவு இருப்பதால், அவர் டைட்டிலை பெற வாய்ப்பு இருப்பதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். மேலும், அர்ச்சனா குறித்து பலருக்கு தெரியாத தகவலையும் வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். […]

இலங்கை

இலங்கையில் அடுத்து எந்த தேர்தல் வைத்தாலும் ரணில் தோற்கடிக்கப்படுவார் – அநுர ஆருடம்!

  • January 7, 2024
  • 0 Comments

அடுத்த தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் அல்லது பொதுத் தேர்தலாக இருந்தாலும்  ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய ஜனாதிபதி பதவி அத்தோடு முடிவடையும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால்  ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் படை அடிமட்டத்தில் எழுந்துள்ள விழிப்புணர்வை அறிந்து, […]

ஆசியா

பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீ விபத்து : பலர் தங்கும் இடங்களை இழந்து அவதி!

  • January 7, 2024
  • 0 Comments

பங்களாதேஷின் தெற்கு கடலோர மாவட்டமான காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கியா அகதிகளின் நெரிசலான முகாமில் நேற்று (06.01) நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்திற்கும்  மேற்பட்ட தங்குமிடங்களை எரித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக மாற காரணமாகியதாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். உக்கியாவில் உள்ள குடுபலோங் முகாமில் சனிக்கிழமை நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. பலத் காற்றானது தீ வேகமாக பரவ வழிவகுத்துள்ளது. இதனால் முகாம்களில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கானோர் திறந்த வெளியில் தஞ்சமடைந்துள்ளனர். “நாங்கள் கடுமையான குளிரால் பாதிக்கப்பட்டுள்ளோம், கடினமான […]

வட அமெரிக்கா

நடுவானில் விமானத்தில் திடீரென சக பயணியை தாக்கிய 16 வயது சிறுவனால் பரபரப்பு!

  • January 7, 2024
  • 0 Comments

கனடாவின் டொரண்டோ நகரில் இருந்து கால்கரி நோக்கி ஏர் கனடா 137 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் சென்றபோது, திடீரென 16 வயது சிறுவன் எழுந்து பயணி ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளான். இதில், அந்த நபருக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விமானம், வின்னிபெக் ரிச்சர்ட்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதுபற்றி கனடா பொலிஸார் விசாரணை நடத்தினர். அதில்,கிராண்ட் பிரெய்ரி பகுதியை சேர்ந்த சிறுவன், குடும்பத்துடன் வந்த […]

இலங்கை

காலி சிறைச்சாலையில் உள்ள புதிய கைதிகளை மற்றுமோர் சிறைச்சாலைக்கு இடமாற்ற நடவடிக்கை!

  • January 7, 2024
  • 0 Comments

காலி வைத்தியசாலையில் உள்ள எட்டு கைதிகள் மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நிலையில் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி. பி.திஸாநாயக்க தெரிவித்தார். மூளைக்காய்ச்சல் காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, காலி சிறைச்சாலையின் அனைத்து நடவடிக்கைகளும் ஜனவரி 04 முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பார்வையாளர் நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. காலி சிறைச்சாலையில் தண்டனை அனுபவிக்க உள்ள அனைத்து புதிய கைதிகளும் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளனர். அதேபோல் காலி சிறைச்சாலையில் கடுமையான […]