இலங்கை

இலங்கை – லிட்ரோ நிறுவனத்தின் பங்குகளை விறப்னை செய்யும் அரசாங்கம்!

  • January 17, 2024
  • 0 Comments

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா (பிரைவேட்) கம்பனியின் முழு பங்கு அல்லது பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்வதற்கான வட்டியை அழைக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கை அரசாங்கம் Litro Gas Lanka Limited இல் 99.936% பங்குகளையும் Litro Gas Terminal Lanka (Pvt) Company இல் 100% பங்குகளையும் கொண்டுள்ளது.

பொழுதுபோக்கு

தனுஷை ஓரம்கட்டிய சிவகார்த்திகேயன்.. அயலான் – கேப்டன் மில்லர் 5வது நாள் வசூல் நிலவரம்

  • January 17, 2024
  • 0 Comments

சிவகார்த்திகேயன் இப்போது சினிமாவில் முக்கிய இடத்தில் இருந்தாலும் ஆரம்பத்தில் அவரை வளர்த்து விட்டது தனுஷ் தான். தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சிவகார்த்திகேயன் படங்களை தயாரித்தார். இந்த சூழலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் படங்கள் மோதிக்கொண்டது. பங்காளி சண்டையாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இந்த பொங்கல் ரேஸில் யார் வின்னர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இப்போது வாத்தியையே ஓரம்கட்டி சிவகார்த்திகேயன் வசூலில் பட்டையை கிளப்பி […]

உலகம்

கணிசமானவர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள் நிறுவனம்!

  • January 17, 2024
  • 0 Comments

கூகுள் நிறுவனம் அதன் உலகளாவிய விளம்பரக் குழுவில் இருந்து கணிசமானவர்களை பதவிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. வேலை குறைப்பின் விளைவாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான மேடையில் விளம்பரம் செய்வதற்கு கூகுள் அதிக ஆதரவை வழங்க உத்தேசித்துள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. கூகுள் நிறுவனம் தனது விளம்பரம் உள்ளிட்ட பல துறைகளில் இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு ஆராய்ச்சியின் படி, அமெரிக்காவில் 80 சதவீத ஆன்லைன் வர்த்தக பரிவர்த்தனைகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் […]

பொழுதுபோக்கு

GOAT படத்திற்கு வந்த ஆபத்து… ஆசை வேணும் தான்.. அதுக்குனு இப்படியா?

  • January 17, 2024
  • 0 Comments

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாக்கி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டு இருந்தது. அதில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆகியோர் கையில் துப்பாக்கையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. மேலும் படத்தில் […]

இலங்கை

கடுவலை பிரதேசத்தில் நீராடச்சென்ற சிறுவனை இழுத்து சென்ற முதலை!

  • January 17, 2024
  • 0 Comments

நீராடச் சென்ற சிறுவன், முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக கடுவலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. நேற்று (16) மாலை கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த அந்தோனி மாவத்தையில் உள்ள ஓடையில் நீராடச் சென்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போயுள்ளவர், கடுவலை – வெலிவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 11 வயதான சிறுவன் என தெரியவந்துள்ளது. காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் கடற்படையின் சுழியோடி அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

உலகம்

நைஜீரியாவில் விபத்துக்குள்ளான படகு … 8 பேர் மரணம்; 100 பேர் மாயம்!

  • January 17, 2024
  • 0 Comments

நைஜீரியா நாட்டில் நடந்த படகு விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகில் அதிக பாரம் ஏற்றப்பட்டதால் இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள போர்கு மாவட்டத்தின் அருகில் உள்ள கெப்பி பகுதிக்குச் சென்ற படகு ஆற்றின் நடுவே மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவல் அறிந்ததும் தேசிய மீட்பு படைகள் அங்கே முகாமிட்டு மீட்பு பணியின் இறங்கியுள்ளன. இது குறித்துப் […]

ஆசியா

சீனாவில் பனிப்பொழிவால் ஏற்பட்டுள்ள பேராபத்து!

  • January 17, 2024
  • 0 Comments

வடக்கு சீனாவில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக அப்பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகளை அதிகாரிகள்  வெளியேற்றியுள்ளனர். பனிச்சரிவுகள் சாலைகளை அடைத்ததால், சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டே மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுற்றுலாப் பயணிகளும் குடியிருப்பாளர்களும் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் ஹெலிகாப்படரின் உதவியுடன் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பனிச்சரிவுகள் 350 கிலோமீட்டர் (220 மைல்) சாலைகளை பாதித்ததாக உள்ளூர் நெடுஞ்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீனாவில் சமீபகாலமாக பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதுவரை குறைந்தபட்சமாக […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் கொவிட் தடுப்பூசியால் ஏற்பட்டுள்ள நன்மை!

  • January 17, 2024
  • 0 Comments

கொவிட் தடுப்பூசிகளால் ஐரோப்பாவில் 1.4 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் 53 நாடுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், 277.7 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் -19 வழக்குகளும், 22 மில்லியன் இறப்புகளும் இதுவரை பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பாவில் வாழும் 1.4 மில்லியன் மக்கள் குறிப்பாக வயதானவர்கள் பலர் கொவிட் -19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதாகவும், தடுப்பூசியை […]

இலங்கை

இலங்கை : வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் கடுமையாகும் சட்ட நடவடிக்கை!

  • January 17, 2024
  • 0 Comments

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கோரி மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சமீப காலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பல மோசடி சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அவ்வாறு போலி முகவர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு மீள பெற முடியாதவர்கள் போதியளவு ஆதரமின்மையால் பொலிஸாரை நாட முடியாத நிலையும் உள்ளது. இதனால் அவர்கள் செலுத்திய பெருந்தொகை பணத்தை இழக்க நேரிடுகின்றனர். குறிப்பாக வெளிநாட்டு […]

பொழுதுபோக்கு

கடுமையான போட்டிகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் “மிஷன்”

  • January 17, 2024
  • 0 Comments

அருண் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர். ஆக்ஷன் ஹீரோ என ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கும் அருண் விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே. இப்படத்தை இயக்குனர் விஜய் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் மற்றும் இயல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அயலான் மற்றும் கேப்டன் மில்லர் என இரு படங்களுக்கு […]