இலங்கை

யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் மாயமான 50 கிலோ கஞ்சா

  • September 12, 2023
  • 0 Comments

யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்று பொருளான 50 கிலோ கஞ்சா மாயமாகி உள்ளது என தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு சான்று பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பகுதியில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் 50 கிலோ கஞ்சா களவாடப்பட்டுள்ளது அல்லது மாயமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சான்று பொருளே […]

பொழுதுபோக்கு

“மறக்குமா நெஞ்சம்” நடந்தது என்ன? ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்துள்ள வேண்டுகோள்

  • September 12, 2023
  • 0 Comments

இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றவர்கள், இ-மெயில் முகவரிக்கு டிக்கெட் நகலை அனுப்புமாறு ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மறக்குமா நெஞ்சம் என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 25,000 பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமன்றி, அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான கூட்டம் […]

வட அமெரிக்கா

மகனுக்கு விசித்திர பெயர் வைத்த எலான் மஸ்க்!

  • September 12, 2023
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் தமக்கும் முன்னாள் காதலி கிரைம்ஸுக்கும் மூன்றாவது பிள்ளை பிறந்திருப்பதாக உறுதிசெய்திருக்கிறார். உடன்பிறந்தவர்களைப் போன்று அந்தப் பிள்ளைக்கும் விசித்திரமான பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அவர்களது மகனின் பெயர் ‘Tau Techno Mechanicus’ என தெரியவந்துள்ளது. இது குறித்து 52 வயது மஸ்க் X தளத்தில் பதிவிட்டிருந்தார். X சமூக ஊடகத்தின் நிறுவனர் இலோன் மஸ்க்கிற்கும் முன்னாள் காதலி கிரைம்ஸுக்கும் மொத்தம் 3 பிள்ளைகளாகும். அவர்களது மூன்று வயது மகன் ‘X’ என்றும் […]

ஐரோப்பா

ரஷ்யாவிற்கு தடை – பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

  • September 12, 2023
  • 0 Comments

2024ஆம் ஆண்டில் பிரான்ஸில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கு பெற ரஷ்யாவிற்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ஆக்ரமிப்பில் ரஷ்யா போர்க்குற்றம் நடாத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளிலும் மற்றைய ஏனைய விளயாட்டுகளிலும் ரஷ்யாவின் கொடி பறக்கக் கூடாது எனவும் எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இலங்கை

இலங்கையில் தொழிற்சங்க நடவடிக்கை – ரயிலின் மேல் ஏறி பயணித்தவர் மரணம்

  • September 12, 2023
  • 0 Comments

ஹொரப்பே பகுதியில் ரயிலின் மேல் ஏறி பயணித்த பயணியொருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் மேல் ஏறி வந்த பயணியொருவர் ஹொரப்பே பகுதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ரயில் சாரதிகள் சிலர் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல ரயில் சேவைகளை இரத்து செய்ய நேரிடும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பொழுதுபோக்கு

‘மூன்றாம் கண்’ முதல் தோற்றம் வெளியானது…

  • September 12, 2023
  • 0 Comments

விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள மூன்றாம் கண் படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சசோ கணேசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மூன்றாம் கண்’. இந்த படத்தில் விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே. சசிகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அஜீஸ் இசை அமைக்கிறார். […]

வாழ்வியல்

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை! அவதானம்

  • September 12, 2023
  • 0 Comments

உணவை சாப்பிட்ட உடனேயே, சில கெட்ட பழக்கங்களை நம்மை அறியாமல் கடைபிடிக்கிறோம். இதன் காரணமாக நமது எடை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நமது செரிமான அமைப்பையும் மோசமாக பாதிக்கிறது. உணவுக்குப் பிறகு சில பழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலம், நீங்கள் சிறந்த செரிமானத்தைப் பெறலாம் மற்றும் உடல் பருமன் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம். உணவு உண்டவுடன் ஒரு கோப்பை தேநீர் அல்லது காபி அருந்த விரும்புவவது இயற்கை. நம்மில் பலர் இதை செய்ய நினைக்கிறோம், ஆனால் இது உங்கள் வயிற்றுக்கு மிகவும் […]

கருத்து & பகுப்பாய்வு

கிழக்கின் கொலைக்களம்..!!!

  • September 12, 2023
  • 0 Comments

பைபிளில் ஒருவாக்கியம் இருக்கிறதாக குறிப்பிடுவார்கள் வாள் எடுத்தவன் வாளாலே சாவான். சிலப்பதிகாரம் கூறுவது ஊழ்வினை தானுற்றக்கடை வழி உறுத்தும் பட்டினத்தார் தன்வினை தன்னைச்சுடும். இந்த வாக்கியங்களின் அதிர்வுதான் முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திர காந்தனுக்கு வந்திருக்கிறதோ என்னவோ ! பிள்ளையானை முதலமைச்சர் (2008 – 2012) ஆக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டாராம். “நான் குழந்தைப்புலியை முதலமைச்சர் ஆக்கியிருக்கிறேன்” தற்போது சனல் 4 காணொளியோடு பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் நாலா […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களுக்கு விசேட அறிவிப்பு

  • September 12, 2023
  • 0 Comments

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் அதிக வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வியாழன் மற்றும் சனிக்கிழமைக்கு இடையில் நியூ சவுத் வேல்ஸ், தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் விக்டோரியாவில் மீண்டும் வெப்பமான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சிட்னியில் 27 டிகிரி செல்சியஸ், மெல்போர்னில் 26 டிகிரி செல்சியஸ், கான்பெராவில் 25 டிகிரி செல்சியஸ் மற்றும் அடிலெய்டில் 24 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும். அந்த […]

இலங்கை

இலங்கையில் இன்று பல ரயில் பயணங்கள் ரத்து! கடும் நெருக்கடியில் பயணிகள்

  • September 12, 2023
  • 0 Comments

இலங்கையில் 20 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பல ரயில் நிலையங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவித்தார். பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலை பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிலாபம், கணேவத்தை, அளுத்கமவில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பல ரயில்கள் […]