இலங்கை

களுத்துறையில் தாயுடன் தகாத தொடர்பை பேணியவரால் சிறுமிகள் இருவருக்கு நேர்ந்த கதி!

களுத்துறையில் தாயுடன் தொடர்பை பேணிய நபரால் இரு மகள்மார் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.9 மற்றும் 13 வயதுடைய பெண் பிள்ளைகளே இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவராவார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தந்தை 4 வருடங்களுக்கு முன்னர் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.இந்நிலையில், இரு சிறுமிகளின் தாய் வேரொரு நபருடன் தொடர்பை பேணி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் சுகயீனம் காரணமாக களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இரு சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.தாயுடன் தொடர்பை பேணிய நபரே இரு சிறுமிகளையும் அவர்களின் வீட்டில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சந்தேக நபர் பயாகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்