இன மத நல்லிணக்கம் எனும் பேர்வையில் குருந்தூர் மலையில் இரகசிய கலந்துரையாடல்
குருந்தூர்மலை ஆலய நிர்வாகத்தினருக்கும் , பௌத்தமத குருமார்களுக்கும் இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றுமுன்தினம் குருந்தூர்மலை பகுதியில் இடம் பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குந்தூர்மலை பகுதியில் பெரும்பான்மை இனத்தவர் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் விகாரையினை புனரமைத்திருக்கின்றனர். இதனால் அப்பகுதி தமிழ் மக்களுக்கும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் இடையே முறுகல் நிலை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் இனமத நல்லிணக்கத்தினை மேற்கொள்ள என வடகிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக ஜனாதிபதியால் புதிதாக […]













