திருகோணமலையில் போதை பொருளுடன் சிக்கிய நபர்!
திருகோணமலை- கந்தளாய் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணிகத்தின் திருகோணமலை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபரை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 5 கிரேம் 700 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கந்தளாய்- முதலாம் கொலனியில் வசித்து வரும் அப்துல்லாஹ் முகமட் ரிஹான் […]













