ஆசியா

நாய்க்கறி விற்பனை மற்றும் நுகர்வுக்குத் தடை விதித்து மசோதா நிறைவேற்றியது தென்கொரியா

  • January 9, 2024
  • 0 Comments

நீண்ட இழுபறிக்குப் பின்னர் நாய்க்கறி விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதிக்கும் மசோதாவை, தென்கொரிய நாடாளுமன்றம் இன்று(9) நிறைவேற்றி உள்ளது. நாய்க்கறி உண்பதை வழக்கில் பின்பற்றும் வெகுசில நாடுகளில் ஒன்றாக தென்கொரியாவும் இருந்து வருகிறது. தலைமுறை இடைவெளியில் நாய்க்கறி உண்பது தென்கொரியர்கள் மத்தியில் குறைந்து வந்தது. செல்லப்பிராணியாக நாய்களை வளர்ப்பது, விலங்கு மீதான அதிகரிக்கும் அபிமானம், மேற்கு நாடுகளின் தாக்கம் ஆகியவை காரணமாக தற்போதைய தலைமுறையினர் மத்தியில் நாய்க்கறி தவிர்க்கப்பட்டு வருகிறது. ஆனபோதும் பிராய்லர் கோழிகள் போல, […]

பொழுதுபோக்கு

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பாடகர் காலமானார்

  • January 9, 2024
  • 0 Comments

பிரபல பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் காலமானார். இந்திய கிளாசிகல் மற்றும் ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பாடி புகழ்பெற்ற ரஷீத் கான் பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களில் பாடல்களை பாடி புகழ் பெற்றவர். மேலும் இந்திய கிளாசிகல் மற்றும் ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பல ஆல்பம் பாடல்களையும் இவர் வெளியிட்டுள்ளார். 55 வயதான ரஷீத் கானின் மறைவை கேள்விப்பட்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் ரஷீத் கான் மறைவிற்கு […]

பொழுதுபோக்கு

நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேரும் அதிதி ஷங்கர்..

  • January 9, 2024
  • 0 Comments

நடிகை அதிதி ஷங்கர், நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர இருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ‘விருமன்’ படத்தில் நடிகர் கார்த்தி ஜோடியாக அறிமுகமானார் நடிகை அதிதி ஷங்கர். முதல் படத்திலேயே தனது துள்ளலான நடிப்பாலும், நடனத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். நடிப்பு, நடனம் மட்டுமல்லாது பாடகியாகவும் தம்ப்ஸ் அப் வாங்கினார் அதிதி. அடுத்து, சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மாவீரன்’ படத்தில் நடித்திருந்த அதிதி, தற்போது, விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய […]

இலங்கை

வவுனியாவில் இரு மோட்டார் சைக்களில்கள் மோதி விபத்து!

  • January 9, 2024
  • 0 Comments

வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையினை அண்மித்த பகுதியில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார் . வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் வீதியின் மறுபக்கத்திற்கு மாற முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளானது. இவ் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன்,  இரு மோட்டார் சைக்கில்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான […]

ஆசியா

ஈராக்கில் மருத்வமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகளை உடல்கருகி பலி!

  • January 9, 2024
  • 0 Comments

ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள திவானியா நகரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் ஒரு பகுதியில் பற்றிய தீ, அடுத்தடுத்த அறைகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சிலர் தீப்பிடித்த கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோருக்கு […]

ஐரோப்பா

சீரற்ற காலநிலை : இங்கிலாந்தில் விடுக்கப்பட்டுள்ள வெள்ள எச்சரிக்கை

தெற்கு இங்கிலாந்தில் 100க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் உள்ளன. லண்டனுக்கு அருகிலுள்ள தேம்ஸ் நதி உட்பட இங்கிலாந்தில் 115 வெள்ள எச்சரிக்கைகள் உள்ளன என்று சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தெற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸ் முழுவதும் பனிக்கட்டிக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இங்கிலாந்தின் பெரும்பகுதிக்கு வெள்ளிக்கிழமை வரை அம்பர் குளிர் சுகாதார எச்சரிக்கை உள்ளது.

உலகம்

ஸ்லோவேனியாவில் நிலத்தடி குகையில் சிக்கியிருந்த 05 பேர் மீட்பு!

  • January 9, 2024
  • 0 Comments

ஸ்லோவேனியாவில் நிலத்தடி குகையில் சிக்கியிருந்த மக்களை மீட்க 6 டைவர்களைக் கொண்ட சிறப்பு டைவிங் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவினர் 05 பேரை பத்திரமாக மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழை காரணமாக நிலத்தடி குகைக்குள் சுற்றுலாப் பயணிகள் குழுவும் அவர்களது வழிகாட்டியும் சிக்கிக் கொண்டனர். குகை நுழைவாயிலில் இருந்து 1.3 மைல் தொலைவில் அவர்கள் சிக்கியுள்ளனர். இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியானபோது, ​​​​2018 ஜூன் மாதம் தாய்லாந்தில் குழந்தைகள் குழு ஒன்று தங்கள் கால்பந்து […]

ஐரோப்பா

போரை எதிர்க்கும் ரஷ்ய ஆர்வலருக்கு குடியுரிமையை தடை செய்யும் கனடா

ரஷ்ய போர் எதிர்ப்பு ஆர்வலர் கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மாஸ்கோவின் உக்ரைன் படையெடுப்பை எதிர்க்கும் வலைப்பதிவு இடுகைகளுக்காக ரஷ்ய நீதிமன்றம் அவரைத் தண்டித்ததால் அவருக்கான குடியுரிமையை கனடா தடை செய்கிறது குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா கடந்த ஜூன் மாதம் தனது குடியுரிமையை வெளியேற்றிய பின்னர் ரஷ்ய சிறைக்கு நாடு கடத்தப்படுவோம் என்று அஞ்சுவதாக மரியா கர்தாஷேவா கூறியுள்ளார். மேலும் ரஷ்யாவின் குற்றச்சாட்டுகள் கனடாவில் ஒரு குற்றமா என்பதை தீர்மானிக்க வேண்டும் […]

பொழுதுபோக்கு

திட்டமிடவும் மாட்டேன்… மெனக்கெடவும் மாட்டேன்… கத்ரினா அதிரடி

  • January 9, 2024
  • 0 Comments

விஜய்சேதுபதி நடிக்கும் பாலிவுட் படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இந்த படத்தில் அவரது ஜோடியாக பாலிவுட் முன்னணி நடிகை கத்ரினா கைப் நடித்துள்ளார். இவர்கள் தவிர தமிழ் கலைஞர்களாக ராதிகா சரத்குமார், சண்முகராஜன், ராஜேஷ், காயத்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கி உள்ளார். இந்த படத்தின் புரமோசன் நிகழ்வுக்காக சென்னை வந்திருந்த கத்ரினா கைப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: சென்னை எனக்கு புதிய நகரமல்ல எனது […]

இலங்கை

கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறப்பு!

  • January 9, 2024
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் சின்தக சுரவீர தெரிவித்தார். கன்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதினால் பத்து வான் கதவுகளையும் இன்று (09.01) ஒரு அடி உயரத்தில் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் வெருகல் பிரதேசத்தில் சில வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதுடன், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு ட்பட்ட மாஞ்சோலைச்சேனை, மாஞ்சோலை மற்றும் அண்ணன் நகர் […]